Jana nayagan: ஜனநாயகன் டிரெய்லரில் இதை கவனிச்சீங்களா? ஜெமினி ஏஐ சிம்பல்.. மண்டைல இருந்த கொண்டைய மறந்துட்டாங்களே
சென்னை: விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் (jana nayagan trailer) நேற்று மாலை வெளியானது. இந்த டிரெய்லருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் சிலர் இதில் உள்ள குறைகளை சொல்லி வருகிறார்கள். குறிப்பாக டிரெயலரில் ஒரு சீனில் ஜெமினி ஆப் சிம்பல் வருவது, எடிட்டிங்கை கூட சரியாக செய்யவில்லை என கிண்டல் செய்துள்ளனர்.
ஏற்கனவே பாலய்யாவின் பகவந்த் கேசரி திரைப்படத்தின் டிரெய்லர் போலவே பல காட்சிகள் அப்படியே வருவதாக சிலர் விமர்சனம் செய்து வந்த நிலையில் தற்போது ஒரு சீனில் ஜெமினி ஆப் சிம்பல் வருவது மேலும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. எடிட்டிங்கை கூட சரியாக செய்ய மாட்டீங்களா? என்ற நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் அரசியலுக்கு வருவதாக கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இதையடுத்து ஜனநாயகன் என்ற படம் தான் எனது கடைசி படம் என்றும், இனிமேல் அரசியலில் மட்டுமே ஈடுபட போவதாகவும் கூறினார்.
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்குபவராகவும், வசூல் மன்னன் விஜய் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் அவர் சினிமாவில் இருந்து விலகும் முடிவுக்கு ரசிகர்கள் வருத்தமடைந்தனர். இதனால் கடைசி படமான ஜனநாயகன் படத்தை கொண்டாடி தீர்க்க முடிவு செய்தனர். இந்த படத்தில் விஜய்யுடன் நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நரேன் என பலர் நடித்துள்ளனர்.
ஜனநாயகன் டிரெய்லர் வெளியானது
இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கேவிஎன் புரொடெக்ஷன் தயாரித்துள்ள இந்த படம் வரும் 9 ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆக உள்ளது. படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் இருந்த நிலையில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரமாண்டமாக நடந்தது.
இந்த நிலையில் பலரும் எதிர்பார்த்த ஜனநாயகன் டிரெய்லர் நேற்று மாலை 6.45 மணிக்கு ரிலீஸ் ஆனது. இதில் விஜய் பல அரசியல் வசனங்களும், அதிரடி காட்சிகளும் இடம்பெற்று இருந்தன. விஜய் ரசிகர்கள் பலரும் டிரெய்லரை கொண்டாடி வருகிறார்கள். டிரெய்லருக்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் விஜய் பேசிய டயலாக்குகளை ரசிகர்கள், டிவிகே தொண்டர்கள் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
டிரெய்லர் காட்சியில் புஸ்சி ஆனந்த், அருண் ராஜ்

குறிப்பாக விஜய்யின் பெயர் டிவிகே (அதாவது தளபதி வெற்றி கொண்டான்) என்பதையும், டிவிகே கொடியில் உள்ள இரட்டை யானைகள், ஒரு காட்சியில் புஸ்சி ஆனந்த் மற்றும் அருண் ராஜ் ஆகியோர் வரும் காட்சிகளை இணையத்தில் பகிர்ந்து டிரெண்ட் செய்து வருகிறார்கள். இதற்கிடையே சிலர் பகவந்த் கேசரி படத்தை தான் ரீமேக் செய்தீர்கள் என்று நினைத்தால் டிரெய்லரை கூட இப்படி பிரேம் டூ பிரேம் காப்பி செய்து இருக்கிறார்கள் என்று விமர்சிக்க தொடங்கினர்.

டிரெய்லரில் ஜெமினி ஆப் சிம்பல்
இது எல்லாத்திற்கும் மேலாக இப்போது இணையத்தில் ஜெமினி ஆப்பில் எடிட்டிங் செய்ததாக டிரெய்லரி உள்ள ஒரு சீனை ஸ்கீர்ன்ஷாட் எடுத்து நெட்டிசன்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளார். குறிப்பாக டிரெயலரில் ஒரு சீனில் ஜெமினி ஆப் சிம்பல் வருவது போல காட்சி உள்ளது. இதனை பகிரிந்து எடிட்டிங்கை கூட சரியாக செய்யவில்லை என கிண்டல் செய்துள்ளனர்.
ஏற்கனவே பாலய்யாவின் பகவந்த் கேசரி திரைப்படத்தின் டிரெய்லர் போலவே பல காட்சிகள் அப்படியே வருவதாக சிலர் விமர்சனம் செய்து வந்த நிலையில் தற்போது ஒரு சீனில் ஜெமினி ஆப் சிம்பல் வருவது மேலும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. எடிட்டிங்கை கூட சரியாக செய்ய மாட்டீங்களா? என்ற நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
இந்த காட்சி உண்மையில் படத்தில் உள்ள காட்சி தானா அல்லது டிரெய்லர் கட் செய்வதற்காக எடிட் செய்த போது அதில் உள்ள சிம்பலை நீக்க மறந்துவிட்டார்களா என்பது தெரியவில்லை என சிலர் கமெண்ட் தெரிவித்துள்ளனர்.
-
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை! -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா!












Click it and Unblock the Notifications