Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி பென்சன் குறைக்கப்படாது.. 1 ரூபாயில் கூட கைவைக்க மாட்டாங்க.. மோடி அதிரடி அறிவிப்பு.. சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு ஒரு முக்கிய உத்தரவு மூலம் பெரும் நிவாரணத்தை வழங்கியுள்ளது. ஓய்வூதியத்தை இனி குறைக்க முடியாது என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

முன்னதாக, ஓய்வு பெற்ற பல ஆண்டுகளுக்குப் பிறகும், தவறான கணக்கீடு என்று கூறி ஓய்வூதியங்களைக் குறைப்பதோ அல்லது திரும்பப் பெறுவதற்கான நோட்டீஸ் அனுப்புவதோ வழக்கமாக இருந்தது. இந்த நடைமுறைக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

jobs job old pension scheme pension

ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் ஒருமுறை இறுதி செய்யப்பட்டால், அதில் வெளிப்படையான எழுத்துப் பிழை அல்லது கணக்கீட்டுப் பிழை கண்டறியப்பட்டால் தவிர, அதை மாற்றவோ அல்லது குறைக்கோ முடியாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் அதிரடி மூவ்

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை (DoPPW) இந்த உத்தரவை அக்டோபர் 30, 2025 அன்று வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஏற்பாட்டின்படி, ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஏதேனும் பிழை கண்டறியப்பட்டால், DoPPW-ன் ஒப்புதல் இல்லாமல் அதை குறைக்க முடியாது.

DoPPW அலுவலக வெளியிட்ட அறிக்கையின்படி, "CCS (ஓய்வூதியம்) விதிகள், 2021-ன் விதி 66(1)-ன் கீழ் ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் ஒருமுறை இறுதியாக அங்கீகரிக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட பிறகு, எழுத்துப் பிழை கண்டறியப்பட்டாலன்றி, ஓய்வூதியதாரருக்கு பாதகமாக அதை திருத்த முடியாது."

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை உத்தரவு

மேலும், அந்தத் துறை, "ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் அங்கீகரிக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அத்தகைய பிழை கண்டறியப்பட்டால், DoPPW-ன் முன் அனுமதி இல்லாமல் எந்தக் குறைப்பும் செய்யப்படாது" என்று குறிப்பிட்டுள்ளது.

தவறாக அதிகப்படியான ஓய்வூதியம் வழங்கப்பட்டால் என்ன நடக்கும்?

ஓய்வூதியதாரர் தனது சொந்த தவறு அல்லது தவறான தகவல்கள் காரணமாக இல்லாமல், தவறுதலாக அதிகப்படியான பணம் பெற்றிருந்தால், அந்தத் தொகையை திரும்பப் பெற வேண்டுமா அல்லது தள்ளுபடி செய்ய வேண்டுமா என்பதை சம்பந்தப்பட்ட அமைச்சகம் முடிவு செய்ய வேண்டும்.

ஓய்வூதியத்தில் எந்தக் குறைப்பும் செய்யப்படாது

இதற்கு, அமைச்சகம் செலவுத் துறையுடன் கலந்தாலோசிக்க வேண்டும். தொகையை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டால், ஓய்வூதியதாரருக்கு இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்படும். இந்த காலக்கெடுவுக்குள் ஓய்வூதியதாரர் தொகையை செலுத்தத் தவறினால், எதிர்கால ஓய்வூதிய கொடுப்பனவுகளில் இருந்து தவணைகளில் அந்தத் தொகை கழிக்கப்படலாம்.

அலுவலக குறிப்பாணையில், "ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியத்தை திருத்திய பிறகு, ஒரு ஓய்வூதியதாரருக்கு அதிகப்படியாக பணம் வழங்கப்பட்டுள்ளது என்றும், இந்த அதிகப்படியான பணம் ஓய்வூதியதாரர் வழங்கிய தவறான தகவல்களால் ஏற்படவில்லை என்றும் கண்டறியப்பட்டால், அதை வசூலிக்க வேண்டுமா அல்லது தள்ளுபடி செய்ய வேண்டுமா என்பதை முடிவு செய்ய சம்பந்தப்பட்ட அமைச்சகம் செலவுத் துறையுடன் கலந்தாலோசிக்க வேண்டும்" என்று மேலும் கூறப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையாக, நோக்கமாக இது இருந்தது. தற்போது மத்திய அரசு அந்த கோரிக்கையை நிறைவேற்றி உள்ளது. இதனால் பல லட்சம் ஓய்வூதியதாரர்கள்.. இனி ஓய்வுபெறப்போகும் ஊழியர்கள் பெரிய அளவில் பலன் அடைவார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+