For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செம மூவ்... குட்டிக் கிரகத்திற்கு விஸ்வநாதன் ஆனந்த் பெயர்!

Google Oneindia Tamil News

டெல்லி: முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்தின் பெயர், ஒரு குட்டிக் கிரகத்திற்குச் சூட்டப்பட்டுள்ளது.

கிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் உள்ளது. தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்படும் கிரகங்களுக்கு பிரபலங்களின் பெயர் சூட்டப்படுவது வழக்கமாகியுள்ளது.

Anand a planet now!

ஏற்கனவே பிராட்மேன், ரோஜர் பெடரர், ஜெஸ்ஸி ஓவன் என சில பிரபலங்களின் பெயர்கள் குட்டி கிரகங்களுக்கு சூட்டப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது இன்னொரு புதிய கிரகத்திற்கு விஸ்வநாதன் ஆனந்த் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

1988-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி ஜப்பானை சேர்ந்த கென்சோ சுசுகி என்பவரால் இந்த கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கிரகம் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையில் உள்ளது. இதுவரை எண்களை வைத்து மட்டும் அழைக்கப்பட்டு வந்த அந்த கிரகத்திற்கு இப்போது விஷியானந்த் 4538 என பெயரிட்டுள்ளனர்.

சர்வதேச வட்டாரத்தில் விஷி ஆனந்த் என்றுதான் செல்லமாக அழைக்கப்படும் ஆனந்த். அதே பெயரையே தற்போது சூட்டியுள்ளனர். இந்த செய்தி குறித்து ஆனந்த் வியப்பு தெரிவித்துள்ளார். தன்னை கலாய்க்கிறார்களோ என்று முதலில் நினைத்ததாக சிரித்தபடி கூறியுள்ளார் ஆனந்த்.

ஐந்து முறை செஸ் உலக சாம்பியனாக திகழ்ந்தவர் ஆனந்த். இவரது பெயரை இக்கிரகத்திற்கு வைக்கலாம் என்று பரிந்துரைத்தவர் சிறு கிரக மையங்களின் தலைவரான மைக்கேல் ருடென்கோதான். இவர் ஒரு செஸ் பிரியரும் கூட.

English summary
The moment Viswanathan Anand heard about it, he thought it must be a prank. A fairly good one for 1 April. An April fool’s joke. But then friends started calling and congratulating him. For having a small planet named after him. Of course, Anand didn’t believe it one bit. But then someone said, there’s something about it on Nasa’s website. So, Anand decided to check it for himself. And yes, it looked quite right. 4538 Vishyanand was there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X