Simmam: சிம்ம ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் குரு, செவ்வாய், சுக்கிரன்.. வருமானம் பெருகும்
ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக மாற்றமானது மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். 2026 புத்தாண்டில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஜனவரி மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு 5, 6 இடங்களில் எல்லா கிரகங்களும் கூடியிருப்பது அதிர்ஷ்டத்தை தரக்கூடிய மாதமாகும். ராஜயோக கிரகமான செவ்வாய் முதலில் குருவின் பார்வையிலும், சுக்கிரனுடைய இணைவிலும் இருக்கிறார். முதல் 15 நாட்களுக்கு ராசிநாதனாகிய சூரியனும் குருவின் பார்வையில் 5 ஆம் இடத்தில் இருக்கிறார். 5, 11 ஆம் இடங்கள் வலிமையாக இருக்கின்றன.
அஷ்டமசனி
அஷ்டமத்து சனியானது உங்களுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பைக் கொடுக்கக் கூடாது. இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு நன்றாக இருக்கும் என்பதால் சனி பகவானை நினைத்து அச்சப்படத் தேவையில்லை. ராசிநாதன் ஜனவரி 15 ஆம் தேதிக்குப் பிறகு 6 ஆம் இடத்துக்கு வருகிறார். 6 ஆம் இடத்தில் இருக்கும் ராசிநாதன், 11 ஆம் இடத்தில் இருக்கும் குரு ஆகிய 3, 6, 11 ஆம் இடங்கள் வலிமை அடைந்தாலே அற்புதமான யோகங்கள் கிடைக்கும்.
நிரந்தர வருமானம்
இந்த ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு உயர்வானதாக இருக்கும். அடிப்படை கட்டமைப்புகளைச் செய்வீர்கள். பெரிய அளவுக்கு சோதனைகள் ஏற்படாது. ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைகள் நீங்கும். கடன் பட்டிருக்க கூடியவர்களுக்கு கடனை அடைப்பதற்கான ஒரு நிரந்தர வருமானங்கள் வந்து சேரும். ஜனவரி 15 ஆம் தேதிக்குப் பிறகு கடனை அடைக்கும் யோகம் உண்டாகும். எதிரிகளே நண்பர்களாகக் கூடிய மாதமாக இருக்கும்.
கடன் தீரும்
8 ஆம் இடத்தில் சனி இருந்தாலும் சூரியன், சுக்கிரன் இணைந்து சுபத்துவமாக சனியின் வீட்டில் இருப்பதால் கடன், நோய், எதிர்ப்புகள் விலக்கி வைக்கும் அமைப்பு ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும். வீட்டில் பெரியவர்களால் இருந்து வந்த அசுபச் செலவுகள் நீங்கும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்திகள், லாபங்கள், வடக்கு திசையை நோக்கிய பயணங்கள் ஏற்படும். அந்தப் பயணங்களின் மூலம் நன்மைகள் கண்டிப்பாக ஏற்படும்.
குடும்பம்
கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு பாதிப்புகள், சலிப்புத்தன்மை ஏற்படும். மாதத்தின் பிற்பகுதியில் எதையும் சமாளிக்கக்கூடிய யோகம் உண்டு. நண்பர்களிடம் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. கூட்டுத் தொழிலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நண்பர்கள் வெட்டிச் செலவுகளை வைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு மனக் கட்டுப்பாடு இல்லாமல் மாதத்தின் 20 ஆம் தேதிக்குப் பிறகு ஏதாவது நட்புகளுக்கு கசப்புகள் ஏற்படும். மற்றபடி பெரிய பாதிப்புகள் இல்லாத நல்ல மாதமாக இருக்கும்.
-
Rasi Palan This Week: ரிஷபம் ராசிக்கு பணம் கொட்டப் போகுது.. புது வேலை கன்ஃபார்ம் -
Rasi Palan This Week: மேஷம் ராசிக்கு இந்த வாரம் எப்படி இருக்கும்.. முழு பலன்கள் விவரம் இதோ -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
தமிழ் புத்தாண்டு பலன்: பெண்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 4 ராசியினருக்கு கொட்டும் அதிர்ஷ்டம் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்?












Click it and Unblock the Notifications