என்னடா ட்விஸ்ட்.. ரெட் அலர்ட் கொடுத்து எல்லாரும் எதிர்பார்த்தது சென்னை.. ஆனா கோவையில் வெளுத்த கனமழை

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் மழை பெய்த நிலையில், கோவையிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம்போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானர்.

சென்னையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பாரிமுனை, பிராட்வே என பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டியது. அதைத் தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமையும் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இருப்பினும், எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லாததால் ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

monsoon rain

கோவை கனமழை

ஆனால், எல்லாரும் சென்னை மழையை எதிர்பார்த்து இருந்தபோது, கோவை- திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்தது. கோவை மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் காந்திபுரம், லங்கா கார்னர், உக்கடம், டவுன்ஹால், குனியமுத்தூர், சுந்தராபுரம், ஆற்றுப்பாலம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், பீளமேடு, சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

கொட்டிய மழை

அவிநாசி சாலையின் இருபுறங்களிலும் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். தண்ணீர் தேங்கியதால் சாலைகளில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் போனது. இதனால் வாகனங்களை மெதுவாகவும் எச்சரிக்கையுடனும் இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மாலை அலுவலகத்தில் இருந்து திரும்புவோரும் இதனால் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட நேர்ந்தது.

சிவானந்த காலனி, சங்கனூர், ரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்ததாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். வீடுகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற முடியாமல் பலரும் தவித்தனர். பல இடங்களில் வெள்ள நேர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கவுண்டம்பாளையம் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது ராட்சத மரம் விழுந்து சேதமடைந்தது. கனமழையால் மாநகரின் பல இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜாவும் பணிகளை நேரில் பார்வையிட்டார்.

அமைச்சர் அதிருப்தி

மழைநீர் தேங்கிய பகுதிகளில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மழைநீர் தேங்கியதற்கான காரணம் குறித்து மாநகராட்சி அதிகாரியிடம் கேள்வி எழுப்பிய அவர், வடிகால் பராமரிப்புப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என அதிருப்தி தெரிவித்தார்.

இது குறித்து அதிகாரியிடம் கடுமையாகப் பேசிய அமைச்சர் சம்பத்குமார், எல்லாமே அப்படியேதான் இருக்கிறது என்றும் ஒருநாள் கூட வேலை நடப்பதில்லை என்றும் கோபமடைந்தார். மேலும், எந்தெந்த இடங்களில் வேலை நடந்தது என்பதை விளக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், மழைநீர் வடிகால்களை முறையாக தூர்வாரிப் பராமரித்திருந்தால் இத்தகைய பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் வலியுறுத்தல்

சென்னையில் மழை கொட்டும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் மேற்கு மாவட்டங்களில் மழை வெளுத்துள்ளது. தேங்கியுள்ள தண்ணீரை விரைந்து அகற்றவும், வடிகால்களை சீரமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+