வெயிலுக்கு நடுவே விட்டு விளாசப் போகுது மழை.. சென்னை உள்பட 11 மாவட்டங்களுக்கு அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பகல் நேரங்களில் வெயில் கடுமையாக வாட்டி வதைக்கும் நிலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை கொட்டி வருகிறது. நேற்று இரவு மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் இன்றும் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இதே போன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இன்று தமிழகத்தில் உள் மாவட்டங்களில் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

Chennai Rain Rain Chennai

காற்றழுத்தத்தாழ்வுப் பாதை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. காலையிலேயே கண்ணாடி போல பளிச்சென்று வெயில் வீசுகிறது. மதிய நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவுக்கு கடுமையாக வெயில் வாட்டி வதைக்கிறது. இன்று தமிழகத்தில் உள் மாவட்டங்களில் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு உள்ளது என்றும், 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- நேற்று தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவிய பலவீனமான காற்றழுத்தத்தாழ்வுப் பாதை (Feeble Trough) மேல் குறிப்பிட்ட காற்றழுத்த தாழ்வு பாதையுடன் இணைந்துள்ளது.

இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்

இதனால் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

6 முதல் 8 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். 9, 10 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை

வரும் 8 ஆம் தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னையில் இன்று எப்படி?

சென்னையில் இன்று (05-09-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

காலை 10 மணி வரை

சென்னை, சேலம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் லேசான மழைக்கும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+