அதிரி புதிரி.. அடிச்சு தூள் கிளப்பப்போகுது மழை! 4 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை நிலவரம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Heavy Rain alert for 4 districts in Tamilnadu by Chennai Met

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

08.09.2023 முதல் 10.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

11.09.2023 & 12.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): திருவண்ணாமலை 6, ஓசூர் (கிருஷ்ணகிரி), சூளகிரி (கிருஷ்ணகிரி), சின்னார் அணை (கிருஷ்ணகிரி) தலா 5, RSCL -2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி) தலா 4, புதுச்சேரி, ஏற்காடு (சேலம்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), வானூர் (விழுப்புரம்), RSCL -2 கோலியனூர் (விழுப்புரம்), தளி (கிருஷ்ணகிரி), RSCL-2 வளவனூர் (விழுப்புரம்), மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), மேட்டூர் (சேலம்), RSCL-2 கேதார் (விழுப்புரம்), விழுப்புரம், RSCL -2 சூரப்பட்டு (விழுப்புரம்), சோலையார் (கோயம்புத்தூர்) தலா 3, RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), தருமபுரி PTO, BASL முகையூர் (விழுப்புரம்), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), தருமபுரி, அவலாஞ்சி (நீலகிரி), பாம்பர் அணை (கிருஷ்ணகிரி), ஆத்தூர் (சேலம்), ராயக்கோட்டா (கிருஷ்ணகிரி), டேனிஷ்பேட்டை (சேலம்), செஞ்சி (விழுப்புரம்), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை) தலா 2, சேலம், சின்கோனா (கோயம்புத்தூர்), TNAU CRI ஏதாப்பூர் (சேலம்), தலைவாசல் (சேலம்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), கிருஷ்ணகிரி, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), RSCL -2 கஞ்சனூர் (விழுப்புரம்), அழகரை எஸ்டேட் (நீலகிரி), KRP அணை (கிருஷ்ணகிரி), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), ஆலங்காயம் (திருப்பத்தூர்), மாரண்டஹள்ளி (தருமபுரி), தேவாலா (நீலகிரி), செங்கம் (திருவண்ணாமலை), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), RSCL -3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), மேல் பவானி (நீலகிரி), ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), RSCL -3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), நடுவட்டம் (நீலகிரி), RSCL வல்லம் (விழுப்புரம்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

07.09.2023 & 08.09.2023: தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

09.09.2023: தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகளில் இன்று வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

08.09.2023: மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு- தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

09.09.2023: எச்சரிக்கை ஏதுமில்லை.

10.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியவங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் கேரளா-கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+