நெருங்கும் சீசன்.. அதிரடி சரவெடி காட்டப்போகும் கனமழை! 14 மாவட்டங்களுக்கு அலர்ட் - அப்போ சென்னைக்கு?
சென்னை: தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், "இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
17.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
18.10.2023 முதல் 21.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி) தலா 17, முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி) தலா 16, குழித்துறை (கன்னியாகுமரி) 15, திற்பரப்பு (கன்னியாகுமரி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), கரூர் பரமத்தி தலா 14, சிற்றாறு-I (கன்னியாகுமரி), ஆனைப்பாளையம் (கன்னியாகுமரி) தலா 13, சிவலோகம் (கன்னியாகுமரி) 12, பவானி (ஈரோடு), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) தலா 11, குருந்தன்கோடு (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), கோடநாடு (நீலகிரி), பெருந்துறை (ஈரோடு) தலா 10, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), புள்ளம்பாடி (திருச்சிராப்பள்ளி), சின்கோனா (கோயம்புத்தூர்), சோழவந்தான் (மதுரை), கூடலூர் பஜார் (நீலகிரி) தலா 9, ஆண்டிபட்டி (மதுரை), மேல் கூடலூர் (நீலகிரி), கல்லக்குடி (திருச்சிராப்பள்ளி), மண்டலம் 06 D65 கொளத்தூர் (சென்னை), குமாரபாளையம் (நாமக்கல்), கங்கவல்லி (சேலம்), மைலாடி (கன்னியாகுமரி), பரமத்திவேலூர் (நாமக்கல்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) தலா 8, கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), நாமக்கல், பாலமோர் (கன்னியாகுமரி), கிளன்மார்கன் (நீலகிரி), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி) தலா 7, வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), அடையாமடை (கன்னியாகுமரி), திருச்சிராப்பள்ளி நகரம், நாகர்கோயில் (கன்னியாகுமரி), மண்டலம் 06 திரு.வி.கே.நகர் (சென்னை), சத்தியமங்கலம் (ஈரோடு), பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்), ஆலங்குடி (புதுக்கோட்டை), மேட்டுப்பட்டி (மதுரை), கொடைக்கானல் (திண்டுக்கல்), அழகரை எஸ்டேட் (நீலகிரி), திருமூர்த்தி அணை (திருப்பூர்), கொடுமுடி (ஈரோடு), கவுந்தப்பாடி (ஈரோடு) தலா 6, அருப்புக்கோட்டை (விருதுநகர்), விராலிமலை (புதுக்கோட்டை), திருமூர்த்தி IB (திருப்பூர்), இரணியல் (கன்னியாகுமரி), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), எருமைப்பட்டி (நாமக்கல்), கோமுகி அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), வாடிப்பட்டி (மதுரை), ஆழியார் (கோயம்புத்தூர்), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), சோத்துப்பாறை (தேனி), மண்டலம் 02 மணலி (சென்னை), நடுவட்டம் (நீலகிரி), மண்டலம் 08 மலர் காலனி (சென்னை), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), குளச்சல் (கன்னியாகுமரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 5, கின்னக்கோரை (நீலகிரி), திருச்செங்கோடு (நாமக்கல்), மண்டலம் 15 உத்தண்டி (சென்னை), கோத்தகிரி (நீலகிரி), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), சென்னை ஆட்சியர் அலுவலகம், வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), கோடிவேரி (ஈரோடு), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), மோகனூர் (நாமக்கல்), தொண்டாமுத்தூர் (கோயம்புத்தூர்), கரூர், இலுப்பூர் (புதுக்கோட்டை), VIT சென்னை AWS (செங்கல்பட்டு), செருமுள்ளி (நீலகிரி), சுருளகோடு (கன்னியாகுமரி), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), பர்லியார் (நீலகிரி), பார்வூட் (நீலகிரி), ஆத்தூர் (சேலம்) தலா 4, திண்டிவனம் (விழுப்புரம்), பெரியபட்டி (மதுரை), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), திரு.வி.க நகர் (சென்னை), பாபநாசம் (திருநெல்வேலி), குன்னூர் (நீலகிரி), சத்யபாமா பல்கலை ARG (காஞ்சிபுரம்), சங்கரி துர்க்கம் (சேலம்), மண்டலம் 05 ராயபுரம் (சென்னை), பாலக்கோடு (தர்மபுரி), காங்கேயம் (திருப்பூர்), மரக்காணம் (விழுப்புரம்), வல்லம் (தஞ்சாவூர்), சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), பொன்மலை (திருச்சிராப்பள்ளி), கொட்டாரம் (கன்னியாகுமரி), சோலையார் (கோயம்புத்தூர்), மேட்டூர் (சேலம்), கோவில்பட்டி (திருச்சிராப்பள்ளி), திருமானூர் (அரியலூர்), கன்னிமார் (கன்னியாகுமரி), பவானிசாகர் (ஈரோடு), மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை), வைகை அணை (தேனி), திருச்சிராப்பள்ளி சந்திப்பு (திருச்சிராப்பள்ளி), பெரியாறு (தேனி), அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்), தேவாலா (நீலகிரி), ராசிபுரம் (நாமக்கல்), மாயனூர் (கரூர்), வத்தலை அணைக்கட்டு (திருச்சிராப்பள்ளி), கோவிலங்குளம் (விருதுநகர்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), மாரண்டஹள்ளி (தர்மபுரி), பென்னாகரம் (தர்மபுரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), பஞ்சப்பட்டி (கரூர்), அம்மாபேட்டை (ஈரோடு), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), புத்தன் அணை (கன்னியாகுமரி), சேந்தமங்கலம் (நாமக்கல்), செய்யூர் (செங்கல்பட்டு), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ் (சென்னை), எடப்பாடி (சேலம்) தலா 3, திருச்சிராப்பள்ளி விமானநிலையம், திருப்போரூர் (செங்கல்பட்டு), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), மண்டலம் 03 மாதவரம் (சென்னை), எலந்தகுட்டை மேடு (ஈரோடு), ராமநதி அணைப் பகுதி (தென்காசி), வந்தவாசி (திருவண்ணாமலை), அரவக்குறிச்சி (கரூர்), கிருஷ்ணராயபுரம் (கரூர்), பொன்னையார் அணை (திருச்சிராப்பள்ளி), கல்லணை (தஞ்சாவூர்), லால்குடி (திருச்சிராப்பள்ளி), துவாக்குடி (திருச்சிராப்பள்ளி), மயிலம்பட்டி (கரூர்), அவினாசி (திருப்பூர்), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), வெள்ளக்கோயில் (திருப்பூர்), வேடசந்தூர் (திண்டுக்கல்), பெரம்பூர் (சென்னை), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), மஞ்சளாறு (தேனி), பூதலூர் (தஞ்சாவூர்), கழுகுமலை (தூத்துக்குடி), செட்டிகுளம் (பெரம்பலூர்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), மொடக்குறிச்சி (ஈரோடு), புகையிலை நிலையம் (VDR) (திண்டுக்கல்), ஈரோடு, பூண்டி (திருவள்ளூர்), KCS மில்-1 மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), ஒகேனக்கல் (தர்மபுரி), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), தஞ்சாவூர்,, நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சிராப்பள்ளி), பாலவிடுதி (கரூர்), ஓமலூர் (சேலம்), ஆனைமடுவு அணை (சேலம்), கல்லட்டி (நீலகிரி), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), மண்டலம் 13 அடையார் சுற்றுச்சூழல் பூங்கா (சென்னை), வானகரம் (சென்னை), திருவையாறு (தஞ்சாவூர்), ஆவடி (திருவள்ளூர்), கிணத்துக்கடவு (கோயம்புத்தூர்) தலா 2, பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), கல்லந்திரி (மதுரை), முக்கடல் அணை (கன்னியாகுமரி), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), சாத்தியார் (மதுரை), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), ஒட்டன்சத்திரம் (தர்மபுரி), ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), மண்டலம்2 ஆலந்தூர் (சென்னை), மண்டலம்3 U39 அடையார் (சென்னை), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), TNAU CRI ஏத்தாப்பூர் (சேலம்), முசிறி (திருச்சிராப்பள்ளி), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), சிவகிரி (தென்காசி), தலைவாசல் (சேலம்), கேத்தி (நீலகிரி), கன்னியாகுமரி, உதகமண்டலம் (நீலகிரி), மண்டலம்3 அடையார் (சென்னை), தேக்கடி (தேனி), மண்டலம்4 U41 பெருங்குடி (சென்னை), அம்பத்தூர் (சென்னை), தரமணி (சென்னை), மருங்காபுரி (திருச்சிராப்பள்ளி), மண்டலம்5 சோழிங்கநல்லூர் (சென்னை), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), அமராவதி அணை (திருப்பூர்), சந்தியூர் KVK AWS (சேலம்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), நத்தம் (திண்டுக்கல்), பொன்னமராவதி (புதுக்கோட்டை), குந்தா பாலம் (நீலகிரி), குளித்தலை (கரூர்), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), நாமக்கல் ஆட்சியர் அலுவலகம்,, சண்முகாநதி (தேனி), காட்டுப்பாக்கம் KVK AWS (காஞ்சிபுரம்), சென்னை நுங்கம்பாக்கம், உத்தமபாளையம் (தேனி), தர்மபுரி PTO, KCS மில்-2 கச்சிராயபாளையம் (கள்ளக்குறிச்சி), ஊத்துக்குளி (திருப்பூர்), பல்லடம் (திருப்பூர்), புதுச்சத்திரம் (நாமக்கல்), கடவூர் (கரூர்), பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), தம்மம்பட்டி (சேலம்), அண்ணா பல்கலை ARG (சென்னை), வீரகனூர் (சேலம்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), அம்பத்தூர் (சென்னை), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), போடிநாயக்கனூர் (தேனி), கூடலூர் (தேனி), பூண்டி (திருவள்ளூர்), மண்டலம்1 U32 மதுரவாயல் (சென்னை), அரிமளம் (புதுக்கோட்டை), தேனாம்பேட்டை (சென்னை), சென்னை விமானநிலையம், சேலம், சமயபுரம் (திருச்சிராப்பள்ளி), ஆலந்தூர் (செங்கல்பட்டு), ஏற்காடு (சேலம்), கீரனூர் (புதுக்கோட்டை), பெரியகுளம் AWS (தேனி), மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி), மீனம்பாக்கம் AWS (சென்னை), சிறுவாணி ஆதிவாரம் (கோயம்புத்தூர்), துறையூர் (திருச்சிராப்பள்ளி), கரியகோவில் அணை (சேலம்), செங்கம் (திருவண்ணாமலை), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), சோழிங்கநல்லூர் (சென்னை), CD மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை), மண்டலம்2 D156 முகலிவாக்கம் (சென்னை), மேல் பவானி (நீலகிரி), தாம்பரம் (செங்கல்பட்டு), சிறுகுடி (திருச்சிராப்பள்ளி), மண்டலம்4 பெருங்குடி (சென்னை), ஆலந்தூர் (சென்னை)) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று முதல் 17.10.2023 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகளில் இன்று மற்றும் 16.10.2023: கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
17.10.2023:கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு-மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
18.10.2023:தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
19.10.2023: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications