மோடியால் நாட்டை வழிநடத்த முடியாது.. அத்வானியை பிரதமராக்குங்கள்.. மமதா போர்க்கொடி
பிரதமர் பதவியில் இருந்து மோடி விலகவேண்டும் என மமதா பானர்ஜி போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
கொல்கத்தா: பிரதமர் மோடியால் இந்தியாவை வழிநடத்த முடியாது. அதற்கான முயற்சியில் அவர் தோற்றுவிட்டார் என்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அல்லது பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி போன்றோர் புதிய பிரதமராக வரவேண்டும் என மமதா பானர்ஜி போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் பெரும் பொருளாதார தேக்கநிலை உருவாகியுள்ளது. ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, மத்திய அரசை கடுமையாக சாடிவருகிறார்.

மேலும் தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம், பிரதமர் இல்லம் முன் மறியல் என பல்வேறு போராட்டங்களை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என மமதா போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
இதுதொடர்பாக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள மமதா, மோடிக்குப் பதிலாக, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜேட்லி அல்லது பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி போன்ற தேசியவாத சிந்தனை உள்ளவர்களை உடனடியாகப் பிரதமராக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டியது கட்டாயம் என்றும் குறிப்பிட்டுள்ள மம்தா பானர்ஜி, அவரால் இந்தியாவை வழிநடத்த முடியாது; அதற்கான முயற்சியில் தோற்றுவிட்டார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications