Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போயஸ் கார்டனில் ரஜினியை சந்திக்கிறார் மலேசிய பிரதமர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வந்துள்ள மலேஷிய பிரதமர் முகமது நஜீப் பின் துன் அப்துல் ரசாக் நடிகர் ரஜினிகாந்தை இன்று சந்தித்துப் பேசவுள்ளார்.

இந்தியாவில் 5 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மலேஷிய பிரதமர், முதல்கட்டமாக சென்னை வந்துள்ளார். அவருடன் அவரது மனைவி ரோஸ்மா மன்சூரும் வந்துள்ளார். இரண்டு நாட்கள் சென்னையில் தங்கவுள்ள அவர்கள், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார்.

malaysian pm meet rajinikanth today meet on rajinikanth

இந்தப் பயணத்தின் போது ரஜினியை சந்திக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து மலேசிய அதிகாரிகள் ரஜினியை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். நஜீபும், அவரது மனைவியும் ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று காலை சந்தித்து பேசக்கூடும் என்று கூறப்படுகிறது.

மலேசியாவில் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள், ரசிகைகள் உள்ளனர். உலக அளவில் ரசிகர்களை ஈர்த்த கபாலி படத்தின் பெரும்பகுதி மலேஷியாவில் படமாக்கப்பட்டது. அப்போது ரஜினியை மலேசிய பிரதமர் ரஜாக் சந்தித்திருந்தார். இந்த நிலையில் சென்னை வந்துள்ள ரஜாக் ரஜினிகாந்தை சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+