தீவிரமடையும் மழை.. கோவை, நீலகிரி மட்டும் இல்லை.. இன்றைக்கு சென்னையிலும் டமால், டுமீலுடன் மழை இருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் தென்மேற்கு பருவமழை பரவியுள்ளது என்றும் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நேற்றைப் போலவே இன்றும் கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், தென்காசி, நெல்லை, குமரி, தேனி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அநேக இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்துள்ளது.

rain-to-continue-in-coimbatore-and-nilgiris-possibility-of-rain-in-chennai-meteorological-departme

சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு

குறிப்பாக அவலாஞ்சியில் மட்டும் நேற்று ஒரே நாளில் 35 செமீ மழை பதிவானது. மேல் பவானியில் 30 செமீட்டரும், கோவை சின்னக் கல்லாரில் 21.3 செமீ மழையும் பதிவானது. பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்ததால், மரங்கள் முறிந்து விழுந்தன. தொடர் மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இன்னும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இன்று கோவை, நீலகிரியில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும், நெல்லை, தென்காசி, குமரி, தேனியில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதேபோல் சென்னையில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறியிருப்பதாவது:-

கோவை, நீலகிரிக்கு இன்றும் ரெட் அலர்ட்

இன்று, தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளது. மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி 27-ஆம் தேதி வாக்கில் (நாளை) உருவாகக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி. மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த ஒரு வாரம் தொடரும்

27-05-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

28-05-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

31 ஆம் தேதி வரை

29-05-2025 மற்றும் 30-05-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும். திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

31-05-2025 மற்றும் 01-06-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் இடி மின்னலுடன்

சென்னையில் இன்று (26-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான /மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னையில் நாளை (27-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

வெப்பநிலை நிலவரம்:

* அதிகபட்ச வெப்பநிலை:- சென்னை (நுங்கம்பாக்கம்): 36.5° செல்சியஸ்
* குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்):- கரூர் பரமத்தி: 20.5° செல்சியஸ்

மழை அளவு செமீ:

* அவலாஞ்சி (நீலகிரி) 35.
* மேல் பவானி (நீலகிரி) 30,
* சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) 21,
* எமரால்டு (நீலகிரி) 18,
* கூடலூர் பஜார் (நீலகிரி) 15.
* விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) தலா 14.
* மேல் கூடலூர் (நீலகிரி), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்). வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 13,

* சின்கோனா (கோயம்புத்தூர் 12,
* குந்தா பாலம் (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), உபாசி TRF AWS (கோயம்புத்தூர்). வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்). கிளன்மார்கன் (நிலகிரி), சூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி) தலா 11.
* செருமுள்ளி (நீலகிரி), சோலையார் (கோயம்புத்தூர்) தலா 10.
* பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்), நடுவட்டம் (நீலகிரி) தலா சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), கின்னக்கோரை (நீலகிரி) தலா 7,
* தேவாலா (நீலகிரி], உதகமண்டலம் (நீலகிரி), ஆழியார். (கோயம்புத்தூர்), பெரியாறு (தேனி) தலா 6,
* பாலமோர் (கன்னியாகுமரி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), ஊத்து (இருநெல்வேலி), கெத்தை (நீலகிரி), திருமூர்த்தி அணை (திருப்பூர்) தலா 5,

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்: 26-05-2025 முதல் 30-05-2025 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்: 26-05-2025 மற்றும் 27-05-2025: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு மத்தியகிழக்கு வங்கக்கடலின் ஒருசில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு-மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே S5 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

28-05-2025 முதல் 30-05-2025 வரை: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு-தென்கிழக்கு வங்கக்கடலின் ஒருசில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு-மத்திய-வடக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்: 26-05-2025 முதல் 30-05-2025 வரை: தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல், கொங்கன். கோவா, கர்நாடக-கேரள கடலோரப்பகுதிகள், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+