விட்டு விளாசப்போகுது.. 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அடுத்த ஒரு வாரம் வானிலை அதிரடிதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Chance of rain in 11 districts of Tamil Nadu today - Chennai MET

31.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

01.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

02.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 03.09.2023 முதல் 05.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
திருப்புவனம் (சிவகங்கை), சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்) தலா 15, புகையிலை நிலையம் (திண்டுக்கல்), வேடசந்தூர் (திண்டுக்கல்), நாமக்கல் தலா 11, காமாட்சிபுரம் (திண்டுக்கல்), பஞ்சப்பட்டி (கரூர்) தலா 10, சிறுகுடி (திருச்சி), எருமப்பட்டி (நாமக்கல்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), பெரியகுளம் (தேனி) தலா 8, கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சி), பெரம்பலூர், பொன்னமராவதி (புதுக்கோட்டை), வெட்டிகாடு (தஞ்சாவூர்), விருதுநகர், வால்பாறை PTO (கோயம்புத்தூர்), கும்பகோணம் (தஞ்சாவூர்), விராலிமலை (புதுக்கோட்டை), நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் தலா 7, முசிறி (திருச்சி), மூலனூர் (திருப்பூர்), சேந்தமங்கலம் (நாமக்கல்), நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி (நாமக்கல்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), பாலவீதி (கரூர்), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), தேவிமங்கலம் (திருச்சி), ஜெயம்கொண்டம் (அரியலூர்), நிலக்கோட்டை (திண்டுக்கல்) தலா 6, பெரியகுளம் PTO (தேனி), சித்தம்பட்டி (மதுரை), விரகனூர் அணை (மதுரை), கிளானிலை (புதுக்கோட்டை), கிருஷ்ணராயபுரம் (கரூர்), மருங்காபுரி (திருச்சி), பெரியகுளம் AWS (தேனி), சிறுகமணி KVK AWS (திருச்சி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), துவாக்குடி (திருச்சி), குப்பநத்தம் (கடலூர்), விருத்தாசலம் KVK AWS (கடலூர்), விருத்தாசலம் (கடலூர்), சமயபுரம் (திருச்சி), ஆனைப்பாளையம் (கரூர்), மாயனூர் (கரூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), கல்லந்திரி (மதுரை) தலா 5, கடம்பூர் (தூத்துக்குடி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), தென்பரநாடு (திருச்சி), பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), குளித்தலை (கரூர்), ஆலங்குடி (புதுக்கோட்டை), கோவில்பட்டி (திருச்சி), மணப்பாறை (திருச்சி), போளூர் (திருவண்ணாமலை), அரியலூர், கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), கொடைக்கானல் (திண்டுக்கல்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), உப்பர் அணை (திருப்பூர்), மோகனூர் (நாமக்கல்), தொழுதூர் (கடலூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), தழுதலை (பெரம்பலூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) தலா 4, சோத்துப்பாறை (தேனி), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), தல்லாகுளம் (மதுரை), கேசிஎஸ் மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), காங்கேயம் (திருப்பூர்), காரையூர் (புதுக்கோட்டை), குருங்குளம் (தஞ்சாவூர்), மலையூர் (புதுக்கோட்டை), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), கெட்டி (நீலகிரி), சந்தியூர் KVK AWS (சேலம்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), திருச்சி டவுன், திருச்சி விமான நிலையம், ஹரிசன் மலையாள லிமிடெட் (நீலகிரி), மஞ்சளார் (தேனி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), இடையபட்டி (மதுரை), பெருங்களூர் (புதுக்கோட்டை), எடப்பாடி (சேலம்), பெலாந்துறை (கடலூர்), ஹரூர் (தருமபுரி), திண்டுக்கல், சுத்தமல்லி அணை (அரியலூர்), வீரகனூர் (சேலம்), லால்பேட்டை (கடலூர்), திருவாரூர், பரமத்திவேலூர் (நாமக்கல்), வம்பன் KVK AWS (புதுக்கோட்டை), மதுரை விமான நிலையம், கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), வலங்கைமான் (திருவாரூர்), ஒர்த்தநாடு (தஞ்சாவூர்), பெரியபட்டி (மதுரை), திருச்சிராப்பள்ளி சந்திப்பு (திருச்சி), செங்கம் (திருவண்ணாமலை), கந்தர்வக்கோட்டை (புதுக்கோட்டை), சேத்தியாத்தோப்பு (கடலூர்) தலா 3, எறையூர் (பெரம்பலூர்), விழுப்புரம், துறையூர் (திருச்சி), ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), ஆத்தூர் (சேலம்), சோலையார் (கோயம்புத்தூர்), அரண்மனைப்புதூர் (தேனி), அரவக்குறிச்சி (கரூர்), அதனக்கோட்டை (புதுக்கோட்டை), திருப்பூர் தெற்கு, லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), அகரம் சீகூர் (பெரம்பலூர்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), தம்மம்பட்டி (சேலம்), பொன்னனியார் அணை (திருச்சி), திருநெல்வேலி,, புலிவலம் (திருச்சி), மைலம்பட்டி (கரூர்), செட்டிகுளம் (பெரம்பலூர்), தேவாலா (நீலகிரி), அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்), பொன்மலை (திருச்சி), மங்களபுரம் (நாமக்கல்), கோவிலங்குளம் (விருதுநகர்), தோகமலை (கரூர்), ஊத்துக்குளி (திருப்பூர்), நத்தம் (திண்டுக்கல்), கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி), ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), வைகை அணை (தேனி), புதுச்சத்திரம் (நாமக்கல்), கெத்தை (நீலகிரி), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), வி.களத்தூர் (பெரம்பலூர்), கோவில்பட்டி (தூத்துக்குடி), மதுரை வடக்கு, மதுரை நகரம், அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி), பார்வூட் (நீலகிரி), தத்தியெங்கர்பேட்டை (திருச்சி), பாரூர் (கிருஷ்ணகிரி), காரைக்குடி (சிவகங்கை), சென்னிமலை (ஈரோடு), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), லால்குடி (திருச்சி) தலா 2, கிருஷ்ணகிரி, எமரலாடு (நீலகிரி), கங்கவல்லி (சேலம்), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), இலுப்பூர் (புதுக்கோட்டை), பாலக்கோடு (தருமபுரி), தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), திருவையாறு (தஞ்சாவூர்), கள்ளக்குறிச்சி, திருமங்கலம் (மதுரை), உதகமண்டலம் (நீலகிரி), வல்லம் (தஞ்சாவூர்), மொடக்குறிச்சி (ஈரோடு), அவலாஞ்சி (நீலகிரி), தஞ்சாவூர், KRP அணை (கிருஷ்ணகிரி), தஞ்சாவூர் PTO, கூடலூர் பஜார் (நீலகிரி), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), கரூர், கோமுகி அணை (கள்ளக்குறிச்சி), அடவிநயினார்கோயில் அணை (தென்காசி), கல்லிக்குடி (மதுரை), சிதம்பரம் (கடலூர்), அருப்புக்கோட்டை (விருதுநகர்), நாலுமுக்கு (திருநெல்வேலி), கேசிஎஸ் மில்-2 கச்சிராயப்பாளையம் (கள்ளக்குறிச்சி), மேல் கூடலூர் (நீலகிரி), குந்தா பாலம் (நீலகிரி), சிதம்பரம் AWS ( கடலூர்), அண்ணாமலை நகர் (கடலூர்), சங்கரிதுர்கம் (சேலம்), கொடவாசல் (திருவாரூர்), அரிமளம் (புதுக்கோட்டை), டிஎஸ்எல் விருகாவூர் (கள்ளக்குறிச்சி), புது வேட்டக்குடி (பெரம்பலூர்), மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), அம்மாபேட்டை (ஈரோடு), கீரனூர் (புதுக்கோட்டை), கே.எம்.கோயில் (கடலூர்), குன்னூர் (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி), பூதலூர் (தஞ்சாவூர்), சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), ஆர்எஸ்எல்-2 நெமூர் (விழுப்புரம்), கொடுமுடி (ஈரோடு), ஆனைமடுவு அணை (சேலம்), கடவூர் (கரூர்), அன்னவாசல் (புதுக்கோட்டை), குன்னூர் PTO (நீலகிரி), நந்தியார் (திருச்சி) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக்கடல் பகுதிகளில் செப்டம்பர் 2ஆம் தேதி தெற்கு இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

03.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்." என்ற குறிப்பிடப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+