For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நுரை ததும்ப சுடச் சுட காபி குடிக்க யாருக்கெல்லாம் பிடிக்கும் தெரியுமா?

காபி குடித்தால் உற்சாகம் பொங்குகிறது. மனம் புத்துணர்ச்சி அடைகிறது. மூளை சுறுசுறுப்பு அடைகிறது. மங்கள செவ்வாய்தாங்க காரணம்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: காபி குடித்தால் உற்சாகம் பொங்குகிறது. மனம் புத்துணர்ச்சி அடைகிறது. மூளை சுறுசுறுப்பு அடைகிறது. இதற்கெல்லாம் யாருங்க காரணம்? இன்றைய நாயகர் மங்கள செவ்வாய்தாங்க காரணம். காற்று ராசிகளான மிதுன, துலாம், மற்றும் கும்ப ராசியில் செவ்வாய் நிற்க் பெற்றவர்கள் நுறை ததும்பும் காபியின் பிரியர்களாக இருப்பார்கள்.

தமிழ்நாட்டில் அறுபது வயதிற்கு மேற்பட்ட மக்கள் காலையில் கண்விழிப்பதே காபியின் முகத்தில்தான்
காலையில் ஒருமுறை - மதியம் ஒருமுறை சுட சுடகாபி உள்ளை சென்றால்தான் வேலையே ஓடும். அதிலும் ஆண்களுக்கு பைத்தியமே பிடித்துவிடும்.

Health Benefits of Coffee, Based on astrology

காபி ...அதுவும் முதல் டிகாக்ஷனில் போட வேண்டும். இரண்டு டைப் பீபரி கொட்டைகளையும் சம அளவு மிக்ஸ் பண்ணி சிலருக்கு சிக்ரியுடன், சிலருக்கு இல்லாமலேயும் சுட சுட அரைச்சு வாங்கணும்.. எவர்சில்வர் பில்டரில் குறைந்த பட்சம் மூணு ஸ்பூன் காபி பொடிய அமுக்கி போடணும். சிறிய ஜாலி மூடி போன்ற ஒன்றை கொண்டு மேலும் அமுக்கி விடணும். தள தள வென வெந்நீர் கொதித்தவுடன் , நேரே விடாமல் போக வர சுற்றி விட வேண்டும். 'ணங்' என்று செல்லமாக பில்டர் மூடியால் ஒரு தட்ட வேண்டும். அதிகமாய் தட்டி விட கூடாது. அப்போது தான் சொட்டு சொட்டாக டிகாக்ஷன் ஸ்ட்ராங்கா விழும். கொஞ்சம் கூட தட்டி விட்டாலோ , பொடி அமுக்கா விட்டாலோ டிகாக்ஷன் நீர்த்து போய்விடும்.

காபி போடுவது என்பதே ஒரு தனிக்கலை. அது எல்லொருக்கும் அவ்வளவு எளிதில் வந்துவிடுவதில்லை. ரொம்பவும் பால் இருக்க கூடாது. ரொம்பவும் கறுத்து போய் விட கூடாது. ஓரிரண்டு முறை பெரிதாக ஆற்ற வேண்டும்.

நல்ல சூடு அதன் சிறப்பு.. நுரை வந்து அதை பார்ப்பதே ஒரு அழகு. அளவாக சர்க்கரை போட வேண்டும் ஒரு மிதமான கசப்பு தான் அதன் தனித்துவம். முக்கியமாக, குடித்த பிறகும் நாக்கில் அதன் சுவை ஒரு மணி நேரத்திற்காவது தங்க வேண்டும்.

கும்பகோணம் டிகிரி காபியின் கதை:

கடந்த, 1960ல் அய்யச்சாமி ஐயர் மற்றும் பஞ்சாமி ஐயர் இருவரும் தங்கள் கடையில், கறந்த பாலில், நீர் சேர்க்காமல், காபி போட்டு கொடுக்க, அதன் சுவையில் மயங்கிய வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்தது. கோவில் நகரம் என்பதாலும், இசைக் கலைஞர்கள் கூடும் இடம் என்பதாலும், வெளியூரில் இருந்து வந்தோர், காபியின் சுவையில் இளைப்பாற, அதன் புகழ், உலகம் முழுக்க பரவியது.

Health Benefits of Coffee, Based on astrology

ஜோதிடமும் காஃபியும்:

கும்பகோணம் டிகிரியில் தொடங்கி ஸ்டார்பக்ஸ் எஸ்பிரஸ்ஸோ வரை பலர் இன்றைக்குக் காபி பைத்தியம் என்று சொன்னால் அது மிகையில்லை. ஆனால் பீத்தோவன், பெஞ்சமின் ப்ராங்களின் பல ஜீனியஸ்கள் கூட காபி பைத்தியங்களாக இருந்தது தெரிகிறது. அவ்வளவு ஏன். பாலிவுட் பிரபலங்களில் சாருக்கான் கூட காபி பிரியர் என்கிறது செய்தி.

காபி குடித்தால் உற்சாகம் பொங்குகிறது. மனம் புத்துணர்ச்சி அடைகிறது. மூளை சுறுசுறுப்பு அடைகிறது. இதற்கெல்லாம் யாருங்க காரணம்? இன்றைய நாயகர் மங்கள செவ்வாயதாங்க காரணம்.

Health Benefits of Coffee, Based on astrology

காலபுருஷ ராசியில் மேஷம் தலை, மூளை, ஆத்மா ஆகியவற்றை குறிக்கிறது. அதன் அதிபதிதான் காபி எனும் அற்புத பானத்தின் காரகர் ஆவார்.

காபியை தனியாக கருப்பு காபியாகவும் குடிப்பார்கள். அவ்வாறு குடிக்கும்போது செவ்வாய் தனித்த காரகம் பெறறுவிடுவார். ஆனால் பால் சேர்த்த காபியை பொருத்தவரை சந்திர மங்கள யோகத்தை தரும் செவ்வாய்-சந்திரன் இருவரும் காரகம் பெருகின்றனர்.

காபி யார் அதிகம் குடிப்பார்கள்?

1. செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்தவர்கள் எல்லோரும் அதிக காபி பிரியர்களாக இருப்பார்கள் என ஆய்வு கூறுகிறது. மேஷராசியை லக்னமாகவோ அல்லது சந்திர ராசியாகவோ கொண்டவர்கள் காபி அதிகம் பருகுவது ஆய்வில் தெரியவருகிறது.

2. மேஷத்தை லக்னதாக அல்லது ராசியாக கொண்டு செவ்வாய் அங்கு ஆட்சி பலமும் பெற்றுவிட்டால் அவர்கள் காபிக்காக உயிரை கூட கொடுப்பார்கள்.

3. விருச்சிகத்தை லக்னமாகவோ அல்லது ராசியாகவோ கொண்டவர்கள் மற்றும் விருச்சிகத்தில் செவ்வாய் ஆட்சி பெற்றவர்கள் கடும் காபி எனப்படும் பால் சேர்க்காத காபி பிரியர்களாக இருக்கிறார்கள். பாலை குறிக்கும் சந்திரன் இங்கு நீசமடைந்துவிடுவதால் பாலை சேர்பதில்லை போலும்.

Health Benefits of Coffee, Based on astrology

4. ஜாதகத்தில் குரு சந்திர சேர்க்கை பெற்றவர்கள், குரு வீட்டில் செவ்வாய், செவ்வாயின் வீட்டில் குரு என பரிவர்தனை பெற்றவர்கள், குரு சாரத்தில் செவ்வாய் நிற்க்க பெற்றவர்கள், குருவீட்டில் சந்திரன் நின்று செவ்வாய் பார்வையால் சந்திர மங்கள யோகம் பெற்றவர்கள் ஓரிரு முறை காபி குடித்தாலும் சுவை சிறிதும் குறையாத பில்டர் காபி பிரியர்களாக இருக்கிறார்கள்.

5. மீன லக்னம், துலா லக்னம் ஆகியவற்றிர்க்கு போஜன ஸ்தானாதிபதியாக செவ்வாய் அமைந்து ஆட்சி உச்சம் பெறுவது அல்லது லக்னத்திலேயே நிற்பது போன்றவை சுவையான காபியின் அடிமைக்கு ஆதாரமாகும்.

6. காற்று ராசிகளான மிதுன, துலாம், மற்றும் கும்ப ராசியில் செவ்வாய் நிற்க் பெற்றவர்கள் நுறை ததும்பும் காபியின் பிரியர்களாக இருப்பார்கள்.

7. சனியின் மகரத்தில் சுக்கிர சேர்கை பெறாமல் செவ்வாய் உச்சம் பெற்றவர்கள் சுவையை பற்றியெல்லாம் கவலை படாமல் காபி என்று ஏதோ ஒன்றை குடித்துக்கொண்டே இருப்பார்கள்.

8. ராகுவோடு செவ்வாய் சேர்க்கை பெற்றவர்கள் கப்பிச்சினோ, எக்பிரஸோ என விதவிதமாக காபி குடிப்பார்கள். சுக்கிர சேர்க்கையும் பெற்றுவிட்டால் ஐஸ் காபியை விரும்பி குடிப்பார்கள்.

9. மேஷத்தில் உச்ச சூரியனோடு செவ்வாய் இருக்க பெற்றவர்கள், சிம்மத்தில் செவ்வாய் நிற்க்க பெற்றவர்கள் பித்தளை டம்ளரில் காபி குடிக்கும் பிடிவாதகாரர்கள் ஆவர்.

அட பேசிக்கிட்டே இருக்கும்போது எங்க கிளம்பிட்டிங்க? பால் வாங்கவா? அதுக்கு முன்னாடி டிகாக்ஷன் போடனுங்க.

English summary
Coffee is actually very healthy.It is loaded with antioxidants and beneficial nutrients that can improve your health.The studies show that coffee drinkers have a much lower risk of several serious diseases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X