For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாவலர் ஏ.எம். யூசுப் வாழ்க்கை வரலாறு

By Staff
Google Oneindia Tamil News

Yousufதமிழ் இஸ்லாமிய எழுத்தின் முன்னோடிகளில் ஒருவரான நாவலர் ஏ.எம். யூசுப் சாஹிப்பின் வாழ்க்கை வரலாறு எழுதப்படவுள்ளது. இதற்கு தேவையான தகவல்களை, புகைப்படங்களை அனுப்பி வைக்கலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் கருணாநிதியால், நாடறிந்த நாவலர் என்று போற்றப்பட்டவரும், தமிழ் இஸ்லாமிய முற்போக்கு வார இதழான மறுமலர்ச்சி வார இதழை ஏறத்தாழ 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக கடும் போராட்டங்களுக்கிடையே நடத்தி இஸ்லாமிய சமுதாயத்திற்காக குரல் கொடுத்தவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநிலப் பொதுச் செயலாளராய் பல்லாண்டு காலம் பணிபுரிந்தவருமான ஏ.எம்.யூசுப் சாஹிப் தமிழ் இஸ்லாமிய எழுத்துலகில் மிகச் சிறந்த இடத்தைப் பெற்றவர்.

காயிதேமில்லத், சிராஜுல் மில்லத், சுலைமான் சேட், பனாத்வாலா, இ.அஹமது, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., முனிருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி, என்று எல்லா தலைவர்களிடமும் நட்பு கொண்டிருந்தவர்.

பல்வேறு நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என படைத்தளித்த சிறந்த எழுத்தாளர், மிகச் சிறந்த பேச்சாளர், நாடறிந்த நாவலர், மறுமலர்ச்சி ஆசிரியர் ஏ.எம். யூசுப் சாஹிப்.

அவரது வாழ்க்கை வரலாற்றை சமுதாயக் கவிஞர் எழுச்சிப்பாவலர் விழுப்புரம் ஷாஜி எம்.ஏ., பி.எட். எழுத முனைந்துள்ளார். இது தனிப்பட்ட ஒருவரின் வரலாறல்ல. தமிழ் இஸ்லாமிய சமுதாயத்தின் நலனுக்காக அயராது போராடியவரின் எழுச்சிமிகு வீரச் சரிதம். தமிழ் இஸ்லாமிய சமூகம் தன் நன்றியறிதலுக்குரிய ஒருவரை, அவரின் தியாகங்களை நினைவு கூர்ந்து வருங்கால சந்ததிக்காக ஏற்றிப் போற்றவேண்டிய அற்புத ஆவணம்.

எனவே, நாவலர் அவர்களைப் பற்றிய வாழ்க்கை நிகழ்வுகளோ, அவர் பற்றிய குறிப்புகளோ, துணுக்குகளோ, புகைப்படங்களோ தங்களிடமிருப்பின் தயவு செய்து அவற்றை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அனுப்ப வேண்டிய முகவரி

முபாரக் ரஸ்வி
[email protected]
[email protected]
A.M. Haneef
No 42 Jail Street
Palakkarai
Trichy - 620 008
தொலைபேசி எண் - 0431 2714338
+968 6951546.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X