EL Nino செய்த சம்பவம்.. அடுத்தாண்டு கூட வெப்பம் குறையவே குறையாது.. வெதர்மேன் கொடுத்த வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இந்த செப்டம்பர் மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் உச்சத்தில் இருக்கிறது. இதற்கிடையே ஈரோடு, வேலூர் என மாநிலத்தின் பல பகுதிகளில் வெப்பம் எந்தளவுக்கு அதிகரித்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதம் வந்த பிறகும் கூட வெப்பம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்கிடையே இதற்கான காரணத்தை விளக்கியுள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெப்பம் அனைத்து பகுதிகளிலும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அடுத்தாண்டும் வெப்பம் இதேபோலவே இருக்கும் எனவும் பதிவிட்டுள்ளார்.

Tamil nadu weather Weatherman El Nino

தமிழ்நாடு வெதர்மேன்

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில், "எல் நினோ மற்றும் தமிழ்நாட்டில் நீடிக்கும் வெப்பத்தை தனித்தனியாக பார்க்க முடியாது. செப்டம்பர் மாதம் தொடங்கி 6 நாட்களே ஆகியுள்ள நிலையில், பாளையங்கோட்டை, திருச்சி, வேலூர், கரூர் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், இந்த மாதம் முடிய இன்னும் பல நாட்கள் இருப்பதால், வெப்பம் புதிய உச்சத்தை தொட வாய்ப்புள்ளது.

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நிலைபெற்றவுடன், கடுமையான கோடை வெப்பம் ஓரளவுக்கு முடிவுக்கு வரும். ஆனால் தமிழ்நாட்டின் நிலை வேறுபட்டது. நாட்டின் மற்ற பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நிலைபெற்ற பிறகும், தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதம் வரையிலும் நீடித்த வெப்பம் தொடரும். இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டின் பல பகுதிகள் இந்தியாவின் அதிக வெப்பம் பதிவாகும் இடங்களாக உள்ளன. அதனால் தான் எல் நினோ ஆண்டுகளையும், தமிழ்நாட்டில் நீடிக்கும் வெப்பத்தையும் ஒன்றாகப் பார்க்க வேண்டியுள்ளது.

காரணம்

குறிப்பாக, மேற்கில் இருந்து வீசும் பருவமழை காற்று ஒப்பீட்டளவில் பலவீனமாக இருப்பது, குறிப்பாக கேரளா பகுதியில், குறைவான மேக மூட்டம், ஈரப்பதம் இல்லாமை மற்றும் தெளிவான வானிலை கொண்ட நாட்கள் அதிகரிப்பது போன்ற காரணங்களால் நிலப்பரப்பு தொடர்ந்து வெப்பமடைகிறது. இதனால் தென்மேற்கு பருவமழை நிலைபெற்றவுடன் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் கோடை வெப்பத்தில் இருந்து ஓரளவு நிவாரணம் பெறும் நிலையில், தமிழ்நாட்டின் வெப்பம் கோடை காலத்தை தாண்டி செப்டம்பர் மாதம் வரையிலும் நீடிக்கிறது. எல் நினோ ஆண்டுகளில் இந்த நிலைமை மேலும் அதிகரிக்கிறது.

அதிகரிக்கும் வெப்பம்

செப்டம்பர் மாதம் தொடங்கி 6 நாட்களே ஆகியுள்ள நிலையில், பல இடங்களில் ஏற்கனவே வெப்பம் உச்சத்தை தொட்டுள்ளது. திருச்சியில் செப்டம்பர் மாதத்தில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை 40.7 டிகிரி செல்சியஸ் ஆகும். செப்டம்பர் 5ம் தேதி பதிவான இந்த வெப்பநிலை தான் செப்டம்பரில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பமாகும். இதற்கு முன்பு 1929ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி 40.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது.

பாளையங்கோட்டையில் செப்டம்பர் 1ம் தேதி 40.6 டிகிரி செல்சியஸ் பதிவாகி, செப்டம்பர் மாதத்தின் அதிகபட்ச வெப்பநிலை சாதனையை முறியடித்துள்ளது. இதற்கு முன்பு 1967ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி 40.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது" என பதிவிட்டுள்ளார். இதேபோல பல்வேறு பகுதிகளிலும் வெப்பம் எந்தளவுக்கு உயர்ந்துள்ளது என்பது தொடர்பாக சில பதிவுகளை பகிர்ந்துள்ளார்.

நிலைமை மோசம்

அதன்படி வேலூரில் செப்டம்பர் 6ம் தேதி 39.9 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. இதற்கு முன்பு 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி 39.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. ஈரோட்டிலும் செப்டம்பர் மாத வெப்பநிலை சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 5 மற்றும் செப்டம்பர் 2 ஆகிய தேதிகளில் அங்கு தலா 39.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி 39.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. கரூரில் செப்டம்பர் 5ம் தேதி 39.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. இதற்கு முன்பு 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி 39 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது.

மலைப்பகுதியான ஊட்டியிலும் நிலைமை வித்தியாசமாக உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருக்கிறார்.. செப்டம்பர் 5ம் தேதி அங்கு 24.4 டிகிரி செல்சியஸ் பதிவாகி, செப்டம்பர் மாதத்திற்கான அனைத்து காலகட்ட அதிகபட்ச வெப்பநிலை சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1994ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி 23.3 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. அங்கு ஜூலை மாதம் முதலே வெப்பம் அதிகமாகவே இருக்கிறது.

அடுத்தாண்டும் தொடரும்

தமிழ்நாடு வெதர்மேன் மற்றொரு அதிர்ச்சி தகவலையும் இதில் பகிர்ந்திருந்தார். அதாவது இந்த ஆண்டு மட்டுமல்லாமல், அடுத்த ஆண்டிலும் எல் நினோவின் தாக்கத்தால் கோடை காலம் சாதனை வெப்பம் கொண்டதாக இருக்கலாம் என்றும் குறிப்பாக அடுத்தாண்டு மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் நிலவும் வெப்பநிலையை அதிகமாகவே இருக்கும் என அவர் பதிவிட்டுள்ளார்,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+