Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உதவிக்கு ஆள் வேண்டுமாம், வீட்டு சாப்பாடும் தேவையாம்.. சசிகலா கோரிக்கையை நிராகரித்த நீதிபதி

சிறையில் தனக்கு வி.ஐ.பிகளுக்கு ஒதுக்கப்படும் பல சலுகைகளை வழங்குமாறு, நீதிபதியிடம் சசிகலா கோரிக்கைவிடுத்திருந்தார். அவர் கோரிக்கைவிடுத்து நீதிபதி பல கோரிக்கைகளை ஏற்க மறுத்தார்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் தங்களுக்கு சிறையில் பல சலுகைகள் வழங்க கோரிய நிலையில் அதில் பலவற்றை நீதிபதி மறுத்துவிட்டார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை பகுதியில் இன்று தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த 47வது கூடுதல் குடிமை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை சிறையில் அடைக்க நீதிபதி அஸ்வத் நாராயண் உத்தரவிட்டார்.

These are not granted in the jail to VK Sasikala

மருத்துவ பரிசோதனை முடிந்ததும் அவரும், அவரின் அண்ணன் மனைவியும் சக குற்றவாளியுமான இளவரசியும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

முன்னதாக, சிறையில் தனக்கு வி.ஐ.பிகளுக்கு ஒதுக்கப்படும் பல சலுகைகளை வழங்குமாறு, நீதிபதியிடம் சசிகலா கோரிக்கைவிடுத்திருந்தார். அவர் கோரிக்கைவிடுத்து நீதிபதி ஏற்க மறுத்த சலுகைகள் இவைதான்:

தனியாக ஒரு ஏசி அறை, வீட்டு சாப்பாடு, ஜெயலலிதா அடைக்கப்பட்டிருந்த அறைக்கு அருகேயுள்ள அறை, உதவி செய்ய உதவியாளர், சிகிச்சைக்கு வெளியேயிருந்து டாக்டர் வர வேண்டும், யோகா செய்ய இடம் வேண்டும் ஆகிய கோரிக்கைகள் நீதிபதியாக நிராகரிக்கப்பட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+