இந்தியாவில் சூரியன் முன்னதாகவே உதிக்கும் கிராமம்.. இயற்கை பேரழகி.. அதிகாலை 4:00 மணிக்கே அதிசயம்
இட்டாநகர்: இந்தியாவில் சூரியன் முன்னதாகவே உதிக்கும் டோங்க் கிராமம் பற்றி சுவராஸ்யமான தகவல்களை பார்க்கலாம். இங்கு அதிகாலை 4 மணி முதல் 5.30க்குள் உதிக்கும்.. இங்கு சூரிய உதயத்தை பார்க்க நள்ளிரவு 2:00 அல்லது 3:00 மணிக்கே மலையேற வேண்டும்... அருணாச்சல பிரதேசத்தின் அற்புதமான கிராமத்தில் வெறும் 20 பேருக்குள் தான் இருப்பார்கள். இது இந்தியா சீனா மியான்மர் ஆகிய மூன்று நாடுகளின் எல்லையில் உள்ள கிராமம் ஆகும்..
இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள டோங்க் கிராமம், நாட்டின் கிழக்கு முனையில் அமைந்துள்ளது.இதுதான், நாட்டின் "முதல் சூரிய உதயம்" நிகழும் இடமாகப் புகழ் பெற்றது. இது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.

இந்தியாவில் டோங்க் கிராமத்தில் ஏன் முதலில் சூரியன் உதிக்கிறது
இந்தியாவின் கிழக்குக் கோடியில் (Longitude எல்லைக்கோடு) அமைந்துள்ளதால், மற்ற மாநிலங்களில் மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போதே, இங்கு அதிகாலை 4:00 மணி முதல் 5:30 மணிக்குள் (பருவத்தைப் பொறுத்து) சூரியன் உதித்துவிடுகிறது
புவியியல் அமைப்பு
இந்த டோங்க் கிராமம் எங்கே உள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில், லோஹித் ஆற்றின் கரையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,240 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.அதாவது 4,068 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது இந்தியா, சீனா மற்றும் மியான்மர் ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் பகுதிக்கு அருகில் உள்ளது.
மக்கள் தொகை: 2011 கணக்கெடுப்பின்படி, இங்கு மிகக்குறைந்த வீடுகளே இருந்தன. இங்கு வாழும் மக்கள் 'மேயோர்' (Meyor) பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள்.
மில்லினியம் சூரிய உதயம் (2000)
1999-ஆம் ஆண்டில்தான் இந்தக் கிராமத்தின் புவியியல் முக்கியத்துவம் கண்டறியப்பட்டது. 21-ஆம் நூற்றாண்டின் முதல் சூரிய உதயத்தைக் காண (ஜனவரி 1, 2000) உலகம் முழுவதிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் இங்கு குவிந்தனர். அதன் பிறகு இது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக மாறியது.
சுற்றுலா மற்றும் மலையேற்றம்
இங்கிருந்து சூரிய உதயத்தைப் பார்க்க வேண்டும் என்றால், நள்ளிரவு 2:00 அல்லது 3:00 மணிக்கே மலையேற்றத்தைத் தொடங்க வேண்டும். சுமார் 90 நிமிடங்கள் முதல் 2 மணிநேர மலையேற்றத்திற்குப் பிறகு 'வியூ பாயிண்ட்'டை அடையலாம். டோங்க் கிராமத்தில் தற்போது பகலில் 10°C முதல் 18°C வரை இருக்கும். ஆனால் இரவில் 2°C முதல் 5°C வரை குறைய வாய்ப்பு இருக்கிறது. லேசான பனிமூட்டம் மற்றும் இதமான குளிர் இருக்கும். சூரிய உதயத்தைப் பார்க்கச் செல்பவர்களுக்கு இது ஒரு சவாலான அதே சமயம் அழகான அனுபவமாக இருக்கும்.
(ஏப்ரல் - ஜூன்) கோடைகாலத்தில் செல்வது மிகச்சிறந்த அனுபவம் தரும். ஏனெனில் வெப்பநிலை: 15°C முதல் 25°C வரை இருக்கும். கிளைமேட் மிகவும் இதமாக இருக்கும். அடர்ந்த பச்சை பசேல் என்ற காடுகளையும், லோஹித் ஆற்றின் தெளிவான நீரையும் ரசித்தபடி டிரெக்கிங் செல்வது அலாதியான அனுபவமாக இருக்கும்.
ஆனால் ஜூலை - செப்டம்பர் வரை மழைக்காலம் என்பதால், அப்போது அங்கு செல்வது ஆபத்தானது. அருணாச்சலப் பிரதேசம் அதிக மழைப்பொழிவு பெறும் பகுதி என்று அனைவருக்குமே தெரியும். எனவே கனமழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்படும் வாய்ப்பு மிக அதிகம். மேகமூட்டம் அதிகமாக இருக்கும், நீங்கள் எதிர்பார்க்கும் அந்த "முதல் சூரிய உதயத்தை" பார்ப்பது கடினமாகும். அக்டோபர் - ஜனவரி வரை வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே செல்லும்.
எப்படி செல்வது?
அஸ்ஸாமின் திப்ருகார் அல்லது தின்சுகியா நகரங்களிலிருந்து சாலை வழியாகத் தேசு மற்றும் வாலோங் ஆகிய கிராமங்களை கடந்து டோங்க் கிராமத்தை அடையலாம். முக்கியமான விஷயத்தை மறக்கக்கூடாது.. அருணாச்சலப் பிரதேசம் செல்ல இந்தியக் குடிமக்களுக்கு ஐஎல்பி அனுமதிச் சீட்டு கட்டாயம் தேவை. அதற்கு விண்ணப்பித்து பெற்றுக்கொண்டுதான் பயணிக்க முடியும்.
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications