சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டது வெயில்! 7 மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்தது
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் கனமழையின் தாக்கம் தற்போது குறைந்திருக்கிறது. எனவே வெயில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக இன்று சென்னையில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது.
அதேபோல திருச்சி, மதுரை என 7 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்திருக்கிறது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 பாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது.

அதிராமபட்டினம் - 35.0
சென்னை (நுங்கம்பாக்கம்) - 37.3
சென்னை (மீனம்பாக்கம்) - 37.9
கோயம்புத்தூர் - 30.6
குன்னூர் - 25.0
கடலூர் - 38.3
தர்மபுரி - 32.0
ஈரோடு - 37.8
கன்னியாகுமரி - 30.9
கரூர் பரமத்தி - 37.0
காரைக்கால் - 35.7
கொடைக்கானல் - 19.7
மதுரைநகரம் - 39.4
மதுரை விமானநிலையம் - 40.2
நாகப்பட்டினம் - 36
பாளையங்கோட்டை - 37.0
பாம்பன் - 33.7
பரங்கிப்பேட்டை - 38.2
புதுச்சேரி - 37.4
சேலம் - 33.4
தஞ்சாவூர் - 36.0
திருப்பத்தூர் AWS - 33.5
திருச்சிராப்பள்ளி - 38.1
திருத்தணி - 36.2
தொண்டி - 33.0
தூத்துக்குடி - 37.1
உதகமண்டலம் - 17.6
வால்பாறை - 22.5
வேலூர் - 37.1
என வெயில் பதிவாகியிருக்கிறது. முன்னதாக இன்று மதியம் விடுக்கப்பட்டிருந்த அறிவிப்பில், இன்றும் நாளையும் வெயில் தீவிரமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிதிருந்தது.
மட்டுமல்லாது, "அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை பொறுத்தவரை, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும், (ஜூன்.19,20ம் தேதிகளில்) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன்.21 முதல் 25 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பை பொறுத்தவரை, அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை, இன்று முதல் ஜூன.21 வரை அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் பொதுவாக மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் ஒருசில இடங்களில் சற்று உயரக்கூடும். அதேபோல இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்தவரை,
இன்று தொடங்கி ஜூன். 21 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் குறிப்பாக இந்த தேதிகளில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்த வரை, இன்று (19-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (20-06-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாத சாதித்த ஜெயலலிதா! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?











Click it and Unblock the Notifications