சென்னை மக்களுக்கு வந்த குட் நியூஸ்! அடுத்த ஒரு வாரத்திற்கு.. கவலை வேண்டாம்! வெதர்மேன் அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகியிருக்கிறது. இந்நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கு இந்த நிலை நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் நேற்றிரவு தொடங்கி இன்று காலை வரை பரவலாக மழை பெய்திருக்கிறது. அடுத்த ஒரு வாரத்தை பொறுத்தவரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் இதே நிலை நீடிக்கும். பரவலாக மழை பெய்யும்.

Weatherman

காவிரி நீர்

மறுபுறம் காவிரி படுகையில் மழை குறைந்திருக்கிறது. கடந்த 2 நாட்களுடன் ஒப்பிடுகையில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழையின் அளவு தற்போது குறைந்திருக்கிறது. இருப்பினும் கபினி அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்திற்கு சிறந்த நீர் வரத்து இருக்கும்.

நிலைமை இப்படி இருக்கும்போது, கர்நாடக அரசு சொல்வதை போல மேகதாது அணை கட்டப்பட்டால், வெளியேற்றப்படும் உபரி நீரின் ஒரு பகுதி தமிழ்நாட்டை வந்தடைவதற்கு முன்னதாகவே தடுத்து நிறுத்தப்படும். வழக்கமாக பருவமழை காலங்களில் கபினியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் மேட்டூரை வந்தடையும். இப்படி வரும் நீரின் அளவையும், நேரத்தையும் மேகதாது அணை மாற்றக்கூடும்" என்று தெரிவித்திருக்கிறார்.

பருவமழையின் தாக்கம்

தென்மெற்கு பருவமழை இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. குறிப்பாக தமிழகத்தில் ஜூன்.1ம் தேதி தொடங்கி ஆக.2ம் தேதி வரை இயல்பை விட 16% அளவுக்கு மழை குறைவாகவே பெய்திருக்கிறது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் வறட்சியாகவே இருக்கின்றன. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டிருக்கிறது.

மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் மாதம் தண்ணீர் திறந்துவிட்டிருக்க வேண்டும். தண்ணீர் இன்னும் திறக்காததால், டெல்டாவில் சாகுபடி பாதிக்கப்பட்டிருக்கிறது.

டெல்டாவின் நிலைமை

திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் வேலைக்காக தஞ்சாவூர் நோக்கி நகர தொடங்கியிருக்கின்றனர். மேட்டூர் நீர் வந்திருந்தால், உள்ளூரிலேயே வேலை இருந்திருக்கும். ஆனால், ரூ.250-300க்காக 40-50கி.மீ தள்ளி வேலைக்கு போக வேண்டி இருப்பதாகவும், அப்படியே போனாலும் எல்லோருக்கும் வேலை இருப்பதில்லை என்றும் விவசாய தொழிலாளர்கள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.

கபினி நீர்

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக, நேற்று கபினி அணையிலிருந்து 25000 கனஅடி வரை உபரி நீர் திறக்கப்பட்டிருந்தது. இன்று இந்த அளவு குறைக்கப்பட்டிருக்கிறது. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 4.5 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று தமிழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+