கேம் ஸ்டார்ட்.. இன்று 6 மாவட்டங்களில் பிரிச்சு மேயப்போகும் மிக கனமழை! சென்னையிலும் வலுவான சம்பவம்
சென்னை: இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், "தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 15 ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும். அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 16 ஆம் தேதி வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி ஒரிசா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 17ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
15.11.2023: கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
16.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
17.11.2023 மற்றும் 18.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
19.11.2023 மற்றும் 20.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் பொதுவாக மிதமான மழை பெய்யக்கூடும், அவ்வப்போது ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) 17, நாகப்பட்டினம் 15, காரைக்கால் 14, நன்னிலம் (திருவாரூர்), கடலூர், பரங்கிப்பேட்டை (கடலூர்), புதுச்சேரி தலா 12, வேதாரண்யம் (நாகப்பட்டினம்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்) தலா 11, கோடியக்கரை (மயிலாடுதுறை), சிதம்பரம் (கடலூர்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), மயிலாடுதுறை, கே.எம்.கோயில் (கடலூர்), மதுராந்தகம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு) தலா 10, சீர்காழி (மயிலாடுதுறை), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), கொத்தவாச்சேரி (கடலூர்), வனமாதேவி (கடலூர்), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), புவனகிரி (கடலூர்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), சிதம்பரம் AWS (கடலூர்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்) தலா 9, வடகுத்து (கடலூர்), கடலூர் ஆட்சியர் அலுவலகம், SRC குடிதாங்கி (கடலூர்), லால்பேட்டை (கடலூர்), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), கொள்ளிடம் (மயிலாடுதுறை) தலா 8, சேத்தியாத்தோப்பு (கடலூர்), திருவாரூர், செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை), வேப்பூர் (கடலூர்), அண்ணாமலை நகர் (கடலூர்), வானூர் (விழுப்புரம்), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), மரக்காணம் (விழுப்புரம்) தலா 7, திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), செங்கல்பட்டு, கொடவாசல் (திருவாரூர்), திண்டிவனம் (விழுப்புரம்), மணல்மேடு (மயிலாடுதுறை), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), நீடாமங்கலம் (திருவாரூர்), பண்ருட்டி (கடலூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), சுத்தமல்லி அணை (அரியலூர்), குப்பநத்தம் (கடலூர்) தலா 6, RSCL-2 வளவனூர் (விழுப்புரம்), RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்), திருக்குவளை (நாகப்பட்டினம்), பாண்டவரடி (திருவாரூர்), மன்னார்குடி (திருவாரூர்), VIT சென்னை AWS (செங்கல்பட்டு), RSCL-2 கெடார் (விழுப்புரம்), விருதாச்சலம் KVK AWS (கடலூர்), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), ஜெயம்கொண்டம் (அரியலூர்) தலா 5, செய்யூர் (செங்கல்பட்டு), மண்டலம் 15 சோழிங்கநல்லூர் (சென்னை), BASL முகையூர் (விழுப்புரம்), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), விருதாச்சலம் (கடலூர்), காட்டுப்பாக்கம் KVK AWS (காஞ்சிபுரம்), பெலாந்துறை (கடலூர்), காட்டுமயிலூர் (கடலூர்), மீ மாத்தூர் (கடலூர்), ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), வலங்கைமான் (திருவாரூர்), RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்), RSCL-2 நேமூர் (விழுப்புரம்), மண்டலம் 15 உத்தண்டி (சென்னை), மஞ்சளாறு (தஞ்சாவூர்) தலா 4, ஆலந்தூர் (சென்னை), சென்னை விமானநிலையம் , செந்துறை (அரியலூர்), மண்டலம் 12 மீனம்பாக்கம் (சென்னை), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), பொன்னேரி (திருவள்ளூர்), சோழிங்கநல்லூர் (சென்னை), RSCL- ஆனந்தபுரம் (விழுப்புரம்), மீனம்பாக்கம் AWS (சென்னை), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), DSCL தியாகதுர்க்கம் (கள்ளக்குறிச்சி), கும்பகோணம் (தஞ்சாவூர்), தாம்பரம் (செங்கல்பட்டு), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), அம்பத்தூர் (சென்னை), மண்டலம் 12 ஆலந்தூர் (சென்னை), மண்டலம் 14 பெருங்குடி (சென்னை), திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி), மண்டலம் 09 தேனாம்பேட்டை (சென்னை), மண்டலம் 01 அடையார் (சென்னை), மண்டலம் 10 கோடம்பாக்கம் (சென்னை), எம்ஜிஆர் நகர் (சென்னை), மண்டலம் 14 U41 பெருங்குடி (சென்னை), எண்ணூர் AWS (சென்னை), லக்கூர் (கடலூர்), தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்), தஞ்சாவூர், தரமணி ARG (சென்னை), RSCL அரசூர் (விழுப்புரம்), சென்னை நுங்கம்பாக்கம், மதுக்கூர் (தஞ்சாவூர்), DSCL கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), வந்தவாசி (திருவண்ணாமலை), மண்டலம் 13 U39 அடையார் (சென்னை) தலா 3, அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), திண்டுக்கல், திருப்போரூர் (செங்கல்பட்டு), செஞ்சி (விழுப்புரம்), திருவையாறு (தஞ்சாவூர்), NIOT_பள்ளிக்கரணை ARG (சென்னை), திருமானூர் (அரியலூர்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), ஆயிங்குடி (புதுக்கோட்டை), உடுமலைப்பேட்டை (திருப்பூர்), கீழச்செருவை (கடலூர்), அமராவதி அணை (திருப்பூர்), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), அரியலூர் PTO (அரியலூர்), தாலுகா அலுவலகம் அரியலூர், ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்), சென்னை நுங்கம்பாக்கம் AWS, மண்டலம் 01 D156 முகலிவாக்கம் (சென்னை), அதிராமபட்டினம் AWS (தஞ்சாவூர்), பெரம்பலூர், திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), YMCA நந்தனம் ARG (சென்னை), தழுதலை (பெரம்பலூர்), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), மண்டலம் 13 அடையார் சுற்றுச்சூழல் பூங்கா (சென்னை), டிஜிபி அலுவலகம் (சென்னை), ஒட்டன்சத்திரம் (தர்மபுரி), SCS மில் பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி), BASL வெங்கூர் (கள்ளக்குறிச்சி), DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), RSCL வல்லம் (விழுப்புரம்), கொடைக்கானல் (திண்டுக்கல்), ஆனைப்பாளையம் (கன்னியாகுமரி), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), கொளப்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), மண்டலம் 05 GCC (சென்னை), பழனி (திண்டுக்கல்), எச்சன்விடுதி (தஞ்சாவூர்), சென்னை ஆட்சியர் அலுவலகம், ஒரத்தநாடு (தஞ்சாவூர்), விழுப்புரம், தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), SCS மில் திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்) தலா 2, முத்துப்பேட்டை (திருவாரூர்), துறையூர் (திருச்சிராப்பள்ளி), RSCL-3 வளத்தி (விழுப்புரம்), மண்டலம் 08 அண்ணாநகர் (சென்னை), செய்யார் (திருவண்ணாமலை), தொழுதூர் (கடலூர்), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), மண்டலம் 06 D65 கொளத்தூர் (சென்னை), மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ் (சென்னை), கல்லக்குடி (திருச்சிராப்பள்ளி), பூதலூர் (தஞ்சாவூர்), மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை), ஆவடி (திருவள்ளூர்), செம்பரம்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), கள்ளக்குறிச்சி, எறையூர் (பெரம்பலூர்), கரூர்பரமத்தி (கரூர்), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), மண்டலம் 03 புழல் (சென்னை), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), மூலனூர் (திருப்பூர்), சோழவரம் (திருவள்ளூர்), அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), நந்தியாறு (திருச்சிராப்பள்ளி), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), குருங்குளம் (தஞ்சாவூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), புது வேட்டக்குடி (பெரம்பலூர்), KCS மில் அரியலூர் (கள்ளக்குறிச்சி), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), DSCL கீழ்படி (கள்ளக்குறிச்சி), மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை), புள்ளம்பாடி (திருச்சிராப்பள்ளி), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), மண்டலம் 05 ராயபுரம் (சென்னை), மண்டலம் 11 வளசரவாக்கம் (சென்னை), மண்டலம் 07 வானகரம் (சென்னை), மண்டலம் 06 திரு.வி.க.நகர் (சென்னை), மண்டலம் 03 மாதவரம் (சென்னை), உப்பாறு அணை (திருப்பூர்), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), புழல் ARG (திருவள்ளூர்), வல்லம் (தஞ்சாவூர்), மண்டலம் U32 மதுரவாயல் (சென்னை), மண்டலம் 02 மணலி (சென்னை), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), மேற்கு தாம்பரம்_SIT ARG (செங்கல்பட்டு), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), செட்டிகுளம் (பெரம்பலூர்), DSCL எறையூர் (கள்ளக்குறிச்சி), வி.களத்தூர் (பெரம்பலூர்), நல்லதங்கால் நீர்த்தேக்கம் (திருப்பூர்), திருவள்ளூர், பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), பூந்தமல்லி (திருவள்ளூர்), கிருஷ்ணபுரம் (பெரம்பலூர்), பேராவூரணி (தஞ்சாவூர்), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), மோகனூர் (நாமக்கல்), செங்குன்றம் (திருவள்ளூர்), மலையூர் (புதுக்கோட்டை), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), KCS மில்-2 மூரர்பாளையம் (கள்ளக்குறிச்சி), KCS மில்-2 கச்சிராப்பாளையம் (கள்ளக்குறிச்சி), ஆலங்குடி (புதுக்கோட்டை), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), வீரகனூர் (சேலம்), மண்டலம் 04 தண்டையார்பேட்டை (சென்னை), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), கரம்பக்குடி (புதுக்கோட்டை), CD மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), பெரம்பூர் (சென்னை), வெட்டிக்காடு (தஞ்சாவூர்), KCS மில்- மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), தலைவாசல் (சேலம்), திருமூர்த்தி அணை (திருப்பூர்), சமயபுரம் (திருச்சிராப்பள்ளி), மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை) தலா 1." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications