Exhibition போட்டா கூட கூட்டம் வரும்.. தவெகவுக்கு அஸ்திவாரமே இல்ல.. விஜய்யை மறைமுகமாக சாடிய உதயநிதி!
சென்னை: தவெகவுக்கு அஸ்திவாரமோ, கொள்கையோ இல்லை என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இன்று அரசியலில் சிலர் அடித்தளம் இல்லாமலேயே வர முயற்சிக்கிறார்கள் என்று கூறிய உதயநிதி, கொள்கையற்ற ஒரு கூட்டமும், பாசிச கட்சியும் தமிழ்நாட்டை குறி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், புதிதாக அரசியல் கால் பதித்துள்ள விஜய்க்கு இளைஞர்களின் ஆதரவு அதிகமாக இருக்கிறது. அதேபோல் விஜய்யும் தொடர்ச்சியாக திமுகவை மட்டும் சீண்டி வருவதால், சோசியல் மீடியாவில் திமுக மற்றும் தவெக தொண்டர்கள் மத்தியில் காரசார விவாதம் நடந்து வருகிறது. ஆனால் திமுக தலைவர்கள் விஜய்யை பெயர் சொல்லிக் கூட விமர்சிப்பதில்லை.

இந்த நிலையில் சென்னையில் திமுகவின் 75ஆவது ஆண்டு அறிவுத் திருவிழா வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், திமுகவை வீழ்த்த நினைப்பவர்களின் திட்டம் தமிழ்நாட்டில் ஒரு போதும் பலிக்காது என்பதை உணர்த்தும் இடம் வள்ளுவர் கோட்டம். இது வெறும் வள்ளுவர் கோட்டம் அல்ல. திமுகவின் வெற்றிக் கோட்டம்.
இன்று அரசியலில் சிலர் அடித்தளம் இல்லாமலேயே வர முயற்சிக்கிறார்கள். ஊரில் ஆண்டுக்கு ஒரு முறை தாஜ்மஹால், ஐஃபிள் டவர் போன்ற செட் போட்டு கண்காட்சி நடக்கும். அதனை பார்க்க மிகப்பெரிய கூட்டம் வரத்தான் செய்யும். ஆனால் அது வெறும் அட்டை. அதற்கு எந்த அஸ்திவாரமும், கொள்கையும் இருக்காது. சும்மா தட்டினால் போதும்.. சிறு காற்று அடித்தாலும் கீழே விழுந்துவிடும்.
அவர்களுக்கு சொல்லிக் கொள்வது என்னவென்றால், திமுக என்பது தியாகத்தாலும், போராட்டத்தாலும் உருவானது. எமர்ஜென்சியை பார்த்த இயக்கம் திமுக. எமர்ஜென்சி காலத்தில் மத்திய அரசு மாநிலக் கட்சியை தடை செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள். உடனே அதிமுக என்ன செய்தார்கள் என்றால், கட்சிப் பெயரை மாற்றிவிட்டார்கள். அதிமுகவை அனைத்து இந்திய அதிமுக என்று மாற்றினார்கள்.
இதுதான் திமுக மற்றும் அதிமுக இடையிலான வித்தியாசம். ஆனால் கலைஞர் வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் திமுக தான் என்று நின்றார். கலைஞர் அன்று காட்டிய அதே உறுதியுடன் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். திமுகவை கொள்கை மட்டுமே வழிநடத்தி வருகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமியை பயம் வழிநடத்துகிறது. எடப்பாடி பழனிசாமியை பார்த்தால் இரு விஷயங்கள் மட்டுமே நினைவுக்கு வருகின்றன.
ஒன்று கார்.. இன்னொன்று கால்.. கொள்கையற்ற ஒரு கூட்டமும், பாசிச கட்சியும் தமிழ்நாட்டை குறி வைத்துள்ளது. திமுக நடத்துவது அறிவுத் திருவிழா. அதிமுக நடத்தினால் அது அடிமைத் திருவிழா. திராவிடம் என்று கேட்டாலே பாஜகவின் பாசிசம் பதறுகிறது. அனைத்து மாநிலங்களிலும் நிலைமை மாறுகிறது என்று தெரிவித்தார்.
-
தேர்தல் பரப்புரை அனுமதிக்கும் திமுக அரசுக்கும் என்ன சம்பந்தம்? - விஜய்க்கு மா.சுப்பிரமணியன் கேள்வி -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
திமுக VS அதிமுக.. சென்னையில் 12 இடங்கள் உள்பட 121 தொகுதிகளில் நேரடி போட்டி.. மாவட்ட வாரியாக முழு லிஸ்ட் -
நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விஜய்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு! -
சிவகார்த்தி, அஜித் குடும்பம் பத்தி தவெகவினர் இழிவா பேசினப்ப எங்கிருந்தீங்க - விஜய்யை விளாசிய சீமான் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
விஜய் பற்றிய சர்ச்சைகளுக்கு, வாணி போஜன் சொன்ன அந்த வார்த்தை.. ஓபனா பேசிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ் -
திவ்யா சத்யராஜ், வைஷ்ணவி, ராஜீவ் காந்தி, கனிமொழி, போஸ் வெங்கட்டுக்கு சீட் ஏன் கிடைக்கவில்லை? -
அட.. இதை கவனிச்சீங்களா? தமிழகத்திலேயே 2 குடும்பம் மட்டும்தான்! திமுகவில் களமிறங்கும் தந்தை - மகன்கள் -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன் -
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி











Click it and Unblock the Notifications