Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காதலர் தினத்தை முன்னிட்டு இணையதளங்களை கலக்கும் அசத்தல் மீம்ஸ்கள்!!

காதலர்தினத்தை முன்னிட்டு மீம்ஸ்கள் மூலம் இணையதளவாசிகள் தங்களின் ஃபீலிங்ஸ்ஸை கொட்டி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: காதலர் தின விழா வரும் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சினிமா டையலாக்குகளையும் சினிமா காட்சிகளையும் வைத்து இணையதளங்களில் இளைஞர்கள் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

பாதிரியார் வேலண்டைன் நினைவாக காதலர் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. காதலர் தின விழா பெரும்பாலும் இளைஞர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

காதலன் மற்றும காதலிக்கு காதலர் தினத்தன்று கொடுக்க இப்போதே இளசுகள் பரிசுப்பொருட்களை பார்த்து பார்த்து தேர்வு வருகின்றனர். ஆனால் இதுவரை காதல்வயப்படாத இளைஞர்கள் சிங்கிளாக இருப்பது தான் சுகம் எனக்கூறி மீம்ஸ்களை இணையதளத்தில் வளையவிட்டு வருகின்றனர். அவற்றில் சில...

காதலில் விழுந்தால் புஸுதான்..

காதலில் விழுந்தால் புஸுதான்..

காதலில் விழுந்தால் சாக்லேட் கூட கிடைக்காது. தனியாக இருந்தால் நமக்கே எல்லாம் என்பதை கூறும் விதமாக இந்த மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.

சிங்கிளா இருக்குறதுதான் கெத்து

சிங்கிளா இருக்குறதுதான் கெத்து

காதல் வயப்பட்டவர்கள் காதலர் தினத்தில் கெத்துக் காட்டலாம். ஆனால் நிஜத்தில் அழுவார்கள் என்பதைப் போல் சென்னை 28 படத்தில் ஜெய் அழுவதை போட்டு கலாய்த்துள்ளனர் நெட்சன்கள்

சொப்பன சுந்தரியை யாரு இப்போ வச்சிருக்கா?

சொப்பன சுந்தரியை யாரு இப்போ வச்சிருக்கா?

சொப்பன சுந்தரியை யாரு இப்போ வச்சிருக்கா காமெடியை வைத்து இந்த மீம்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காதலில் விழுந்தவர்கள் காதலர் தினத்துக்கு பிளான் பண்ணுவதையும், காதலில் விழாதவர்கள் பிளான் குறித்து கேட்டதற்கு டென்ஷன் ஆவதைய்ம காட்டுவதாக உள்ளது இந்த மீம்ஸ்.

காதல் காலம் பிளாஷ்பேக்

காதல் காலம் பிளாஷ்பேக்

பாட்ஷா பட சீனை வைத்து மீம்ஸ் உருவாக்கிகயுள்ளனர். காதலில் விழுந்தவர்கள் சிங்கிளாக இருப்பவர்களை கேள்வி கேட்பது போலவும் அதற்கு காதலைப் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று சிங்கிளாக இருப்பவர் தனது ஃபிளாஷ்பேக்குக் போவதுமாக காட்டுகின்றனர் வலைஞர்கள்.

தலையில துண்டு

தலையில துண்டு

இந்த ஆண்டும் காதலில் விழ வாய்ப்பு கிடைக்காததால் சிங்கிளாக இருப்பவர்கள் தலையில் துண்டைப் போட்டுள்ளதை காட்டுவதாக இந்த மீம்ஸ் உருவாக்கியுள்ளனர் நெட்சன்கள்

காதலிச்சா வலிதான்

காதலிச்சா வலிதான்

லவ் ப்ரபோஸ் பண்றதுக்கு முன்னாடி சுதந்திரமாக சந்தோஷமாக சிரித்துக்கொண்டிருந்ததையும் ப்ரபோஸ் பண்ணிய பிறகு அடிவாகி மூலையில் உட்காந்திருப்பதையும் கத்திப்பட சீன்களை வைத்து இந்த மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

ஃபிரன்ட்ஸ நினைச்சதான் வருத்தம்

ஃபிரன்ட்ஸ நினைச்சதான் வருத்தம்

வேலன்டைன்ஸ் டேக்கு காதலி இல்லைன்னா கூட வருத்தம் இல்லை. ஆனால் நண்பர்கள் என்ன பிளான் என்று கேட்கும் போது தான் வருத்தமாக இருக்கும் என்று தசாவதாரம் கமலை வைத்து இந்த மீம்ஸை உருவாக்கியுள்ளனர்.

சிங்கிள்டா கெத்துடா...

சிங்கிள்டா கெத்துடா...

வேலன்டைன்ஸ் டேகுகு பொன்னுங்களோட சுத்த நாம என்ன கமிட்டடா... சிங்கிள்ஸ்.. சிங்கிள்தான் கெத்து என எஸ்ஜே.சூரியவை வைத்து காட்டுகின்றார் இந்த நெட்டிசன்.

சிங்கிள் தான் கெத்து சார்

சிங்கிள் தான் கெத்து சார்

ராஜா ராணி படத்தை வைத்து இந்த மீம்ஸை உருவாக்கியுள்ள இணையதளவாசி காதலர் தினத்தன்று ஆபிஸ் போவதும், சிங்கிள் தான் கெத்து எனக் கூறி இங்கிரீமென்ட் வாங்குவதாகவும் கூறியுள்ளார்.

பிரியாணிதான் முக்கியம்

பிரியாணிதான் முக்கியம்

காதலர் தினம் நெருங்கும் நிலையில் வேலன்டைஸ் டேவை விட எனக்கு பிரியானிதான் முக்கியம் என கூறும் வகையில் இந்த மீம்ஸ்ஸை உருவாக்கியுள்ளார் இந்த நெட்டிசன்.

எப்போதுமே சிங்கிள் தான்

எப்போதுமே சிங்கிள் தான்

போன வருஷமும் சிங்கிள்தான், இந்த வருஷமும் சிங்கிள் அடுத்த வருஷ வேலன்டைஸ்டேவுக்கும் சிங்கிள் தான் என காட்டுகிறார் இந்த மீம்ஸ்கலைஞர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+