Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈசிஆரில் "இந்த" பிரபலத்தின் வீட்டில் ஜனநாயகன் ஷூட்டிங்! விஜய்யுடன் ஒரு போட்டோ கூட எடுக்கவிடலையாமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங் யார் வீட்டில் நடந்தது தெரியுமா? விஜய்யுடன் சொந்த வீட்டுக்காரரை ஒரு போட்டோ கூட எடுக்கவிடவில்லையாம் படக்குழு. படத்தின் டிரெய்லர் நேற்று வெளியான நிலையில் சமூகவலைதளங்களில் படத்தை பற்றிதான் பேச்சாக உள்ளது.

இதுகுறித்து செய்தி வாசிப்பாளராக இருந்த ரத்னா சிவராமன் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: Goat படத்தை தொடர்ந்து ஜனநாயகன் படத்தின் இரண்டு நாள் படப்பிடிப்பு எங்கள் ECR வீட்டிலே நடந்தது.

jananayagan vijay chennai

Shooting தொடங்குமுன் எல்லாம் சரியாக உள்ளதா என்று கேட்பதற்காக உள்ளே சென்று director ஓடு confirm செய்துவிட்டு திரும்பி பார்த்தால்.. Dining area-வில் அமைதியாக உட்கார்ந்திருந்தார் விஜய். என்னையும் மகளையும் பார்த்தவுடன் வாங்க வாங்க என்றார்!!

எங்கள் வீட்டிற்கு நீங்கள் வந்திருக்கீங்க ..நாங்க தான் உங்களை வரவேற்க வேண்டும் என்றேன். சின்னதாய் சிரித்தார். மகளின் CA படிப்பு பற்றி கேட்டு, கஷ்டமான course , hardwork பண்ணு என்றார்.

உங்க வீடு ரொம்ப peaceful ஆக இருக்கு. Garden ல இருக்குற சரஸ்வதி ரொம்ப அழகு என்றார். கால் மணிநேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்புறம் ,சில shots வாசலில் எடுத்த போது மேலேயிருந்து வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்த எங்களுக்கு அடிக்கடி hi சொன்னார். Last day bye bye சொல்லிட்டு காரில் ஏறினார்.

Crew ஒரு pic எடுக்கக் கூட விடவில்லை!! Monisha Blessy உடன் ஒரு click கிடைத்தது ஜனநாயகன் ஜனங்களின் நாயகன் ஆவாரா?? காலம் தான் பதில் சொல்லும்.. Best wishes to Jananayagan crew!! இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகன் திரைப்படம் 9ஆம் தேதி ரிலீஸாகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் பகவந்த் கேசரி என்ற படத்தின் ரீமேக் என பரவிய தகவலை இயக்குநர் வினோத் மறுத்தார்.

விஜய் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதுவரை நடந்த ஈரோடு கிழக்கு, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் தவெக போட்டியிடவில்லை.

இந்த நிலையில் விஜய், இன்னும் 4 மாதங்களில் வரும் சட்டசபை தேர்தலில் கவனம் செலுத்த போவதாலும் இனி அரசியலில் முழு நேரமும் ஈடுபட போவதாலும் "ஜனநாயகன்"தான் கடைசி படம் என அறிவித்தார்.

அந்த வகையில் ஜனநாயகன் என்ற படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் அதிகாலை காட்சிகளுக்கு அரசு அனுமதி மறுக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் முதல் காட்சி காலை 6 மணிக்கு திரையிடப்படுகிறது. இதனால் அங்கு சென்று முதல் காட்சியை பார்க்க தமிழக ரசிகர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+