நாளை தீபாவளி.. இன்று சென்னை உட்பட 18 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிர கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில், இன்று மாலை 4 மணி வரை சென்னை உட்பட 18 மாவட்டங்களில் மழை கொட்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்யும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக இன்று மதியம் வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், தேனி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் என 5 மாவட்டங்களில் இன்றும்.. தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் என 7 மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
