தென்காசி குருவன்கோட்டையில் முக்கு பொங்கல்.. 100 வருடங்களாக ஆலங்குளம் தெருக்களில் நடக்கும் ஆச்சரியம்
தென்காசி: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ளது குருவன்கோட்டை கிராமம். இப்பகுதி மக்கள் ஆண்டுதோறும் மார்கழி மாத கடைசி செவ்வாய்கிழமை அன்று முச்சந்தி பொங்கல் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு காரணம் என்ன தெரியுமா? முக்கு பொங்கல் என்றால் என்ன தெரியுமா? அதைபற்றி இங்கு விரிவாக பார்ப்போம்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அமைந்துள்ள குருவன்கோட்டை கிராமம், தமிழ்நாட்டிலேயே தனித்துவமான ஒரு பாரம்பரியத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.

இந்த கிராமத்தில் சுமார் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மற்ற ஊர்களைப் போல தை பொங்கல் அன்று பொங்கல் வைப்பதற்கு பதிலாக, கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக மார்கழி மாதத்தின் மூன்றாவது செவ்வாய்க்கிழமை அன்று "முக்கு பொங்கல்" என்ற வினோதமான பொங்கல் விழாவை இம்மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
தென்காசி குருவன்கோட்டை கிராமம்
இந்த நாளில், கிராமத்தில் உள்ள ஒவ்வொரு தெருவின் முக்கு பகுதிகளிலும் பொதுமக்கள் ஒன்று திரண்டு விழாவை நடத்துவார்கள்.. முதலில் ஊரின் மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
பிறகு கோவில் பூசாரி, ஒவ்வொரு தெருவாக சென்று அங்கு பொதுமக்கள் வைத்திருக்கும் கரும்பு, மஞ்சள் குலை, வெற்றிலை, பாக்கு ஆகியவற்றுடன் விளக்கு ஏற்றி பூஜை செய்வார்கள்.. அதன் பிறகு, ஒரு தெருவுக்கு ஒரு பொங்கல் பானை என்ற முறையில் அடுப்பு அமைத்து பானை வைக்கப்படும்..
முக்கு பொங்கல் கொண்டாட்டம்
பூசாரி பானையில் பச்சரிசி இட்டு சென்ற பிறகு, அந்த தெருவை சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டுவந்த பச்சரிசியை சேர்த்து பொங்கல் வைப்பார்கள்.. பொங்கல் பானை பொங்கி வரும் நேரத்தில், குடும்பத்தினர் ஒன்றாக நின்று பெண்கள் குலவை இட்டு வழிபடுவார்கள்..
இந்த கிராம மக்கள் கடைப்பிடித்து வரும் இந்த முக்கு பொங்கலுக்குப் பின்னால் ஒரு வரலாறும் உள்ளது... அதாவது சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த கிராமத்தில் காலரா நோய் பரவி, பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஆலங்குளம் 100 வருட ஆச்சரியம்
அப்போது, மாரியம்மன் கனவில் தோன்றி, ஒவ்வொரு தெரு முக்கு பகுதிகளிலும் வடக்குத்தி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட வேண்டும் என அருளியதாக நம்பப்படுகிறது... அந்த வழிபாட்டுக்கு பிறகே, கிராமத்தில் உள்ள அனைவருக்கும் நோய் தீர்ந்ததாகவும், அதன்பிறகு பெரிய தொற்று நோய்கள் எதுவும் கிராமத்தில் ஏற்படவில்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த முக்கு பொங்கலின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி, அதிகாலை 2 மணியளவில் ஊரின் 4 திசைகளிலும் 4 ஆடுகள் பலியிட்டு வழிபாடு நடத்தப்படுமாம்.. இந்த விழாவிற்காக வெளியூரில் திருமணம் ஆன பெண்களை விருந்துக்கு அழைத்து, குடும்பமாக சேர்ந்து பொங்கல் வைப்பதும் வழக்கமாக உள்ளது. இவ்வாறு, இன்றளவும் குருவன்கோட்டை கிராமத்தில் முக்கு பொங்கல் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பனை ஓலைகள் - நாட்டுப்பாடல்
அதுமட்டுமல்ல, முக்கு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு குருவன்கோட்டை கிராமத்திலிருந்து வெளியூர்களில் திருமணமான பெண்களை விருந்துக்கு வர வைத்து குடும்பமாக நின்று பொங்கல் இடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்தவகையில், நேற்றைய தினம் இந்த முக்கு பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.. இரண்டு தெருக்கள் சந்திக்கும் தெரு முனையில், பல குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து முக்கு பொங்கலை கொண்டாடினார்கள்.. முச்சந்தியில் சுவாமி படங்களை வைத்து அதன் முன்பு அடுப்பு கூட்டி பனை ஓலைகளால் பொங்கல் வைத்து நாட்டுபாடல் பாடி வழிபாடு செய்தனர்..
வீடு தோறும் வேப்பிலை, மஞ்சள் பால்
இதற்காக தெருக்கள் முழுவதும் மாவிலை, வேப்பிலை தோரணங்கள் கட்டப்பட்டன. வீட்டு வாசலில் ஒரு மண் குவளையில் மஞ்சள் கலந்த பாலை ஊற்றி துணியால் மூடி கட்டி தொங்க விட்டனர்... இந்த குவளையை அடுத்த ஆண்டு முக்குமுறிச்சி பொங்கல் விழாவின்போது அவிழ்ப்பார்களாம்.. மேலும், தொற்று நோய்கள் அண்டாத வண்ணம், கிராம மக்கள் தங்களது வீட்டு முன்பு மஞ்சள் பால், வேப்பிலை தோரணங்கள் கட்டிவிட்டுள்ளனர்..
100 ஆண்டுகளாக பொங்கல் அன்று பொங்கல் வைக்காமல் வினோதமாக முன்னரே முக்கு பொங்கல் கொண்டாடும் குருவன்கோட்டை கிராமத்தின் வழிபாடுதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications