மோகன்லாலின் ஊட்டி பங்களாவில் சுற்றுலா பயணிகள் தங்க ஒரு நாளைக்கு இவ்வளவா? வாயை பிளக்க வைக்கும் வாடகை
ஊட்டி: இந்தியாவில் உள்ள புகழ் பெற்ற நடிகர், நடிகைகளுக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சொகுசு பங்களாக்கள் இருக்கிறது. ஒரு சிலருக்கு ஓட்டல்கள் கூட இருக்கிறது. நடிகர், நடிகைகள் வந்தால் நட்சத்திர ஓட்டலில் தங்குவதை விட, தாங்கள் வாங்கி போட்டுள்ள பங்களாவில் தங்குவதையே விரும்புகிறார்கள். அந்த வகையில் மலையாளத்தில் புகழ் பெற்ற நடிகரான மோகன்லாலுக்கு ஊட்டியில் பங்களா இருக்கிறது. அங்கு தற்போது சுற்றுலா பயணிகளையும் தங்க அனுமதிக்கிறார்கள். ஒரு நாள் வாடகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி என்பது இந்தியாவின் புகழ் பெற்ற கோடைவாசல் தலம் ஆகும். ஏன் இந்தியாவில் மட்டுல்ல, சர்வதேச அளவில் புகழ் பெற்ற தென்னிந்தியாவின் முக்கியமான சுற்றுலா தலம் ஆகும். ஊட்டியில் ஆண்டு முழுவதும் கிளைமேட் மிக அருமையாக இருக்கும்.

குளுகுளுவென கால நிலையும், பசுமையான தேயிலை தோட்டங்களும், அற்புதமான மலை ரயிலும், மனத்திற்கு உற்சாகம் தரும் பல்வேறு பசுமை பள்ளத்தாக்குகளும், பூங்காக்களும், விளையாட்டு திடல்களும், மலையில் மயக்கத்தை தரும் உயர்தரமான நட்சத்திர ஓட்டல்களும், சுண்டி இழுக்கும் படகு சவாரிகளும், சாகச பிரியர்களுக்கு டிரக்கிங் பாதைகளும், அருவிகளும் நிறைந்த பகுதியாக இருக்கிறது.
ஊட்டி சுற்றுலா
இயற்கை அள்ளி அள்ளி வழங்கி உள்ள கொடையை கொண்ட ஊட்டி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய நகரமாகும். வெள்ளைக்கார்கள் காலத்திலேயே புகழ் பெற்ற கோடைவாசல் தலம் என்பதால், பலரும் கோடைக்காலத்தில் வசிப்பதற்காக பங்களாக்களை வாங்கி போட்டுள்ளனர். தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்கள், நடிகைகளுக்கு ஊட்டியில் பங்களாக்கள் இருக்கிறது.
மோகன்லால் ஊட்டி பங்களா
கர்நாடகாவின் முன்னணி நடிகர்களுக்கும் பங்களாக்கள் இருக்கிறது. கேரளாவின் முன்னணி நடிகரான மோகன்லாலுக்குமே ஊட்டியில் பங்களா இருக்கிறது. ஊட்டி பங்களாவை பொதுவாக மோகன்லால் தனக்கும், குடும்பம் மற்றும் நண்பர்களின் சொந்தப் பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்தி வந்திருக்கிறார். இந்நிலையில் மோகன்லாலின் ஊட்டி பங்களா சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்குக் கிடைக்கிறது.

மோகன்லால் வீட்டு வாடகை
தனியார் சுற்றுலா அமைப்பு ஒன்று மோகன்லாலின் வீட்டை சுற்றுலாப் பயணிகள் ஒரு சில நாள்கள் தங்கிச் செல்ல வாடகைக்கு விடப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஊட்டியிலிருந்து வெறும் 15 நிமிடத்தில் இங்குச் செல்லலாம் என்றும், ஒரு நாள் வாடகை ரூ.37,000 என்றும், இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளதாகவும் தனியார் சுற்றுலா அமைப்பு அறிவித்துள்ளது.
மம்முட்டி வீடு சுற்றுலா
முன்னதாக நடிகர் மம்முட்டி, கேரளத்தில் உள்ள தனது வீட்டில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு வாய்ப்பை வழங்கி இருந்தார். மம்முட்டியின் வீட்டில் ஒருநாள் சுற்றுலா பயணிகளின் ஒரு குடும்பம் தங்குவதற்கு ரூ.75,000 வாடகையாக வசூலிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications