Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பணம் கொடுத்தா வாங்கிக்கோங்க.. உங்க பணம்தான்.. வாங்கிகிட்டு காதுல விசில் ஊதி அனுப்புங்க.. விஜய்

Subscribe to Oneindia Tamil

சேலம்: தைரியம்.. தைரியம்தான் எல்லாவற்றிற்கும் ஒரு அடித்தளம். என் வீட்டில் மொத்தம் 8 கோடி பேர் இருக்காங்க. என்னோட தாய்நாடான தமிழ்நாடு தான் என்னோட வீடு. என் வீட்ல 8 கோடி உறுப்பினர்கள் இருக்காங்க.. பணம் கொடுத்தா வாங்கிக்கோங்க.. உங்க பணம்தான்.. பணம் வாங்கிகிட்டு காதுல விசில் ஊதி அனுப்புங்க என்று சேலம் கூட்டத்தில் விஜய் பேசி உள்ளார்.

இன்று விஜய் கூட்டத்தில் பேசுகையில்,எதில் நம்மை கிண்டல் கேலி செய்கிறார்களோ அங்கே இருந்துதான் ஜெயித்து காட்ட வேண்டும் என்ற உத்வேகம் வரும். எனக்கு அனுபவம் இல்லை என்று சொல்கிறார்கள்.. மக்கள் பணத்தை கொள்ளையடித்ததை தவிர இவர்களுக்கு வேறு என்ன அனுபவம் இருக்கிறது.. மக்களின் பணத்தை எடுத்ததை தவிர இவர்களின் அனுபவம் என்ன

நான் நல்ல அரசியல் செய்ய வந்திருக்கிறேன். யாரையும் அழிக்க விரும்பவில்லை. யாரையும் அழிக்க நான் வரவில்லை. என்னை மாதிரி சொந்தமாக கட்சி தொடங்கி 1 சதவிகிதம் வாக்கு உங்களால் வாங்க முடியுமா? அதற்கு திராணி இருக்கிறதா? என்னை போல தனியாக கட்சி ஆரம்பித்து.. அரசியல் செய்ய முடியுமா? இரண்டு வருடத்தில் முதன்மை சக்தியாக மாறி இருக்கிறோம்

30 சதவிகிதம் வாக்கு சதவிகித்தோடு இருக்கிறோம். உங்களால் இப்படி செய்ய முடியுமா? கொள்கை அரசியல்தான் எங்கள் அரசியல். உங்களை போல கொள்ளை அரசியல் செய்ய மாட்டேன். மக்களை நேசிக்கும் , அரசியல், மக்களை பாதுகாப்பாக அன்பாக நடத்தும் அரசியல்தான் என் அரசியல். அந்த அரசியலை என்னால் கொடுக்க முடியும். செஞ்சு காட்டுறேன். , என்று விஜய் பேசி உள்ளார்.

இந்த நிலையில் இக்கூட்டத்திற்கு அனுமதி சீட்டு பெற்றவர்கள் மட்டுமே வர வேண்டும் என்றும், அனுமதி சீட்டு இல்லாதவர்கள், பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னதாக தெரிவித்து இருந்தார். இதனால் 5000 பேர் மட்டுமே இன்று கூட்டத்தில் கலந்து கொண்டனர் கடைசியாக கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி ஈரோட்டில் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை நடத்திய விஜய், அதன்பிறகு மாமல்லபுரத்தில் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்திலும், தமிழக வெற்றிக்கழகத்தின் மூன்றாவது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் மட்டுமே பங்கேற்றார்.

tamil nadu assembly elections 2026 Vijay tvk vijay

5 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு

இஇந்த ஆலோசனைக் கூட்டத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து விஜய் ஆலோசிக்க உள்ளார்.

கூட்டத்திற்கான பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளில் கட்சித் தலைமை மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது:

அடையாள அட்டைகள்: கூட்டத்தில் பங்கேற்கும் 5,000 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு QR கோட் வசதியுடன் கூடிய பிரத்யேக அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. முன்னதாக ஈரோடு மக்கள் சந்திப்புக்கு பிறகு இரண்டு மாதங்கள் கழித்து சேலத்தில் மக்கள் சந்திப்புக்கு தவெகவினர் அனுமதி கேட்டனர். ஆனால் வழிகாட்டு நெறிமுறை விதிகளை சுட்டிக்காடி போலீசார் அனுமதி தரவில்லை. இதையடுத்து, மக்கள் சந்திப்பு கூட்டத்தை நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமாக மாற்றிய தவெகவினர், 5 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி பெற்றனர்.

கட்டுப்பாடுகள்: கட்சியின் சாதாரண தொண்டர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ கூட்ட அரங்கிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ வசதி: அவசரத் தேவைகளுக்காக மருத்துவக் குழுவினருடன் கூடிய 10 ஆம்புலன்ஸ்கள் மைதானத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+