2026ல் AI செய்ய போகும் சம்பவம் ரொம்ப பெரிசு.. 5 முக்கிய மாற்றங்கள்.. கூகுள் மிக முக்கிய ரிப்போர்ட்!
சியாட்டில்: AI இப்போது படுவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அதன் வளர்ச்சி பல மடங்கு வேகமாகவே இருக்கிறது. இதற்கிடையே 2026இல் ஏஐ வளர்ச்சி எப்படி இருக்கும்.. ஊழியர்கள் வேலை செய்யும் போக்கை ஏஐ எந்தளவுக்கு மாற்றும்.. இதனால் ஏற்படப்போகும் மாற்றம் என்ன என்பது குறித்து கூகுள் ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
கடந்த சில ஆண்டுகளாகவே ஏஐ படுவேகமாக வளர்ந்து வருகிறது. ஏஐ பல்வேறு வழிகளிலும் நமக்கு மிகப் பெரியளவில் கை கொடுத்து வகிரது. அதேநேரம் இது நாம் வேலை செய்யும் சூழலையும் வேகமாக மாற்றி அமைத்து வருகிறது. இதற்கிடையே 2026ம் ஆண்டு ஏஐ நாம் வேலை செய்யும் விதத்தை எப்படி மாற்றும் என்பது குறித்து சில பாயிண்டுகளை வெளியிட்டுள்ளது.

AI ஏஜெண்டுகள்
அந்த ரிப்போர்ட்டில், "AI ஏஜெண்டுகள் ஒரு டார்கெட்டை புரிந்து கொண்டு, பல கட்ட திட்டங்களைத் தானாகவே உருவாக்கி, உங்கள் நிபுணத்துவ வழிகாட்டுதல் கீழ் உங்கள் சார்பாகச் சரியாகச் செயல்படும்" என்று தெரிவித்துள்ளது. அதாவது ஏஐ வளர்ச்சி இந்தாண்டு அபரிவிதமாக இருக்கும் என்பதே அடிப்படை. அந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ள 5 விஷயங்கள் குறித்து நாம் பார்க்கலாம்!
உற்பத்தித் திறனை அதிகரிக்கும்
1. ஊழியர்கள் தங்கள் டாக்கெட்களை அடைய AI பெரியளவில் பயன்படுமாம். எப்போதும் திரும்பத் திரும்பச் செய்யும் வேலைகளை ஏஐ வசம் ஒப்படைத்துவிட்டு, முக்கியமான ஹையர் லெவல் வேலைகளில் ஊழியர்கள் கவனம் செலுத்தலாம். ஏற்கனவே, உலகின் பல்வேறு நிறுவனங்களிலும் இதுபோன்ற அடிப்படையான திரும்பத் திரும்ப செய்யும் வேலைகள் ஏஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
2. ஒரே அமைப்பில் பல்வேறு AI ஏஜெண்டுகள் ஒன்றிணைந்து, ஒருங்கிணைந்து வேலை செய்யலாம். இதன் மூலம் சிக்கலான செயல்முறைகளை எளிதாக ஆடோமேட் செய்ய முடியும். அதாவது பல்வேறு நிறுவனங்கள் இணைந்து ஒரு AIஐ உருவாக்கும்.. இது பிஸ்னஸுக்கு பெரியளவில் உதவியாக இருக்கும்.. பல நிறுவனங்கள் இணைந்து உருவாக்கும் ஏஐ ஏஜெண்டுகள் சிக்கலான வேலைகளையும் எளிதாக முடிக்கும் என்பதால் 2026ல் இந்த டிரெண்ட் அதிகரிக்கும்.
மொத்தமாக மாறும்
3. வழக்கமான சாட்பாட்களில் கஸ்டமர்கள் புகாரளிக்கும்போது, அதற்கு ரிப்ளை கிடைக்கக் கணிசமான நேரம் காத்திருக்க வேண்டி இருக்கும். ஆனால், வரும் ஆண்டில், AI ஏஜெண்டுகள் இதை மாற்றி அமைக்கும். ரிப்ளை அனைத்தும் உடனடியாகவும் தாமதம் இல்லாமலும் கிடைக்கும். இது வாடிக்கையாளர்களுக்குப் புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.
4. சைபர் செக்யூரிட்டியிலும் ஏஐ-க்கு முக்கிய பங்கு இருக்கும். இந்தக் காலத்தில் சைபர் பாதுகாப்பு வல்லுநர்களுக்கு ஏகப்பட்ட டேட்டாக்கள் மற்றும் அலர்ட்கள் வரும். அந்த அனைத்து டேட்டாக்களையும் அலர்ட்களையும் ஆய்வு செய்து, அதைப் பகுப்பாய்வு செய்வது ரொம்பவே கடினம். இந்த இடத்திலும் ஏஐ உள்ளே வருகிறது. இதன் மூலம் பிழைகள் 40% வரை குறைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக முக்கிய மாற்றம்
5. அடுத்து முக்கியமான மாற்றம் ஊழியர்களை இதற்கு ஏற்ப பயிற்றுவிப்பதாகும். கடந்தாண்டு பெரும்பாலான நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தில் முதலீடுகளை மட்டுமே செய்தன. இருப்பினும், ஊழியர்களை அதற்கேற்ப பயிற்றுவிக்கவில்லை. இந்தாண்டு அந்த மாற்றமும் ஏற்பட்டுவிடுமாம். பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்கள் ஏஐ உடன் இணைந்து வேலை செய்யும் வகையில் அவர்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள் என்று அந்த ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications