Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vijay: நாளையும் விசாரணைக்கு அழைத்த சிபிஐ! Request செய்த விஜய்! பொங்கலுக்கு பிறகு..! CBI நிபந்தனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யிடம் நாளையும் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர். ஆனால் சென்னையில் கட்சி சார்பில் பொங்கல் விழா நடைபெறவுள்ளதால் அதில் கலந்து கொள்ள நாளை விசாரணையில் இருந்து விஜய் விலக்கு கோரினார். இதற்கு சிபிஐ நிபந்தனையுடன் ஒப்புக் கொண்டதால் அவர் நாளை சென்னை திரும்புகிறார்.

vijay pongal 2026 cbi 2026

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் இன்று காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இதற்காக விஜய் இன்று காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு ஒரு தனியார் விமானத்தில் புறப்பட்டார்.

இதையடுத்து டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 4-ல் விஜய் விமானம் தரை இறங்கியது. அது விஐபிக்கள் மட்டுமே பயன்படுத்தும் சிறப்பு விமான நிலையமாகும். இங்கு பொதுமக்கள் யாருக்கும் அனுமதி கிடையாது.

இந்த நிலையில் காலை 11.30 மணிக்கு டெல்லி லோத்தி சாலையில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு விஜய் வந்திருந்தார். அங்கு அவரிடம் சிபிஐ அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

விசாரணை முடிந்து மாலை 6.30 மணிக்கு வெளியே வந்தார். அதற்கு முன்னதாக நாளையும் அவரிடம் விசாரணை நடத்த வருமாறு சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு விஜய், சென்னையில் கட்சி சார்பில் "பொங்கல் விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே நாளை ஆஜராவதில் இருந்து விலக்கு அளியுங்கள்" என வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து சிபிஐ அதிகாரிகள், "நாளை விலக்கு அளிக்க வேண்டும் என்றால் இன்னொரு நாள் சம்மன் அனுப்பும் போது ஆஜராக வேண்டும்" என நிபந்தனை விதித்தனராம். இதற்கு விஜய் ஒப்புக் கொண்டதால் நாளை விசாரணையில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

இதனால் சற்று நிம்மதி பெருமூச்சு விட்ட விஜய், பொங்கல் கழித்து சிபிஐ எப்போது அழைத்தாலும் ஆஜராக வேண்டும் என்ற பதைபதைப்புடன் வெளியே வந்தார்.

அவர் காரில் அந்த அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார். அப்போது அவரது முகமே சரியில்லை, சற்று வாடியிருந்தது. சம்பிரதாயத்திற்காக சிரித்தபடியே செய்தியாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் கையசைத்தார். அது போல் காரின் முன்சீட்டில் அமர்ந்திருந்த ஆதவ் அர்ஜுனாவின் முகம் சரியில்லை. விஜய்யுடன் அமர்ந்திருந்த நிர்மல் குமாரும் கிட்டதட்ட வாட்டமாகவே இருந்தார்.

இந்த விசாரணையின் போது விஜய்யிடம், "ஏன் தாமதமாக கரூர் கூட்டத்திற்கு சென்றீர்கள், நீங்கள் பேச ஆரம்பித்ததும் ஆம்புலன்ஸ் வாகனம் கூட்டத்தில் வந்தது எப்போது, பொதுமக்கள் மயங்கி விழுந்தது உங்களுக்கு யாரால் எத்தனை மணிக்கு சொல்லப்பட்டது? கரூரில் மக்கள் இறந்து கொண்டிருந்த நிலையில் ஏன் அவசரமாக கிளம்பி சென்னை சென்றீர்கள் போன்ற கேள்விகளை சிபிஐ கேட்டதாக சொல்லப்படுகிறது. இது அனுமான கேள்விகள்தான் , உறுதியாக வேறென்னவெல்லாம் கேட்டார்கள் என தெரியவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+