Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை டூ குமரி வரை.. இடி, மின்னலுடன் இன்று 5 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும், 17 ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது என்றே சொல்லலாம். நேற்று தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்த நிலையில் இன்று சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலையிலேயே ஒரு சில இடங்களில் மழை பெய்யத் தொடங்கியது.

kovai-to-kumari-heavy-rain-likely-in-5-tamil-nadu-districts-today-says-weather-department

குறிப்பாக தலைநகர் சென்னையில் குரோம்பேட்டை பகுதியில் இன்று காலையிலேயே மழை பெய்தது. விட்டு விட்டு கனமழை பெய்ததால் சாலையில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக ஜிஎஸ்டி சாலையில் மழை நீர் தேங்கியதால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் கோவை, நீலகிரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, குமரியில் ஒரு சில இடங்களில் மழை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் இன்று மட்டும் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கோவை, நீலகிரி, குமரி ஆகிய 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும், 16 ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும்,17 ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

இன்று கனமழை பெய்யும் மாவட்டங்கள்

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

16 ஆம் தேதி கனமழை வெளுக்கும்

14-11-2025 மற்றும் 15-11-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 16-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

17-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம். செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

19 ஆம் தேதி வரை

18-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

19-11-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கூடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் மழைக்கு சான்ஸ்

சென்னையில் இன்று (13-11-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னையில் நாளை (14-11-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26' செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்: 13-11-2025 மற்றும் 14-11-2025: தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

15-11-2025 முதல் 17-11-2025 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

13-11-2025 மற்றும் 14-11-2025: தென்மேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 15-11-2025 முதல் 17-11-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.

அரபிக்கடல் பகுதிகள்:

13-11-2025: தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் வட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 14-11-2025 மற்றும் 17-11-2025: எச்சரிக்கை ஏதுமில்லை. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+