ஆஹா.. அடி வெளுக்கப்போகுது மழை! 14 மாவட்டங்களுக்கு வானிலை மையம் குட் நியூஸ் - வெப்பம் அழுத்தமே இல்ல
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது

13.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14.08.2023 முதல் 18.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
புதுக்கோட்டை 12, பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 11, தனியமங்கலம் (மதுரை), சிங்கம்புணரி (சிவகங்கை) தலா 10, அரண்மனைப்புதூர் (தேனி) 9, திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), சத்தியார் (மதுரை), ஆத்தூர் (மதுரை) தலா 8, ஆலங்குடி (புதுக்கோட்டை), Basl மணம்பூண்டி (விழுப்புரம்), புலிப்பட்டி (மதுரை), மேலூர் (மதுரை), லக்கூர் (கடலூர்), ஆண்டிபட்டி (தேனி), திண்டுக்கல் தலா 7, அதிராமபட்டினம் (தஞ்சாவூர்), சுத்தமல்லி அணை (அரியலூர்), பெலாந்துறை (கடலூர்), திண்டிவனம் (விழுப்புரம்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), தழுதலை (பெரம்பலூர்), சிவகாசி (விருதுநகர்), நத்தம் (திண்டுக்கல்), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), செட்டிகுளம் (பெரம்பலூர்), வீரகனூர் (சேலம்), வேடசந்தூர் (திண்டுக்கல்), வேடசந்தூர் புகையிலை நிலையம் (திண்டுக்கல்), ஆண்டிபட்டி (மதுரை), கிளென்மார்கன் (நீலகிரி), அதிராம்பட்டினம் AWS (தஞ்சாவூர்), டேனிஷ்பேட்டை (சேலம்) தலா 6, ஈச்சன்விடுதி (தஞ்சாவூர்), தம்மம்பட்டி (சேலம்), மலையூர் (புதுக்கோட்டை), பெருங்களூர் (புதுக்கோட்டை), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), Basl மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), அறந்தாங்கி (புதுக்கோட்டை), ஆதனக்கோட்டை (புதுக்கோட்டை), மதுக்கூர் (தஞ்சாவூர்), ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), காரையூர் (புதுக்கோட்டை), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), கெட்டி (நீலகிரி), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), மேட்டுப்பட்டி (மதுரை), வேப்பந்தட்டை (பெரம்பலூர்) தலா 5, கும்பகோணம் (தஞ்சாவூர்), Dscl ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), தொழுதூர் (கடலூர்), பொன்னனியார் அணை (திருச்சி), நன்னிலம் (திருவாரூர்), மங்களபுரம் (நாமக்கல்), கரியக்கோவில் அணை (சேலம்), Dscl மாடம்பூண்டி (கள்ளக்குறிச்சி), சந்தியூர் Kvk AWS (சேலம்), ஆயின்குடி (புதுக்கோட்டை), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), கிண்ணக்கொரை (நீலகிரி), தலைவாசல் (சேலம்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) தலா 4, பெரம்பலூர், புவனகிரி (கடலூர்), விராலிமலை (புதுக்கோட்டை), நல்முக்கு (திருநெல்வேலி), அருப்புக்கோட்டை (விருதுநகர்), திருப்புவனம் (சிவகங்கை), திருச்சி டவுன் (திருச்சி), திருச்சிராப்பள்ளி சந்திப்பு (திருச்சி), முக்கடல் அணை (கன்னியாகுமரி), திருச்சுழி (விருதுநகர்), குந்தா பாலம் (நீலகிரி), அகரம் சீகூர் (பெரம்பலூர்), ராசிபுரம் (நாமக்கல்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), நாமக்கல் ஆட்சியர் அலுவலகம், எறையூர் (பெரம்பலூர்), குப்பணம்பட்டி (மதுரை), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), கோவில்பட்டி (திருச்சி), அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி), வி.களத்தூர் (பெரம்பலூர்), ஏதாப்பூர் (சேலம்), பரங்கிப்பேட்டை (கடலூர்), சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), பொன்மலை (திருச்சி), கொத்தவாச்சேரி (கடலூர்), சிறுகுடி (திருச்சி), விருதுநகர் AWS, தஞ்சாவூர், மகாபலிபுரம் (செங்கல்பட்டு), செய்யூர் (செங்கல்பட்டு), தென்பரநாடு (திருச்சி), Dscl திருப்பாலப்பந்தல் (கள்ளக்குறிச்சி), இலுப்பூர் (புதுக்கோட்டை), அவலாஞ்சி (நீலகிரி), அருப்புக்கோட்டை Kvk Aws (விருதுநகர்), கீழச்செருவாய் (கடலூர்), அன்னூர் (கோயம்புத்தூர்), கோவிலங்குளம் (விருதுநகர்), பாலவீதி (கரூர்), கோத்தகிரி (நீலகிரி), நீடாமங்கலம் (திருவாரூர்), அன்னவாசல் (புதுக்கோட்டை), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்) தலா 3, ராஜபாளையம் (விருதுநகர்), மாஞ்சோலை (திருநெல்வேலி), பர்லியார் (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வடக்குத்து (கடலூர்), அரிமளம் (புதுக்கோட்டை), சமயபுரம் (திருச்சி), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), சங்கரிதுர்கம் (சேலம்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), Kcs மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), காக்காச்சி (திருநெல்வேலி), பாடலூர் (பெரம்பலூர்), ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), திருவாலங்காடு (திருவள்ளூர்), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), மருங்காபுரி (திருச்சி), மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), கே.