வெள்ள பாதிப்பு பகுதிகளில் இன்று முதல் ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு வழங்க ஏற்பாடு.. தலைமை செயலாளர்
சென்னை: தென் மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் 5 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என நேற்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறினார்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஆகிய 4 மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்தது. மேகங்கள் மொத்தமாக குவிந்து, விடமால் கொட்டிய மழையால் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது.

குறிப்பாக திருச்செந்தூர், தூத்துக்குடி, காயல்பட்டினம் போன்ற கடற்கரையோ பகுதிகளில் 40 முதல் 90 செமீ மழை பெய்துள்ளது. இதனால், 4 மாவட்டத்திலும் பெரும்பாலன இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதிக மழை பொழிவை எதிர்கொள்ளாத உடன்குடி, திசையன் விளை உள்ளிட்ட பகுதிகளிலும் கூட மிக மிக கனமழை பெய்துள்ளது. பல ஆண்டுகளாக வறண்டு கிடந்த ஆறுகளில் கூட தற்போது வெள்ள நீர் கட்டுக்கடங்காமல் பாய்ந்து வருகிறது.
போக்குவரத்திலும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையை அடியோடு புரட்டி போட்டுள்ளது கனமழை. நெல்லை மாநகரிலும் பெரும்பாலான இடங்கள் மிதக்கின்றன. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மீட்பு பணிகள் சவால் நிறைந்து காணப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் 5 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களி வெள்ளம் சூழ்ந்து மக்கள் அவதிப்படும் நிலையில், ஹெலிகாப்டர் மூலமாக உணவு வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக உணவு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களுக்கு வழங்க திட்டமிட்டப்படுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications