உங்க வாக்குரிமை கேன்சல் ஆகிடும்? ஃபார்ம் கவனமா நிரப்புங்க! SIRல் என்ன செய்யணும்! இந்த வீடியோ பாருங்க
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (SIR) பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் பணிகள் எப்படி நடைபெறும், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று இங்கே விளக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் சிறப்புத் திருத்தப் பணியின் ஒரு பகுதியாக, வாக்காளர்களின் பெயர்கள் 2002, 2003, 2004 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடப்படுகின்றன. இந்த வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9 அன்று வெளியிடப்பட உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் 2026 பிப்ரவரி 7 அன்று வெளியாகும்.
தேர்தல் பதிவு அலுவலர்கள் (EROs) மற்றும் உதவி தேர்தல் பதிவு அலுவலர்கள் (AEROs) 2025 அக்டோபர் 27 நிலவரப்படி ஒவ்வொரு வாக்காளருக்கும் தனிப்பட்ட எண்ணிடப்பட்ட படிவங்களை அச்சிடுவார்கள். இந்தப் படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் (BLOs) அனைத்து வாக்காளர்களுக்கும் விநியோகிக்கப்படுகின்றன.
வீடியோ
இந்தத் திட்டத்தின் கீழ் பணிகள் எப்படி நடைபெறும், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று இங்கே விளக்கப்பட்டு உள்ளது. இதற்கான முழு விளக்கம் இங்கே கொடுக்கப்பட்டு உள்ள வீடியோவில் விளக்கப்பட்டு உள்ளது.
அதிகாரிகள் இந்தப் படிவங்களில் தற்போதைய வாக்காளர் பட்டியலிலிருந்து பெறப்பட்ட அனைத்து விவரங்களும் இருக்கும். BLO-க்கள் இந்தப் படிவங்களை வாக்காளர்களுக்கு விநியோகிக்கும்போது, அதில் தங்கள் பெயர் 2003 வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை அனைவரும் சரிபார்க்க வேண்டும். பெயர் இருந்தால், கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்கத் தேவையில்லை.
பெயர்கள் பட்டியலில் இல்லாதவர்கள், ஆனால் அவர்களது பெற்றோரின் பெயர்கள் அதில் இருந்தால், அவர்களும் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை. அடையாளச் சான்று மட்டும் போதுமானது. 2002, 2003, 2004 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சரிபார்ப்பதற்காகக் கிடைக்கும்.

இந்தப் படிவங்களைச் சரிபார்த்த பிறகு, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9 அன்று வெளியாகும். அதன் பிறகு, நீக்கப்படுவதற்கு எதிரான கோரிக்கைகளும், சேர்க்கப்படுவதற்கு எதிரான மூன்றாம் தரப்பு ஆட்சேபனைகளும் 2025 டிசம்பர் 9 முதல் 2026 ஜனவரி 8 வரை ஏற்றுக்கொள்ளப்படும். இந்தக் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் குறித்த விசாரணைகள் டிசம்பர் 9 அன்று தொடங்கி 2026 ஜனவரி 31 க்குள் முடிக்கப்படும். அதன் பிறகு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7 அன்று வெளியிடப்படும்.
SIR க்காக வழங்கப்படும் கணக்கெடுப்புப் படிவத்தை பொதுமக்கள் நிரப்பிக் கொடுக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும். இதுகுறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறுகையில், "முகவரி மாற்றம் செய்திருந்தாலும் அவர்கள் பெயர் பட்டியலில் இடம் பெறாது. அதாவது, நீங்கள் ஆவணத்தை வாங்க வீட்டில் இல்லாமல் போய், அதை நிரப்ப முடியாமல் போனால் உங்கள் பெயர் நீக்கப்படும்" என்றார்.
பார்ம் அவசியம்
அதன்பின் மேல்முறையீடு செய்ய வேண்டும். இல்லையென்றால் புதிதாக விண்ணப்பம் செய்ய வேண்டும். அதோடு ஒவ்வொரு வாக்காளருக்கும் இரண்டு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படும். இந்த படிவங்களை நகல் எடுக்க அனுமதி இல்லை. இரண்டு படிவங்களையும் அடித்தல், திருத்துதல் அல்லது மேலெழுதுதல் இல்லாமல் தெளிவாக நிரப்ப வேண்டும்.
படிவத்துடன் வெள்ளை நிறப் பின்னணியுடன் கூடிய சமீபத்திய வண்ணப் புகைப்படத்தை இணைக்க வேண்டும். 2004-ம் ஆண்டுக்குப் பிறகு வாக்காளராகப் பதிவு செய்தவர்கள், 2004-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் பெற்றோரின் விவரங்களை கட்டாயம் வழங்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட இரண்டு படிவங்களையும் புகைப்பட நகல் எடுத்து அல்லது தெளிவாகப் புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்வது முக்கியம். உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையென்றால், மேல்முறையீட்டுக்கு இந்தப் பிரதிகள் அவசியமாக இருக்கும்.
இரண்டு படிவங்களையும் BLO-விடம் திருப்பிக் கொடுக்கும்போது, ஒரு படிவத்தில் BLO-வின் முத்திரையையும், கையொப்பத்தையும் பெற்று, அதை ஒப்புகைச் சீட்டாகப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். இது மிகவும் அவசியமான ஒன்று.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications