வடகிழக்கு பருவமழை தொடங்கியாச்சு.. தென் மாவட்டங்களில் மழை கொளுத்த போகுது! வானிலை மைய இயக்குனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக கூறியுள்ள தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் துரை, இந்த ஆண்டு பருவமழை இயல்பான அளவே இருக்கும் என்று கூறினார். மேலும் வட மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும், தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும் மழை பெய்யக்கூடும் என தெரிவித்தார்.

சென்னையை எடுத்துக்கொண்டால் அடுத்த இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துரை கூறியதாவது:-

Northeast Monsoon

வடகிழக்கு பருவமழை தொடங்கியது

தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கிறோம். தமிழகத்தில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. பல இடங்களில் கனமழையும், மிக கனமழையும் பெய்தது. அதிகபட்சமாக கரூர் தோகைமலையில் அதிகபட்சமாக 111 மிமீ மழை பெய்தது. நாகையில் 8 செமீ, தர்மபுரியில் 8 செமீ மழை பதிவானது.

கனமழை பெய்யும்

அடுத்த இரண்டு நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தேனி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தில் நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை 21 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இவ்வளவு குறைவாக மழை பெய்வது இதுவே முதல் முறை. கடந்த 2002 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 45 சதவீதம் குறைவாக பெய்திருந்தது. அதன்பிறகு 2016 ஆம் ஆண்டு 25 சதவீதம் இயல்பை விட குறைவாக பெய்துள்ளது.

தென் மாவட்டங்களில் மழை கூடுதலாக பெய்யும்

அதே சமயம் தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை நடப்பு ஆண்டில் இயல்பான அளவே பெய்யக் கூடும். வட மாவட்டங்களில் இயல்புக்கு குறைவாகவும், தென் மாவட்டங்களில் இயல்புக்கு அதிகமாகவும் மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த இரு நாட்களை எடுத்துக்கொண்டால் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.. என்று கூறினார்.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே மழை ஆங்காங்கே பெய்து வரும் நிலையில், இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. நெல்லை, தென்காசி, குமரியில் பல்வேறு இடங்களில் இன்று கனமழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் உதகையில் அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. குமரியில் பெய்த மழையால் திற்பரப்பு அறிவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு குளிக்க மக்களுக்கு தடை விதிக்கபப்ட்டது.

தென்காசி மாவட்டத்திலும் சங்கரன்கோவில், சுரண்டை, கடையம், ஆலங்குளம், பாப்பான்குளம் பகுதியில் கனமழை பெய்தது. இதே போன்று சேலம், கள்ளக்குறிச்சி, விருதுநகர், தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கனமழை கொட்டியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+