எம்.கோயில் (கடலூர்), சேலம், கோமுகி அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), காரியாபட்டி (விருதுநகர்), பாண்டவையார் (திருவாரூர்), தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்), ஒர்த்தநாடு (தஞ்சாவூர்), மன்னார்குடி (திருவாரூர்), காட்டுமயிலூர் (கடலூர்), பொன்னமராவதி (புதுக்கோட்டை), கீரனூர் (புதுக்கோட்டை), உசிலம்பட்டி (மதுரை), காரைக்குடி (சிவகங்கை), வெட்டிகாடு (தஞ்சாவூர்), பணப்பாக்கம் (ராணிப்பேட்டை), கல்லிக்குடி (மதுரை), பேராவூரணி (தஞ்சாவூர்), துறையூர் (திருச்சி), திருவையாறு (தஞ்சாவூர்), வீரபாண்டி (தேனி), ஓடன்சத்திரம் (திண்டுக்கல்), செங்கம் (திருவண்ணாமலை), திருப்பத்தூர் (சிவகங்கை), கிளானிலை (புதுக்கோட்டை), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), குறிஞ்சிப்பாடி (கடலூர்), கீழ அணைகட்டு (தஞ்சாவூர்), கொடநாடு (நீலகிரி), Basl முகையூர் (விழுப்புரம்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), சேத்தியாத்தோப்பு (கடலூர்), திருமானூர் (அரியலூர்), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), தாராபுரம் (திருப்பூர்), துவாக்குடி (திருச்சி), கறம்பக்குடி (புதுக்கோட்டை), தல்லாகுளம் (மதுரை), வத்தலை அணைகட்டு (திருச்சி) தலா 2, திருவாரூர், செஞ்சி (விழுப்புரம்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), ஆனைமடுவு அணை (சேலம்), கொடைக்கானல் (திண்டுக்கல்), சோளிங்கர் (ராணிப்பேட்டை), ஹரூர் (தர்மபுரி), மதுரை தெற்கு, Rscl-3 செம்மேடு (விழுப்புரம்), ஆரணி (திருவண்ணாமலை), கள்ளக்குறிச்சி, வானூர் (விழுப்புரம்), மாயனூர் (கரூர்), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), ஆம்பூர் (திருப்பத்தூர்), வம்பன் Kvk Aws (புதுக்கோட்டை), ஏற்காடு (சேலம்), கரூர், நகுடி (புதுக்கோட்டை), கிருஷ்ணராயபுரம் (கரூர்), மணியாச்சி (தூத்துக்குடி), கொடவாசல் (திருவாரூர்), கல்லந்திரி (மதுரை), மணமேல்குடி (புதுக்கோட்டை), வட்ராப்பு (விருதுநகர்), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), கொப்பம்பட்டி (திருச்சி), வல்லம் (தஞ்சாவூர்), கடவூர் (கரூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), புதுச்சத்திரம் (நாமக்கல்), மணப்பாறை (திருச்சி), நிலக்கோட்டை (திண்டுக்கல்), தேவிமங்கலம் (திருச்சி), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), பாலமோர் (கன்னியாகுமரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), Rscl-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), விருதுநகர், முத்துப்பேட்டை (திருவாரூர்), மஞ்சளார் (தேனி), மதுராந்தகம் (செங்கல்பட்டு), பண்ருட்டி (கடலூர்), Dscl விருகாவூர் (கள்ளக்குறிச்சி), Kcs மில்-2 குண்டடம் (திருப்பூர்), வேப்பூர் (கடலூர்), திருச்சி விமான நிலையம் (திருச்சி), பூண்டி (திருவள்ளூர்), திருக்குவளை (நாகப்பட்டினம்), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), பெரியகுளம் AWS (தேனி), சோலையார் (கோயம்புத்தூர்), சோத்துப்பாறை (தேனி), திருச்செங்கோடு (நாமக்கல்), அரவக்குறிச்சி (கரூர்), வாணியம்பாடி (திருப்பத்தூர்), வானமாதேவி (கடலூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), பாலாறு அணைக்கட்டு (ராணிப்பேட்டை), கல்லக்குடி (திருச்சி), ஏழுமலை (மதுரை), பெரிய அணைக்கட்டு (தஞ்சாவூர்), போடிநாயக்கனூர் (தேனி), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), எருமப்பட்டி (நாமக்கல்), பெரியகுளம் (தேனி), மேல் பவானி (நீலகிரி), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), அதார் எஸ்டேட் (நீலகிரி), கெத்தை (நீலகிரி), மதுரை வடக்கு தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: 12.08.2023: தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
13.08.2023 முதல் 15.08.2023 வரை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications