மின்னல் தாக்கி உயிர் பிழைத்து... லாட்டரியால் கோடீஸ்வரராகி... இதோ உலகின் அதிர்ஷ்டக்கார மனிதர்!
ஒட்டாவா: கனடாவில் மின்னல் தாக்கியும் உயிருடன் தப்பியவருக்கு லாட்டரியில் கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் பரிசு விழுந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கனடா நாட்டின் நோவா ஸ்காட்டியா மாகாணத்தைச் சேர்ந்த பீட்டர் மெக்கேத்தி அதிர்ஷ்டக்கார மனிதர் என அறியப்படுகிறார்.
பீட்டர் மெக்கேத்தி நோவா ஸ்காட்டியாவில் கடை ஒன்றினை பல காலமாக நடத்தி வருகிறார்.

சொந்தக் கடையால் அதிர்ஷ்டம்:
சமீபத்தில் பீட்டர் தன்னுடைய கடையில் பணிபுரிபவருடன் சேர்ந்து மூன்று டாலருக்கு வாங்கிய லாட்டரி டிக்கெட்டில் அவருக்கு சுமார் நான்கு கோடியே தொண்ணூறு லட்ச ரூபாய் பரிசு விழுந்துள்ளது.

எக்ஸ்ட்ரா 10 ஆயிரம் டாலர்:
இது மட்டுமின்றி தன்னுடைய கடையிலேயே லாட்டரி டிக்கெட் வாங்கியதால் அதற்கு தனியாக பத்தாயிரம் டாலர்கள் பரிசு கிடைத்துள்ளது.

அதிர்ஷ்டக்கார குடும்பம்:
மேற்படி பீட்டரை 14 வயதில் மின்னல் தாக்கியது. அதிலிருந்தும் அவர் உயிர் தப்பியதால் அவர் உலகின் அதிர்ஷ்டகார மனிதர் என்று அழைக்கப்படுகிறார். இவரது மகளும் மின்னலின் தாக்கத்தில் மாட்டி உயிர் பிழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வில் ஈடுபட முடிவு:
தற்போது லாட்டரியில் இவ்வளவு பணம் பரிசாக கிடைத்ததால் கொஞ்ச காலத்துக்கு வேலையில் இருந்து ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார். அவருக்கு மிகவும் பிடித்த சமையல் மற்றும் மீன் பிடிப்பதில் நேரத்தை செலவிடப்போவதாக தெரிவித்துள்ளார்.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications