Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனநாயகன் விஜய்க்கு ஆதரவாக.. கொத்தாக குதித்த காங்கிரஸ்.. கடுப்பான திமுக.. ராகுலிடம் புகாரளிக்க திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனநாயகன் படத்திற்கும் தவெக தலைவர் விஜய்க்கும் தீவிரமாக ஆதரவு அளித்து காங்கிரஸ் நிலைப்பாடு எடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த நிலைப்பாடு திமுக தரப்பை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளதாம். அதோடு டெல்லியில் ராகுல் காந்தி தரப்பிடம் புகார் அளிக்கவும் திமுக தரப்பு திட்டமிட்டு உள்ளதாம்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பல மாநிலங்களில் உள்ளூர் தலைவர்களை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வி அடைந்து இருக்கிறார். உள்ளூர் தலைவர்கள் தனிக்காட்டு ராஜாக்கள் போல செயல்பட்டு பின்னர் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கே காரணமாக மாறி உள்ளனர்.

Vijay tvk jananayagan

இப்போது தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தனி தனி தீவுகளாக செயல்பட தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக காங்கிரஸ் மீது ஸ்டாலின் கொஞ்சம் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை கடந்த சில வாரங்களுக்கு முன் சந்தித்தது காங்கிரஸ் குழு. தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் கேட்ட இடங்களின் எண்ணிக்கையையும் ஸ்டாலின் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

ஸ்டாலின் கடுப்பு

இந்திய தேசிய காங்கிரஸின் தொழிற்துறை பிரிவுத் தலைவராகவும், அக்கட்சியின் தரவு பகுப்பாய்வுப் பிரிவின் தலைவராகவும் செயல்பட்டு வரும் பிரவீன் சக்கரவர்த்தி மீது காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தவறியதையும் ஸ்டாலின் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

சமீபத்திய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார உத்திகளை வகுப்பதில் பிரவீன் சக்கரவர்த்தி முக்கியப் பங்காற்றினார். முக்கியமாக தற்போது ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு விவகாரத்தில் ராகுல் காந்திக்கு தகவல்களை திரட்டியதில் அவருக்கு முக்கிய பங்கு உள்ளது. இவர் தவெக விஜய்க்கு நெருக்கம், அதோடு ஆதரவாக பேசி வருகிறார். அதேபோல் மாணிக்கம் தாக்கூர் தவெக விஜய்க்கு ஆதரவாக இருப்பது போல பேசி வருகிறார்.

ஜனநாயகன் ரிலீஸ்

இப்படிப்பட்ட நிலையில்தான் ஜனநாயகன் ரிலீஸ் விவகாரத்திலும் காங்கிரஸ் விஜய்க்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்துள்ளது. திரையுலகமே பெரிதாக விஜயை ஆதரிக்காத நிலையில்.. காங்கிரஸ் இதில் விஜய்க்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளது. நடிகர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரத்தின் துஷ்பயோகம் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது. அரசியல் கருத்து வேறுபாடுகள் புரிந்துகொள்ளக்கூடியவை என்றாலும், ஒரு கலைஞனின் படைப்பை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

அரசியல் ஆதாயங்களுக்காகத் திரைப்படங்களுக்குத் தணிக்கை செய்வதைத் தமிழ்நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். கலையும், பொழுதுபோக்கும் அரசியல் போர்களில் காய்களாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அதிகாரிகளுக்கு நீங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக விஜய்-ன் திரைப்படம் தாமதங்களைச் சந்தித்து வருகிறது, இது தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் அநீதியானது. கலையிலிருந்து அரசியலை விலக்கி வைப்போம், படைப்புச் சுதந்திரத்தை மதிப்போம்.

மோடி அவர்களே, நடிகர் விஜய்யை அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்கொண்டு உங்கள் 56 அங்குல மார்பு என்ற கூற்றை நிரூபியுங்கள். உங்கள் மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்ம் என்று கூறி உள்ளது.

ஸ்டாலின் கோபம்

காங்கிரசின் இந்த தொடர் நிலைப்பாடுகள் தொடர்பாக டெல்லி தரப்பிடம்.. முக்கியமாக ராகுலிடம் புகார் அளிக்க திமுக முடிவு செய்துள்ளதாம். ஏற்கனவே கூட்டணி பேச்சுவார்த்தையில் திமுக - காங்கிரஸ் இடையே மோதல் உள்ளது. காங்கிரஸ் 60 இடங்களை கேட்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸின் இந்த கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தாலும், எவ்வித உறுதியையும் அளிக்கவில்லை. திமுக தனது தொகுதிப் பங்கீட்டுக் குழுவை அமைத்த பின்னரே பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார். சரியான நேரத்தில் இவை நடக்கும் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூட்டணி உறுதியாக இருப்பதாக இரு கட்சிகளும் பொதுவெளியில் தெரிவித்தாலும், அதிக இடங்கள், அதிகாரப் பங்கீடு கோரிக்கைகள் பேச்சுவார்த்தைகளை சவாலாக அமையலாம். தமிழகத்தின் பெரிய கூட்டணி முக்கியமான தேர்தலை எதிர்கொள்ள இருப்பதால், வரும் வாரங்களில் தீவிரமான பேரம்பேசல்கள் நடக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

லிஸ்ட் ரெடி

இதனால் காங்கிரசுக்கு திமுக யார் என்று காட்டும் விதமாக ஸ்டாலின் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்ய உள்ளாராம். ஏற்கனவே உளவுத்துறை, pen அமைப்பு மூலம் எடுக்கப்பட்ட லிஸ்டை வைத்து வேட்பளார்களை தேர்வு செய்து பணிகளை தொடங்க உள்ளாராம். இதை பார்த்து காங்கிரஸ் இறங்கி வந்தால் வரட்டும்.. இல்லையென்றால் பார்த்துக்கொள்ளலாம் என்று ஸ்டாலின் நினைக்கிறாராம். காங்கிரஸ் மட்டும்தான் இறங்கி அடிக்குமா.. நாங்களும் இறங்கி அடிப்போம் என்று ஸ்டாலின் நினைப்பதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+