தங்க பத்திர திட்டம்: 8 வருஷம் காத்திருந்தால் முழு வரி விலக்கு.. தங்கம் வாங்குபவர்களுக்கு டபுள் லாபம்
சென்னை: தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல, அது ஒரு பாதுகாப்பான முதலீடு என்பதைத் தமிழக மக்கள் நன்றாகவே அறிவார்கள்.. ஆனால், தங்கத்தை ஆபரணமாக வாங்கும்போது அதில் சேதாரம், செய்கூலி மற்றும் ஜிஎஸ்டி எனப் பல கூடுதல் செலவுகள் ஏற்படுகின்றன.. இதற்கு மாற்றாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வழங்கும் தங்கப் பத்திரத் திட்டம் தற்போது மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.. 2026-27 நிதியாண்டின் முதல் பாதியில் இந்தப் பத்திரங்களை வெளியிடுவதற்கான ஆயத்தப் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தங்க பத்திர திட்டத்தோட மிக முக்கியமான ஹைலைட்டே இதில் முதலீடு செய்பவர்களுக்கு கிடைக்கும் இரட்டிப்பு லாபம்தான்.. பொதுவாக தங்கம் வாங்குபவர்களுக்கு அதன் விலை உயர்வால் மட்டும்தான் லாபம் கிடைக்கும்..

தங்க பத்திரத் திட்டம்
ஆனால், இந்த தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்யும்போது, தங்கத்தோட விலை உயர்வோடு சேர்த்து வருஷத்துக்கு ஒரு குறிப்பிட்ட வட்டி வருமானமும் கிடைக்கிறது.. உதாரணமாக, நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை இதில் முதலீடு செய்கிறீர்கள் என்றால், அந்த தொகைக்கான வட்டி உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக 6 மாசத்துக்கு ஒருமுறை வரவு வைக்கப்படும்..
பொருளாதார ரீதியாக பார்த்தால், நடுத்தர மக்களுக்கு இந்த திட்டம் ஒரு சூப்பரான விஷயம்.. ஆபரண தங்கமாக வாங்கும்போது நாம் கொடுக்க வேண்டிய செய்கூலி, சேதாரம் போன்ற நிறைய சுமைகள் இதில் கிடையாது..
இப்பவே டிஜிட்டல் முறையில் அப்ளை செய்பவர்களுக்கு ஒரு கிராமுக்கு 50 ரூபாய் வரை டிஸ்கவுண்ட் கிடைப்பதும் இன்னொரு பிளஸ் பாயிண்ட்.. ஆபரண தங்கம் போல திருடு போகும் என்ற பயமோ அல்லது லாக்கர் வாடகை கட்ட வேண்டிய தேவையோ இல்லாமல், டிஜிட்டல் வடிவில் பாதுகாப்பாக சேமிக்க முடியும்.
லாபம் - முதலீடுகள்
வரி சலுகை பொறுத்தவரை, மற்ற முதலீடுகளை விட இது ரொம்பவே ஸ்பெஷாலிட்டி.. பொதுவாக தங்கத்தை விற்று லாபம் பார்க்கும்போது அதற்கு வரி கட்ட வேண்டும்..
இருந்தாலும், தங்க பத்திர திட்டத்தில் 8 வருஷம் முதிர்வு காலம் வரை காத்திருந்து பணத்தை எடுத்தால், அதன் மூலமாக கிடைக்கும் மூலதன லாபத்திற்கு (Capital Gains Tax) முழுமையாக வரி விலக்கு உண்டு.. இது முதலீட்டாளர்களின் லாபத்தை முழுமையாக கையில் வைத்திருக்க உதவும்.. அவசர தேவைக்கு இந்த பத்திரங்களை அடமானமாக வைத்து பேங்கில் லோன் வாங்கும் வசதியும் இருக்கிறது..
சூப்பரான சாய்ஸ்
தற்போது மார்க்கெட்டில் நிலவும் கடும் போட்டி மற்றும் பொருளாதார சூழலில், சேஃபான முதலீட்டை தேடுபவர்களுக்கு தங்க பத்திரம் ஒரு சூப்பரான சாய்ஸ்.. புது அறிவிப்பு வந்த பிறகே இதற்கான விண்ணப்பங்கள் பேங்குகளில் வாங்கப்படும்.. தங்கத்தோட விலை உயர்வால் கிடைக்கும் லாபம் ஒருபுறம் இருக்க, இந்த கூடுதல் வட்டி வருமானம் முதலீட்டாளர்களுக்கு ஒரு டபுள் லாபத்தை தருகிறது..
தங்க பத்திர திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சம் அதன் எளிமையான விற்பனை முறை ஆகும்.. 8 வருஷம் வரை காத்திருக்க முடியாதவர்கள், பங்கு சந்தை வழியாக இந்த பத்திரங்களை எப்போது வேண்டுமானாலும் விற்று பணமாக்கி கொள்ள முடியும்.. இதற்காக நீங்கள் தங்கம் விற்கும் கடைக்கு அலைந்து திரிய வேண்டிய அவசியமே இல்லை..
பாதுகாப்பான முதலீடு
அதேபோல, இந்த பத்திரங்களை டிஜிட்டல் முறையில் வைத்திருப்பதால், ஒரிஜினல் பத்திரம் தொலைந்து போகும் என்ற பயமும் தேவையில்லை. ஒருவேளை முதலீட்டாளர் எதிர்பாராத விதமாக இறக்க நேரிட்டால், நாமினியாக இருப்பவர் இந்த பலன்களை மிக எளிதாக பெற்றுக்கொள்ள முடியும்.. இதனால் குடும்பத்தின் எதிர்கால பாதுகாப்புக்கு தங்கம் ஒரு சிறந்த முதலீடாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை..
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் இந்த சூழலில், சாமானிய மக்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள் வரை அனைவரும் இந்த ஏப்ரல் அல்லது மே மாசம் வரப்போகும் புதிய அறிவிப்பை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
-
தபால் நிலையங்கள் கடனே தராமல் சேமிப்புக்கு எப்படி வட்டி தருகின்றன.. சுவாஸ்யமான உண்மை -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி












Click it and Unblock the Notifications