திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஷோகேசில் வைக்கப்பட்டு இருந்த தங்க நகை மாயம்.. திருடன் என சிசிடிவி காட்சிகளை பார்த்தால்.. ட்விஸ்ட்!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் நகைக்கடை ஒன்றின் ஷோகேசில் வைக்கப்பட்டு இருந்த தங்க நெக்லஸ் மாயமானது. நள்ளிரவு யாரேனும் திருடிவிட்டார்களோ என எண்ணி நகைக்கடை நிர்வாகம் சிசிடிவி காட்சிகளை பார்த்துள்ளது. இந்தக் காட்சியில் நகையை தூக்கியவரை கண்டுபிடித்துவிட்டார்கள்.. ஆனால், திருடிய நபரை பார்த்துதான் ஊழியர்கள் திகைத்து இருக்கிறார்கள்.

நகைக்கடையில் பல்வேறு நூதன வழிகளில் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. கடையின் சுவற்றை துளை போட்டு கொள்ளை அடிப்பது.. நள்ளிரவில் காவலாளியை தாக்கி கடைக்குள் புகுந்து கொள்ளையடிப்பது என பல்வேறு முறைகளில் கொள்ளை சம்பவங்கள் நடப்பதுண்டு.

ஏன் சில சமயம் வாடிக்கையாளர்கள் போல வந்து நகைகளின் டிசைன்களை பார்ப்பதாக சொல்லிவிட்டு கடை ஊழியர் அசந்த நேரத்தில் கொள்ளையடிக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

உக்ரைன் போர்.. ‛டாட்டூ’வால் ரஷ்யாவை சாடிய இளம்பெண்.. புதின் அரசின் பயங்கர தண்டனையை பாருங்க.. யப்பா உக்ரைன் போர்.. ‛டாட்டூ’வால் ரஷ்யாவை சாடிய இளம்பெண்.. புதின் அரசின் பயங்கர தண்டனையை பாருங்க.. யப்பா

சிசிடிவி கேமராக்கள்

சிசிடிவி கேமராக்கள்

கொள்ளையர்களை பிடிக்க தற்போது அனைத்து நகைக்கடைகளும் சிசிடிவி கேமராக்களையும் பொருத்தி கண்காணிக்கின்றன. கொள்ளையோ கொள்ளை முயற்சி நடைபெற்றாலோ குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்க பெரும் ஆயுதமாக இருப்பதாக இந்த சிசிடிவி கேமராக்கள் தான். இந்தக் காட்சிகளை அடிப்படையாக வைத்து குற்றவாளிகளை போலீசாரும் எளிதில் அடையாளம் கண்டு அவர்களை கைது செய்ய முடியும்.

நகைக்கடையில் கொள்ளை

நகைக்கடையில் கொள்ளை

அதெல்லாம்.... இருக்கட்டும் இங்கே விஷயத்திற்கு வருவோம்.. கேரளா மாநிலத்தில் இதேபோன்று நகைக்கடையில் ஒரு கொள்ளை நடைபெற்றுள்ளது. ஆனால், இங்கு கொள்ளையடித்து யார் என்பதில்தான் ட்விஸ்ட்டே.. நகைக்கடையில் நகை காணமால் போனதில் கூட ஒரு சுவாரசியம் நடந்துள்ளது. அது குறித்த விவரத்தை இங்கே காணலாம்.

சிசிடிவி காட்சிகள் ஆய்வு

சிசிடிவி காட்சிகள் ஆய்வு

கேரள மநிலம் காசர்கோடு பகுதியில் நகைக்கடை ஒன்று உள்ளது. இந்த நகைக்கடையில் வைக்கப்பட்டு இருந்த தங்க நெக்லஸ் ஒன்று திடீரென மாயமனாது. விற்பனைக்காக ஷோகேசில் வெளிப்படையாக வைக்கப்பட்டு இருந்த நெக்லஸ் மாயமானதால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் கடை உரிமையாளரிடம் தெரிவித்தனர். திருடர்கள் தான் தங்கள் கைவரிசையை காட்டி விட்டார்கள் என்று எண்ணிய கடை நிர்வாகம்.. சிசிடிவி காட்சிகளை பார்த்து யார் என அடையாளம் கண்டு விட வேண்டும் என்று வீடியோ பதிவுகளை ஓட விட்டு இருக்கிறார்கள்.

எலி தூக்கிச்செல்லும் வீடியோ

எலி தூக்கிச்செல்லும் வீடியோ

நகைகளை அலேக்காக தூக்கியது எலி என்பது தெரியவந்துள்ளது. இரவு கடைகளை பூட்டிய பிறகு சீலிங் வழியாக உள்ளே புகுந்த எலி, ஷோகேசில் வைக்கப்பட்டு இருந்த தங்க நெக்லசை நைசாக கடித்து தூக்கியுள்ளது. நகை கிடைத்ததும் வந்த வழியாகவே எலி ஓடிவிட்டது. இதைப்பார்த்த கடை ஊழியர்கள்.. திகைத்து போய்..என்ன செய்வது என்று ஒருவரை ஒருவர் பார்த்து விழித்து இருக்கின்றனர். தங்க நெக்லசை எலி தூக்கிக் கொண்டு காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

நெட்டிசன்கள் கமெண்ட்

நெட்டிசன்கள் கமெண்ட்

தங்கம் விற்கும் விலைக்கு ஒரு எலி செய்த வினையால் பல ஆயிரங்களை பறிகொடுத்து விட்டதை எண்ணி கடை ஓனரும் புலம்பாமல் இருந்து இருக்க முடியாது. இணையத்தில் பரவி வரும் இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் பலரும் சிசிடிவி கேமராக்கள் வைத்து எத்தனை பாதுகாப்பு வசதிகள் செய்து இருந்தாலும் எலி புகும் அளவுக்கு இருந்த பாதையை பார்க்கமால் அஜாக்கிரதையாக இருந்து கோட்டை விட்டதே.. இதற்கு காரணம் என்று நெட்டிசன்கள் கமெண்டுகளை பறக்க விட்டு வருகின்றனர்.

English summary
A gold necklace kept in the showcase of a jewelery store in Kerala went missing. Suspecting that someone had stolen it in the middle of the night, the management of the jewelery store has seen the CCTV footage. In this scene, they have found the person who lifted the jewel..but the staff are stunned to see the person who stole it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X