அட.. இதை கவனிச்சீங்களா? தமிழகத்திலேயே 2 குடும்பம் மட்டும்தான்! திமுகவில் களமிறங்கும் தந்தை - மகன்கள்
சென்னை: 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின். இந்த தேர்தலில் பல அமைச்சர்களே கழற்றி விடப்பட்டிருக்கின்றனர். 60க்கும் மேற்பட்ட புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்திலேயே இரண்டு இடங்களில் மட்டும் தான் தந்தையும் மகனும் போட்டியிடுகின்றனர். அந்த வகையில் சென்னையில் ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின், திண்டுக்கல்லில் ஐ பெரியசாமி - ஐபி செந்தில்குமார் ஆகியோர் ஒரே குடும்பத்தில் இருந்து போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலையும் வெளியிட்டார். இந்த தேர்தலில் மொத்தம் 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.
அதேபோல் 59 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் தங்களது சொந்த சின்னங்களில் போட்டியிட உள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். இதன் மூலம் கூட்டணிக்குள் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இந்த முறை திமுக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் கல்வியறிவு பெற்றவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது. அதன்படி, திமுக வேட்பாளர்களில் 18 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் 7 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள், 15 பேர் மருத்துவர்கள் மற்றும் 125 பேர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர் பட்டியலில் பல முக்கிய தலைவர்கள் தங்களது பாரம்பரிய தொகுதிகளில் மீண்டும் போட்டியிட உள்ளனர். அதன்படி, கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுகிறார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட உள்ளார்.
அதேபோல் திருச்சுழி தொகுதியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரை மத்திய தொகுதியில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், திருவெறும்பூர் தொகுதியில் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மேலும் கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி, திருக்கோயிலூர் தொகுதியில் டாக்டர் பொன். கௌதமசிகாமணி, திருவண்ணாமலை தொகுதியில் எ.வ. வேலு, காட்பாடி தொகுதியில் துரைமுருகன், சைதாப்பேட்டை தொகுதியில் மா. சுப்பிரமணியன் ஆகியோர் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து துறைமுகம் தொகுதியில் பி.கே. சேகர்பாபு மற்றும் பெரம்பூர் தொகுதியில் ஆர்.டி. சேகர் ஆகியோரும் திமுக சார்பில் களம் காண உள்ளனர். இந்த பட்டியலில் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களுக்கும், புதிய தலைமுறைக்கும் சமநிலையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கட்சித் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் ஒரு சுவாரசியமும் இருக்கிறது. கடந்த தேர்தலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர்களில் தந்தை மகன் என பலர் போட்டியிட்டனர். ஆனால் இந்த தேர்தலில் சில முன்னாள் அமைச்சர்களின் மகன்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு இருப்பதால் தந்தைக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால் விதிவிலக்காக தமிழகத்தின் இரண்டு பகுதிகளில் மட்டும் தந்தையும் மகனும் போட்டியிடுகின்றனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் நிலையில், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். முக தலைமை குடும்பத்தை தவிர்த்து திமுக துணை பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ பெரியசாமி ஆத்தூர் தொகுதியில் போட்டியிடும் நிலையில், அவரது மகனும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐபி செந்தில் குமார் திண்டுக்கல்லில் போட்டியிடுகிறார்.
இதன் மூலம் தமிழகத்திலேயே இரு குடும்பத்தினர் மட்டுமே தந்தை மகன் என திமுக சார்பில் தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
-
Election Exclusive: மதுரை மத்தியில் தலைக்கு மேல் கத்தி.. குட்டையை குழப்பும் அழகிரி & கோ! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய திமுக! -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
Villivakkam: ஜவ்வாக இழுக்கும் தொகுதி பிரச்சனை! ஆளும் கட்சிக்கு நெருக்கடியா! ஆதவுக்கு பாசிட்டிவ்? -
திருமாவுக்கு போன் போட்ட பிரேமலதா.. கடலூர் விவகாரத்தால் கொந்தளித்த விசிகவினர்.. சர்ச்சையின் பின்னணி -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
"மொத்தம் 1.4 கோடி பேர்".. தமிழகத்தில் தெலுங்கு பேசும் வாக்காளர்கள் எத்தனை பேர்? முழு டேட்டா -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
விஜயை பார்க்க.. சாக்கடையில் 3 கிமீ நீச்சலடித்து சென்ற தவெக தொண்டர்.. கடைசியில் ஏமாந்துட்டாரே -
"அனல் பறக்கும் களம்.. ஆளை காணோம் விஜய்!" டூப் முதல் ஹாலோகிராம் வரை.. தவெகவின் 'சமாளிப்பு' அரசியல்! -
திமுக வேட்பாளருக்கே ‘ஸ்கெட்ச்சா? தொண்டாமுத்தூரில் யாரும் எதிர்பார்க்கலையே.. பின்னணியில் எஸ்பி வேலுமணி?












Click it and Unblock the Notifications