தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்துக்கு கிளைமேட் இப்படித்தான்.. சென்னையில் இன்று மழை கொட்டும்.. வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெயிலின் அளவு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த வாரம் வெயில் கொளுத்தி எடுத்தது. நெல்லை பாளையங்கோட்டை, மதுரை என பல்வேறு இடங்களில் வெயில் கொளுத்தி எடுத்தது. அதன் பிறகு கடந்த 4 நாட்களாக வெயில் குறைந்து ஒரு சில இடங்களில் மழை கொட்டியது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

கோவை, நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இன்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சில இடங்களிலும், நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்தது. இந்த நிலையில் தான் தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு அதாவது வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.
"தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் இன்று முதல் வரும் 5 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பலத்த தரைக்காற்று வீசக்கூடும். 40 முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். வெயிலை பொறுத்தவரை அடுத்த ஒரு வாரத்திற்கு இயல்பை விட ஒரு சில பகுதிகளில் 2 முதல்3 டிகிரி வரை அதிக வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்றும், நாளையும் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. வானிலை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று 30-08-2025 முதல் 01-09-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 02-09-2025 முதல் 05-09-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
இன்று 30-08-2025 மற்றும் 31-08-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3* செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். 30-08-2025 மற்றும் 31-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னையில் மழை பெய்யும்
சென்னையில் இன்று (30-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 20 செல்சியஸை ஒட்டிடம் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (31-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.
பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
* வால்பாறை PTO (கோயம்புத்தூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) தலா 4.
* நாலுமுக்கு (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி), காக்காச்சி (திருநெல்வேலி), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 3,
* சோலையார் (கோயம்புத்தூர்), பெரியாறு (தேனி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்). பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), சுருளக்கோடு (கன்னியாகுமரி) தலா 2,
* பாலமோர் (கன்னியாகுமரி). மஞ்சளாறு (தேனி), திருப்பத்தூர் (சிவகங்கை), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), ஈரோடு PTO (ஈரோடு), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), தேவாலா (நீலகிரி), அவலாஞ்சி (நீலகிரி), பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி), காரைக்குடி (சிவகங்கை), ஆழியார் (கோயம்புத்தூர்), சிற்றாறு-1 (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), வேப்பூர் (கடலூர்), மன்னார்குடி (திருவாரூர்), பார்வூட் (நீலகிரி) தலா 1.
வெப்பநிலை நிலவரம்:
* அதிகபட்ச வெப்பநிலை:- மதுரை விமான நிலையம் : 40.5° செல்சியஸ்
* குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்):- கரூர் பரமத்தி: 21.5 செல்சியஸ்
மீனவர்களுக்கான எச்சரிக்கை;
தமிழக கடலோரப்பகுதிகள்: 30-08-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
31-08-2025 மற்றும் 01-09-2025: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
02-09-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
03-09-2025: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
30-08-2025: மத்தியகிழக்கு, அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
31-08-2025 மற்றும் 01-09-2025: ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
02-09-2025 மற்றும் 03-09-2025: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.












Click it and Unblock the Notifications