ஒரே இடத்தில் டேரா போடும் காற்றழுத்தம்! 2015 லும் இப்படித்தான் ஆச்சு! ஆனால்.. வெதர்மேன் போஸ்ட்
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்தமாக வலுவிழந்த டிட்வா ஒரே இடத்தில் நிலை கொண்டிருப்பது ஏன் என்பது குறித்தும் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இதே போல் ஒரு சூழல் ஏற்பட்டதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: டிட்வா புயல் சென்னை கடற்கரைக்கு அருகே 18 மணி நேரமாக நிலை கொண்டிருப்பது ஏன்? இந்த டிட்வாவால் வடமேற்கு பகுதியில் மட்டும் மேகக் கூட்டங்கள் உருவாவது ஏன் என்றெல்லாம் உங்களுக்குள் பல கேள்விகள் இருக்கும்.

இதற்கான ஒரே பதில் மேற்கில் இருந்து ஒரு குறைந்த பலம் கொண்ட மேற்கு திசை காற்றானது டிட்வாவை கிழக்கு திசைக்கு தள்ளுகிறது. அதே நேரம் கிழக்கில் இருந்து ஒரு அதிக பலம் வாய்ந்த காற்று அந்த பக்கம் செல்லவிடாமல் மறித்து நிற்கிறது.
இதனால்தான் டிட்வாவால் மேற்கும் போகமுடியாமல் கிழக்கும் போக முடியாமல் சிக்கியுள்ளது. இந்த குறைந்த பலம் பலம் கொண்ட மேற்கு திசை காற்று புதன்கிழமை நகர்ந்து செல்லும். இதன் பிறகு டிட்வா தமிழக கடற்கரைக்கு மேற்கு பக்கம் நகரும். இந்த மேற்கு திசை காற்றானது பொதுவாக தீவிர மழை மேகங்களையும் திடீர் புயல் உருவாக்கத்தையும் ஏற்படுத்தும்.
2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு தீவிர காற்றழுத்தமானது இந்த டிட்வா போல் மேற்கு திசை காற்றால் நகர முடியாமல் சிக்கி பெரிய அளவு மழையை கொடுத்தது. ஆனால் டிட்வா போல் அந்த தீவிர காற்றழுத்தம் சிக்கிக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
நல்ல மழை தொடங்கியது, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்ட கடலோரத்திற்கு இன்னும் அருகே தாழ்வு மண்டலம் நெருங்கும். இதனால் மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கு சிறப்பான மழையை தரும். இந்த காற்றழுத்தம் இன்று இரவு புதுச்சேரி- சென்னை இடையே கிழக்கு கடற்கரைச் சாலை அருகே கரையை கடக்கும் என கணித்துள்ளார்.
-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications