வேலூர் என்ன அன்டார்டிகாவிலா இருக்கு? ஊட்டிக்கு நிகராக வாட்டும் குளிர்.. வெதர்மேன் கொடுத்த வார்னிங்
சென்னை: கடந்த 12ம் தேதியுடன் பருவமழை தமிழகத்திலிருந்து விலகியது. இருப்பினும் குளிரின் தாக்கம் குறையவில்லை. இந்நிலையில் கொடைக்கானல், தென்னிந்தியாவின் மிகவும் குளிர்ந்த பகுதியாக மாறியிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருக்கிறார். அதேபோல வேலூரில் மிக குறைந்த அளவுக்கு குளிர் பதிவாகியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "ஜனவரி 22 அன்று, கொடைக்கானலில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.9 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவானது. அத்துடன், தென்னிந்தியாவின் மிகக் குளிரான பகுதியாக கொடைக்கானல் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் கொடைக்கானலில் இதுவரை பதிவாகியுள்ள முதல் 10 தீவிர குளிர் பதிவுகளைப் பார்ப்போம். இந்த ஆண்டு மட்டும் 3 பதிவுகள் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளன.
ஜனவரி மாதத்தில் கொடைக்கானலில் பதிவான மிகக் குறைவான முதல் 10 வெப்பநிலைப் பட்டியல் இதோ:
- 2003 ஜனவரி 5 (0.6°C)
- 1976 ஜனவரி 7 (2.7°C)
- 1965 ஜனவரி 22 (2.8°C)
- 1975 ஜனவரி 15 (3.2°C)
- 1975 ஜனவரி 14 (3.3°C)
- 2026 ஜனவரி 8 (3.4°C - இந்த ஆண்டு)
- 1976 ஜனவரி 22 (3.5°C)
- 1976 ஜனவரி 6 (3.7°C)
- 1975 ஜனவரி 6 (3.8°C)
- 2026 ஜனவரி 22 (3.9°C - இந்த ஆண்டு)
- மேலும் 2026 ஜனவரி 21 அன்று 4.0°C (இந்த ஆண்டு) பதிவாகியுள்ளது.
ஜனவரி 22 நிலவரப்படி, தென்னிந்தியாவில் உள்ள பிற முக்கிய மலைவாசஸ்தலங்களின் குறைந்தபட்ச வெப்பநிலை கீழ்கண்டவாறு பதிவாகியுள்ளது:
- ஊட்டி 5.2°C
- வட்டாடா (இடுக்கி) 7.5°C
- அரக்கு 7.9°C
- குன்னூர் 8.4°C
- வால்பாறை 10.0°C
- ஏற்காடு 10.0°C
- ஜவ்வாது மலை (வேலூர்) 11.3°C.
இன்று, மற்ற நகரங்களில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை இதோ:
- தேன்கனிக்கோட்டை 13.1°C
- விரிஞ்சிபுரம் (வேலூர்) 13.6°C
- பாலக்கோடு (தருமபுரி) 15.2°C,
- திருப்பத்தூர் 15.3°C
- தருமபுரி 16.0°C
- வேலூர் 16.3°C
- திருத்தணி 16.4°C
- கரூர் 16.5°C.
என பதிவிட்டிருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் வழக்கமாக வெயில்தான் பட்டையை கிளப்பும். ஆனால், இந்த முறை குளிரும் வாட்டி வதைத்துள்ளது.
-
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications