54 பயணிகளுடன் சென்ற இந்தோனேசிய விமானம் மாயம்.. தேடுதல் பணி தீவிரம்
ஜகார்த்தா: 54 பயணிகளுடன் சென்ற இந்தோனேசிய விமானம் ஒன்று பப்புவா மாகாணம் அருகே மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
பப்புவா தலைநகர் ஜெயபுராவில் இருந்து 54 பயணிகளுடன் டிரிகானா ஏர் ஏடிஆர் 42 என்ற விமானம் புறப்பட்டது. ஓக்சிபில் நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த விமானம் உள்ளூர் நேரப்படி இன்று மதியம் 3 மணியளவில் பப்புவா அருகே பறந்து கொண்டிருந்த போது ரேடாரில் இருந்து திடீரென மறைந்தது.

மாயமான விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாயமான விமானத்தில் 5 குழந்தைகள் மற்றும் 5 விமான ஊழியர்கள் உட்பட 54 பேர் இருந்தனர்.
விமானம் மாயமான தகவலை அந்நாட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார்.
விமானம் மாயமான பகுதியில் தற்போது மோசமான வானிலை நிலவுகிறது. கருமேகங்கள் சூழ்ந்து இருப்பதால் தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விமானம் மாயமான பகுதி மலைப்பகுதி ஆகும். எனவே மலைப்பகுதியில் விமானம் மோதி விழுந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில் அடுத்தடுத்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் பெரும் சோதனையைச் சந்தித்தன. இந்த நிலையில் இந்தோனேசிய விமானம் ஒன்று மாயமாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏர் ஏசியா விமானம் ஒன்று இந்தோனேசியாவின் சுரபயா நகரிலிருந்து கிளம்பி சிங்கப்பூருக்குப் போய்க் கொண்டிருந்தபோது, ஜாவா கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. அதில், 162 பேர் பலியானார்கள் என்பது நினைவிருக்கலாம்.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications