போலீஸ் அதிகாரியை கன்னத்தில் அறைந்து தள்ளிவிட்ட சிஎஸ்கே ரசிகை.. ஆவேசமாக நடந்து கொண்டது ஏன்?
சென்னை: அஹமதாபாத்தில் ஐபிஎல் இறுதி போட்டியை காண சென்று சிஎஸ்கே பெண் ரசிகை ஒருவர் தனது அருகில் அமர்ந்த காவலரை கண்ணத்தில் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி அகமதாபத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. நேற்று அகமதாபாத்தில் இடைவிடாமல் பெய்த மழை காரணமாக போட்டியின் ஓவர்கள் குறைக்கப்பட்டாவது நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பலத்த மழை காரணமாக ஆடுகளத்தின் தன்மை மோசமாக இருந்த காரணத்தால், சிஎஸ்கே மற்றும் குஜராத் அணி கேப்டன்களிடம் கலந்து ஆலோசித்த ஐபிஎல் அணி நிர்வாகம் இறுதிப்போட்டியை நாளை அதாவது இன்று நடைபெறும் என்று ஒத்திவைத்தது. இதன் படிஇன்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதப்போகின்றன.
முன்னதாக நேற்று மழை காரணமாக போட்டியை காண முடியாமல் மைதானத்திலேயே ரசிகர்கள் காத்துக்கிடந்தனர். மழை விடுவதாகவும் இல்லை. மழையால் மைதானம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. மைதானத்தில் இருந்து ரசிகர்கள் போட்டியை காண முடியாததால் சோகத்துடன் வெளியேறினர்.

பலரும் ஐபிஎல் போட்டி முடிந்த உடன் சொந்த ஊருக்கு செல்ல டிக்கெட் போட்டிருந்தனர். ஆனால் போட்டி இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள காரணத்தால் பலரும் நொந்து போய் உள்ளனர். பல ரசிகர்கள் திடீரென போட்டி ரத்து செய்யப்பட்டதால் அஹமதாபாத் ரயில் நிலையத்திலேயே இரவு தூங்கினார்கள். இன்று அஹமதாபாத் ஸ்டேடியத்தின் வானிலை தெளிவாக இருந்தால் போட்டி நிச்சயம் நடைபெறும்.
Csk fans slapped and hit this male officer that was shameful#CSKvGT #IPLFinals pic.twitter.com/7cdLm3hmTN
— Priyanshu (@PriyanshuVK18K) May 28, 2023
இது ஒருபுறம் எனில் அஹமதாபாத்தில் ஐபிஎல் இறுதி போட்டியை காண சென்று சிஎஸ்கே பெண் ரசிகை ஒருவர் தனது அருகில் அமர்ந்த காவலரை கண்ணத்தில் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ்காரர் ஒருவர் பெண் ரசிகையின் அருகில் அமர்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் ரசிகை கோபத்தில் போலீஸ்காரை கண்ணத்தில் அறைந்ததுடன் அவரை தள்ளிவிடுகிறார். இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உங்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications