சென்னையில் இன்று இரவு மழை வெளுத்து வாங்கும்.. நாளை முதல் சம்பவம் இருக்கு! வானிலை மையம் அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மழை வெளுக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் நாளை முதல் தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. இன்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்யும் எனவும், வரும் நாட்களில் அதிகபட்ச வெப்பநிலையில் மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் குறைந்து ஒரு சில இடங்களில் தொடர் மழை பெய்து வந்தது. ஆனால் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. எனினும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

Heavy rain

தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதனால் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

செங்கல்பட்டு, விழுப்புரத்தில் கனமழை கொட்டும்

நாளை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

18 ஆம் தேதி, செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் கனமழை வெளுக்கும்

19 ஆம் தேதி நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிகமான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலை குறையும்

இன்று முதல் 18 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்
அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.

சென்னையில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+