உங்க டிவிக்கு புது “ஓனர்” வந்துட்டாரு - என்டிடிவி செய்தியாளரிடம் ராகுல் பதில்.. அதானி மீது அட்டாக்
கேரளா: ஒற்றுமை யாத்திரையின்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தன்னிடம் கேள்வி எழுப்பிய என்டிடிவி செய்தியாளிடம் உங்களுக்கு புதிய உரிமையாளர் கிடைத்துவிட்டார் என ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை கடந்த 7 ஆம் தேதி தொடங்கினார் ராகுல் காந்தி.
கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் நடக்கத் தொடங்கிய ராகுல் காந்தி 11 ஆம் தேதி கேரள எல்லையில் உள்ள முலகுமூடு கிராமத்திற்கு வந்தடைந்தார். 14 வது நாளான இன்று கேரளாவில் நடை பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

கேரளாவில் யாத்திரை
இந்த நிலையில் கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டு இருக்கும் ராகுல் காந்தியுடன் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்டு வருகிறார்கள். அவரது நடைபயணத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று யாத்திரையின்போது ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.

என்டிடிவி செய்தியாளர்
அப்போது என்டிடிவி ஆங்கில தொலைக்காட்சி செய்தியாளர் ஒரு கேள்வி எழுப்பினார். அவரிடம் ராகுல் காந்தி, "உங்களுக்கு புதிய உரிமையாளர் கிடைத்துவிட்டார் என்று நினைக்கிறேன். பத்திரிகைகளின் உரிமையாளர் யார் என்பது முக்கியமல்ல. ஆனால், உரிமையாளர்கள்தான் பத்திரிகை என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள்." என்றார்.

அதானி
30 ஆண்டுகளாக செய்தி ஊடகத் துறையில் இயங்கி வரும் முன்னணி ஆங்கில தொலைக்காட்சியாக என்டிடிவி இருந்து வருகிறது. என்டிடிவி 24x7, என்டிடிவி இந்தியா, என்டிடிவி பிராஃபிட் ஆகிய 3 சேனல்கள் இயங்கி வருகின்றன. பிரனாய் ராய் அவரது மனைவி ராதிகா ராய் ஆகியோர் இந்த தொலைக்காட்சியை நடத்தி வரும் நிலையில் தொழிலதிபர் அதானி என்டிடிவியை வாங்கிவிட்டதாக தகவல் வெளியானது.

என்டிடிவி விளக்கம்
இதுகுறித்து என்டிடிவி அளித்துள்ள விளத்தில், தொலைக்காட்சி நிறுவனர்களின் ஒப்புதல் ஏதுமின்றி பங்குகள் மாற்றப்பட்டு இருக்கின்றன. விசிபிஎல் நிறுவனம் எங்களிடம் இதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. நாங்கள் எங்கள் இதயமான ஊடகத்துறையில் எதையும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். நாங்கள் பத்திரிகை துறைக்காக பெருமையுடன் நிற்போம். 61% பங்குகள் எங்கள் வசமே இருக்கிறது". என்று குறிப்பிட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications