சேலத்தில் வர்ஷினிக்கு திருமணமான நபர் மீது காதல்! பெற்றோரை கலங்கடித்த போட்டோ! சித்தா மாணவி இறுதி நொடி
சேலம்: சேலம் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மாணவி சம்பவம் பெரும் அதிர்வலையை உண்டு பண்ணி வருகிறது.. மகளை தந்தையே விஷம் வைத்து கொன்றுவிட்டாரா? அல்லது மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாராவது இந்த கொடூரத்தை செய்திருப்பார்களா? என்ற குழப்பம் நடந்து வரும்நிலையில், அதுகுறித்த கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது..
சேலம் அடுத்த சித்தர்கோயில் அருகே செயல்பட்டு வரும் தனியார் ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த மாணவி வர்ஷினி (22), நேற்று காலை அவர் தங்கியிருந்த அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் வர்ஷினி
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பாரதிநகரை சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகளான வர்ஷினி, கல்லூரி அருகேயுள்ள நல்லாம்பட்டி நாயக்கன்பட்டியில் லட்சுமணன் என்பவரின் அப்பார்ட்மென்ட் வீட்டில், ரூம் எடுத்து எடுத்து தங்கி வந்தார்.
நேற்று காலை வர்ஷினி தன்னுடைய அறையில் உயிரற்ற நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை மேற்கொள்ள சென்றனர்..
அப்போது அந்த ரூம் வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்தது போலீசாருக்கு கடும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் சம்பவத்தன்று அவரது அப்பா வரதராஜன் மகளை பார்க்க சேலத்திற்கு வந்து சென்றதும், அதன்பிறகு வர்ஷினியின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டதும் விசாரணையில் முக்கிய திருப்பமாக அமைந்தது.
மகளின் சடலம்
இதுகுறித்து தகவலறிந்ததும் திருநெல்வேலியில் இருந்து வர்ஷினியின் அம்மா, நேற்றிரவு இரவு சேலம் வந்தார். மகளின் சடலத்தை பார்த்து கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் கலங்கடித்தது.
வரதராஜன் சாதாரண நெசவு தொழிலாளி... உஷாவுக்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணமான நிலையில் பிறந்த குழந்தை தான் வர்ஷினி... குழந்தையாக இருந்தபோதே அப்பா இறந்துவிட்டார்... அதன் பிறகுதான், உஷா வரதராஜனை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.
அப்போது வர்ஷினிக்கு நான்கு வயது. இந்த குழந்தையை தனது சொந்த மகளாகவே வளர்த்தார். உஷாவுக்கும் வரதராஜனுக்கும் வேறு குழந்தைகள் இல்லை. வர்ஷினியின் சான்றிதழ்கள் உட்பட அனைத்து ஆவணங்களிலும் தந்தையாக வரதராஜனின் பெயரே உள்ளது.
கண்ணில் பட்ட போட்டோ
கடந்த ஒரு மாதமாக வர்ஷினி வேறு ஒரு நபருடன் பழகி வந்தது பெற்றோருக்கு தெரிய வந்தது. அந்த நபருடன் வர்ஷினி எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்று வெளியானதும், அதை பார்த்து வரதராஜன் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அந்த நபர் யார் என்று விசாரித்ததில், அந்த நபர் திருநெல்வேலி வி.கே.புரத்தை சேர்ந்தவர் என்றும், திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்தது. இதனால் பெற்றோர் மேலும் அதிர்ச்சி அடைந்து மகளிடம் அறிவுரை சொன்னார்கள்.. அந்நபரின் பழக்கத்தை கைவிடும்படியும் சொன்னார்கள்..
நெல்லை பஸ் ஸ்டாண்டு
இது கடைசி வருட படிப்பு என்பதால், அது முடிந்ததுமே நல்ல மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்தனர். ஆனால் காதலிப்பவரைத்தான் திருமணம் செய்வேன் என வர்ஷினி உறுதியாக இருந்தார்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்காக தன்னுடைய சொந்த ஊரான நெல்லைக்கு சென்றுள்ளார் வர்ஷினி.. ஆனால் பஸ் ஸ்டாண்டில் இருந்து தன்னுடைய வீட்டிற்கு செல்லவில்லையாம்.. பிறகு நெல்லையில் இருந்து மீண்டும் சேலத்திற்கு நேற்று முன்தினம் வந்துள்ளார்..
வெளிப்புறம் கதவை தாழிட்டு
நேற்று காலை சேலம் வந்த நிலையில், சாயங்காலமே அப்பா வரதராஜன் சேலம் வந்தார். மகள் தங்கியிருந்த அறைக்கு சென்று சமாதானம் செய்துள்ளார். திருமணமான ஒருவரை திருமணம் செய்தால் வாழ்க்கை வீணாகிவிடும் என கெஞ்சியுள்ளார்.
ஆனால் அவர் விடாப்பிடியாக இருந்ததால் கோபமடைந்த வரதராஜன் திடீரென மகளை தாக்கி, அவரிடம் இருந்த செல்போனை எடுத்துக்கொண்டு, கதவை வெளிப்புறமாக தாழிட்டுவிட்டு சென்னைக்கு தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விஷயத்தை தன்னுடைய மனைவி உஷாவுக்கும் போனை போட்டு சொன்னாராம் வரதராஜன்..
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சின்னதங்கம் தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர். மாணவி வர்ஷினியின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு அவரது அம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் இன்னும் வரவில்லை.. அது வந்தால்தான் வர்ஷினி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டாரா அல்லது தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும் என போலீசார்.. வரதராஜனையும் தேடி கொண்டிருக்கிறார்கள்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications