"உனக்கு கால் வலிக்காதா என்று கேட்டார்கள்".. திருப்பூரில் உருக்கமாக பேசிய முதல்வர்.. அந்த பதில்தான்!
திருவனந்தபுரம்: திருப்பூரில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் மக்கள் முன்னிலையில் உருக்கமாக உரையாற்றினார்.
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்குவதற்காகவும், மக்களுக்கு நேரடியாக அரசு திட்டங்களை வழங்குவதற்காகவும் முதல்வர் ஸ்டாலின் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூருக்கு இரண்டு நாள் பயணமாக சென்று இருக்கிறார். இன்று காலையில் கோவையில் நடந்த நிகழ்வில் முதல்வர் வ.உ.சி மைதானத்தில் ரூ.441.76 கோடி மதிப்பில் 23,534 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
4 இருளர் பெண்களுக்கு போலீஸாரால் நடந்த பாலியல் வன்கொடுமை, ராமதாஸ் வேதனை
அதேபோல் கோவையில் ரூ.596 கோடி மதிப்பில் 67 புதிய பணிகளுக்கு முதல்வர் இன்று அடிக்கல் நாட்டினார்.

திருப்பூர்
கோவையில் இருந்து திருப்பூர் சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு அரசு விழாவில் கலந்து கொண்டார். மக்கள் முன் பேசிய அவர் 20 திட்ட பணிகளை திறந்து வைத்தார். 4335 பயனாளிகளுக்கு 55 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். நேரடியாக மக்களிடம் திட்டம் சேரும் வகையில் பயனாளிகளை அளித்து முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முதல்வர் ஸ்டாலின்
இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், திருப்பூர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசின் நலத்திட்டங்கள் நேரடியாக மக்களுக்கு சென்று சேர வேண்டும். ஆட்சிக்கு வந்த 6 மாதங்களிலேயே நாம் நிறைய பணிகளை செய்து இருக்கிறோம். பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறோம். பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்.

நான்கரை ஆண்டுகள்
இந்த குறுகிய காலத்தில் இவ்வளவு பணிகளை செய்திருக்கிறோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நமக்கு இன்னும் நான்கரை ஆண்டுகள் உள்ளன. நாம் இன்னும் எவ்வளவு பணிகளை செய்ய உள்ளோம் என்பதை மக்களாகிய நீங்களே புரிந்து கொள்ள வேண்டும். நான் நம்பர் 1 முதலமைச்சர் ஆகவே வேண்டும் என்று விருப்பம் கிடையாது. ஸ்டாலின் நம்பர் 1 முதல்வர் என்று சொல்வதில் எனக்கு விருப்பம் இல்லை.

நம்பர் 1 மாநிலம்
நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு என்று சொல்லும் நிலையை நாம் உருவாக்க வேண்டும். அதுதான் என்னுடைய ஒரே விருப்பம் இது போன்ற நிகழ்வுகள் காலை 6 மணிக்கு தொடங்கினால் மாலை, இரவு வரை கூட நடக்கும். என் கூடவே இருக்கும் அமைச்சர்கள் இதனால் கடுமையாக டயர்ட் ஆவார்கள். காலையில் இருந்து நின்று கொண்டே இருக்கும் அமைச்சர்கள் எல்லாம் கால்வலி வந்து டயர்ட் ஆகி பிரேக் எடுத்துட்டு வருவாங்க. ஆனால் நான் அப்படி எல்லாம் பிரேக் எடுக்க மாட்டேன்.

மேடையில்தான் நிற்பேன்.
நான் அப்படி இல்லை. கடைசி வரை நான் மேடையில்தான் நிற்பேன். 5000 பேருக்கும் நிதியுதவி கொடுத்து முடிக்கிற வரைக்கும் நான் மேடையில்தான் நிற்பேன். இதை நான் பெருமைக்காக சொல்லவில்லை. அரசின் உதவிகள் மக்கள் எல்லோருக்கும் சென்று சேர வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். 10 பேருக்கு கொடுத்துட்டு போய்விட்டால் மிச்சம் உள்ளவர்களுக்கு சமயங்களில் நிதி உதவி கிடைக்கமால் போகலாம்.

தாய்மார்கள் கேள்வி
அதனால்தான் நான் நின்று கடைசி வரை எல்லோருக்கும் கொடுத்துக்கொண்டே இருக்கிறேன். பல தாய்மார்கள் என்னிடம் உரிமையோடு இதைப்பற்றி கேட்டு இருக்கிறார்கள். உனக்கு கால் வலிக்காதா? என்று கேட்டார்கள். காலை 10 மணியில் இருந்து நிற்கிறாயே உனக்கு கால் வலி இல்லையா? என்று கேட்டார்கள். நான் அவர்களிடம் அளித்த பதிலில் உங்கள் முகத்தை பார்த்தால் எல்லாம் மறந்துவிடும்.

அண்ணா மறுமலர்ச்சி திட்டம்
அதில் உள்ள மகிழ்ச்சியை பார்த்தால் என் வலி எல்லாம் மறைந்துவிடும் என்று கூறினேன். எனக்கு அது போதும். நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் என்று திமுக அரசின் சாதனைகளை, திட்டங்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம், என்று திருப்பூரில் நடந்த இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார். நிகழ்ச்சிக்கு வந்த தாய்மார்களிடம் முதல்வர் ஸ்டாலின் கால் வலி குறித்து அளித்த இந்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.