கோவை, நீலகிரியில் விட்டு விளாச போகுது மழை! கொளுத்தும் வெயிலுக்கு வானிலை மையம் ”ஜில்” அப்டேட்
சென்னை: தமிழகத்தில் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாளை முதல் 9 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நாளை மற்றும் நாளை மறுநாள் கோவை, நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும், தென் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் இறுதியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்தது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென் மாவட்டங்கள், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டியது. பிப்ரவரி மாதத்தில் இயல்பை விட இந்த ஆண்டு சற்று மழை அதிகம் பெய்தது.

இதன் பிறகு வெயில் அதிகரிக்க தொடங்கியது. நாளுக்கு நாள் படிப்படியாக வெயில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தான் நாளை முதல் தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. நாளை கோவை மற்றும் நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை மறுநாள் தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய இடங்கள், கோவை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 9 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இதன் பிறகு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என்று கூறியுள்ளது.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications