ஜெயலலிதாவுக்கு தொண்டர்களிடமிருந்து பரிசுகள் வந்ததா? நீதிபதி கேள்வி
பெங்களூரு: ஜெயலலிதாவுக்கு சொந்தமான வெள்ளி பொருட்களுக்கு அதிகப்படியான மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக, சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையின்போது ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் தெரிவித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று 11வது நாளாக நீதிபதி குமாரசாமி விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பில் முதலில் வழக்கறிஞர் குமார் ஆஜராகினார். பிறகு டெல்லியில் இருந்து மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் வரவழைக்கப்பட்டு, ஜெயலலிதா சார்பில் ஆஜராகிவருகிறார். நாகேஸ்வரராவ், இன்று 6வது நாளாக வாதம் செய்தார்.

என் மனுதாரர், வழக்கு நடைபெறும் காலகட்டத்துக்கு முன்பே 1250 கிலோ வெள்ளிப் பொருட்கள் வைத்திருந்தார். அதை வருமானத்திற்கு உட்பட்டே வாங்கியிருந்தார். இந்த வெள்ளி பொருட்களுக்காக வருமானவரித் துறையில் தாக்கல் செய்து வரியும் கட்டியுள்ளார். ஆனால், லஞ்ச ஒழிப்புத் துறை இதன் மதிப்பை அதிகரித்துக் காண்பித்துள்ளது என்றார்.
இதனிடையே நீதிபதி குமாரசாமி, "எம்.ஜி.ஆருக்கு வழங்கியதுபோல் ஜெயலலிதாவிற்கு தொண்டர்கள் பரிசுப்பொருட்கள் வழங்கினார்களா?" என கேள்விகேட்டார். அதற்கு ஜெயலலிதா தரப்பு வக்கீல், கடந்த 1992ம் ஆண்டு ஜெயலலிதா ,பிறந்த நாளுக்கு பின்னர் எந்த பரிசு பொருளும் வரவில்லை என்றார்.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications